search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "touristis"

    • சுற்றுலா பயணிகள் வனத்துறையின் தனி வாகனத்தில் அழைத்து செல்லப்படுவார்கள்
    • கடந்த 2 மாதமாக அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை.

    கோவை 

    கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றலா தளங்களில் கோவை குற்றால அருவி ஒன்றாகும். இங்கு உள்ளூர், வெளியூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    அருவியில் குளித்து மகிழ்ந்தும், தொங்கு பாலத்தில் நடந்து சென்றும் இயற்கையை ரசித்து சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் தனி வாகனத்தில் அைழத்து செல்லப்படுவார்கள்.

    அதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை குற்றாலத்தில் அவ்வபோது வெள்ள பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனை வனத்துறையினர் கண்காணித்து நீரின் வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்படும்.

    கடந்த சில மாதங்களாக கோவை குற்றாலத்தில் அவ்வபோது பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்படும் போது எல்லாம் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது.

    இவ்வாறு கடந்த ஜூலை மாதம் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதமாக அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை.

    இந்நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து, கோவை குற்றாலம் அருவிக்கு நீர் வரத்து சீராக உள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை என தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனை அடுத்து நேற்று (27-ந் தேதி) முதல் கோவை குற்றாலம் திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    மேலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை என்ற கால அட்டவணையின் அடிப்படையில் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 10 மணிக்கு அனுமதிச் சீட்டு பெற்று, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மதியம் 1 மணிக்குள் வெளியேற வேண்டும். இந்நிலையில் நேற்று கோவை குற்றலாத்தில் 375 பெரியவர்களும், 30 குழந்தைகளும் என, மொத்தம், 405 சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இன்றும் அங்கு ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர். 

    • 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
    • வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

    தற்போது மழை குறைந்து, பகல் நேரங்களில் மிதமான வெயிலும், இரவில் நீர்ப்பனியும் நிலவி வருகிறது.இந்த இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

    இந்த ஆண்டு முதல் கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கடந்த 2 மாதங்களாக இடைவிடாது மழை கொட்டியது. மேலும் கடும் குளிரும் காணப்பட்டதால், சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடியது.

    கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை விடப்பட்டதால் கடந்த 3 தினங்களாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    இதனால் லவ்டேல் சந்திப்பு முதல் படகு இல்லம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதைத் தொடா்ந்து போலீசாா் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனா்.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

    கடந்த 3 நாள்களில் மட்டும் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 20,000 சுற்றுலாப் பயணிகளும், ரோஜா பூங்காவுக்கு 8,000 சுற்றுலாப் பயணிகளும், ஊட்டி படகு இல்லத்துக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்த நிலையில், பைக்காரா படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

    அதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

    ×