search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists flocked"

    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
    • மேட்டூர் அணை பூங்காவிலும் காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனியப்பனை தரிசனம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்ைட மாநி லங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுல ாபயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    ஏற்காட்டில் குவிந்தனர்

    அதன்படி சனிக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். குடும்பம், குடும்பமாகவும், காதல் ஜோடிகளும் அதிக அளவில் வாகனங்களில் ஏற்காட்டிற்கு வந்தனர்.

    இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உள்பட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக படகு குழாமில் குடும்பத்துடன் உற்சாகமாக சவாரி சென்று மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் தங்கும் விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி காட்சி அளித்தன. இதனால் லாட்ஜ் உரிமையா ளர்கள் மற்றும் வியாபாரி கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    உயிரியல் பூங்கா

    இேத போல குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள குரங்குகள், மயில்கள், மான்கள், பாம்புகள், பறவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர்.சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை பூங்காவிலும் காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனியப்பனை தரிசனம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். அங்குள்ள் பாம்புகள், முதலைகளையும் பார்வை யிட்டனர். அணையின் பவள விழா கோபுரத்திற்கும் சென்று அணையின் அழகை பார்த்து ரசித்தனர். காவிரியி லும் குடும்பத்துடன் உற்சாக மாக ள குளித்து மகிழ்ந்தனர்.

    • வார விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.
    • இரவு நேரத்தில் குளிரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதால் கொடைக்கானலுக்கு வரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலை சுற்றிப்பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை வருடம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். இங்கு மிதமான காலநிலையும், இயற்கை எழில் கொஞ்சும் அழகும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

    தற்போது இடை நாட்களில் பெய்த மழை குறைந்த நிலையில் மீண்டும் கடும்குளிர் தொடங்கியுள்ளது.இருப்பினும் கொடைக்கானலுக்கு நடுங்கும் குளிரிளும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கிறது. வார விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது வாடிக்கையாகி உள்ளது.

    மற்ற நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதனால் பல இடங்களில் வாகன நெரிசல், தங்கும் விடுதிகள் நிரம்பி வழிவது, கட்டண உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் மாலை வேளையில் வெயில் சற்று தணிந்து குளிரின் தாக்கம் தொடங்குகிறது.

    பின் இரவு வேளையில் அதிகரிக்கிறது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயில், அவ்வப்போது மேக கூட்டம் இவையெல்லாம் இதமான சூழலாக பகல் நேரத்தை மாற்றுகிறது. இரவில் தலைகீழாக நிலைமை மாறி உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இந்த குளிர் சீசன் ஜனவரி முடியும் வரை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பகலில் இதமான வெப்பநிலையும், இரவு நேரத்தில் குளிரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதால் கொடைக்கானலுக்கு வரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • தீபாவளி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இதமான கால நிலை நிலவி வருகிறது. இதனால் தீபாவளி விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒரு முக்கிய தலமாக கோத்தகிரி கொடநாடு காட்சி முனை இருந்து வருகிறது.

    இங்கு இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கர்நாடக மாநில மலைததொடர் மற்றும் பள்ளத்தாக்குகள், பவானிசாகர் அணை காட்சி, தெங்குமரஹாடா காட்சி போன்ற முனைகளும், இதமான காலநிலைக்கேற்ப நல்ல சீதோஷ்ண நிலையை அனுபவிக்கலாம்.

    இதனால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளான கர்நாடக, கேரளா, பிற மாநில, மாவட்ட மக்கள் குவிந்து இயற்கை அழகினையும், சுற்றுலா தலங்களையும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    ×