என் மலர்
நீங்கள் தேடியது "Trending"
- லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் ‘டிரெண்டிங்’கில் இருக்கின்றன.
- திருமணத்திற்கு தயாராகும் ‘டீன்-ஏஜ்’ பெண்களும், ‘லெஹங்கா’வை விரும்புகிறார்கள்.
'லெஹங்கா அணிவது ஒரு கலை'… ஆரம்பமே உற்சாகமாக பேசினார் காஸ்டியூம் டிசைனர், அனாமிகா. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த அனாமிகாவிற்கு, 52 வயதாகிறது. வட இந்தியாவின் பிரபல காஸ்டியூம் டிசைனராக இவர், லெஹங்கா உடைகளை வடிவமைப்பதிலும், தைப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட்.
பாலிவுட் நட்சத்திரங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு, பெரும்பாலும் இவரே லெஹங்கா உடைகளை வடிவமைத்து கொடுப்பார். இவர், லெஹங்கா உடைகள் பற்றியும், அதை அணியும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
''வட இந்தியாவில் பிரபலமான லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் 'டிரெண்டிங்'கில் இருக்கின்றன.
சினிமா நட்சத்திரங்களை தாண்டி, திருமணத்திற்கு தயாராகும் 'டீன்-ஏஜ்' பெண்களும், 'லெஹங்கா'வை விரும்புகிறார்கள். தாலி கட்டும் நிகழ்வின்போது பட்டுப்புடவைகளையும், திருமண வரவேற்பிற்கு 'லெஹங்கா' உடைகளையும் அணியும் கலாசாரம், தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்துவிட்டது'' என்றவர், லெஹங்கா நிற தேர்வில் கவனமாக இருக்க சொல்கிறார்.
''காலம் காலமாக தென்னிந்திய பட்டுப் புடவைகளுக்கு வட இந்திய பெண்களும், வட இந்திய லெஹங்காக்களுக்கு தென்னிந்திய பெண்களும் ஆசைப்படுவது புதிது இல்லை. ஆனால் எதை எப்படி அணிய வேண்டுமோ அதை அப்படிதான் அணிய வேண்டும்.
எப்படி முகூர்த்தப் பட்டுப்புடவைகளில் 'பெய்ஜ்', 'பீச்', 'பேஸ்டல்' போன்ற நிறங்களில் அணியும்போது அவ்வளவு பிரைட் 'லுக்' கொடுக்காதோ அதேபோல் லெஹங்கா அணிவதிலும் சில விதிமுறைகள் இருக்கிறது.
நம்மூர் பெண்கள் பெரும்பாலும் 'டஸ்கி', 'டார்க் பியூட்டிகள்'. அந்த பெண்கள் லெஹங்கா அணியும்போது நிறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிளிப்பச்சை, அடர்ந்த சிவப்பு, மெரூன் சிவப்பு பயன்படுத்தலாம். சிக்னல் லைட் சிவப்பு நிறத்தை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது.
அதேபோல் அடர்ந்த பஞ்சு மிட்டாய் நிற 'பிங்க்' மாதிரியான ரேடியம், லேசர் லைட் நிறங்கள் அறவே கூடாது. கரும்பச்சையிலேயே கொஞ்சம் மங்கலான பச்சை, பிரவுன் நிறம் இவைகளையும் தவிர்ப்பது நல்லது'' என்னும் அனாமிகா, லெஹங்கா ஸ்டைலிங் குறித்து மேலும் விவரித்தார்.
''பொதுவாகவே தென்னிந்திய பெண்களுக்கு இடைப்பகுதி கொஞ்சம் நீளம் குறைவுதான். அதேபோல் பின்பக்கமும் கொஞ்சம் பருமனாக இருக்கும். அடிப்படையிலேயே புடவைக்கும், தாவணிக்குமான உடல்வாகு தென்னிந்தியப் பெண்களுக்கு உண்டு.
மார்பு, இடைப்பகுதிகள் கொஞ்சம் பப்ளியாக இருக்கும். லெஹங்காவை அந்த அழகை 'ஹைலைட்' செய்யும் மாதிரியில் டிசைன் செய்து கொண்டால் அழகாக இருக்கும். உங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.
அடுத்ததாக லெஹங்கா அணிய வேண்டும். ஆனால் இடுப்பு அவ்வளவாக தெரியக்கூடாது என்பது தென்னிந்திய பெண்களின் விருப்பம். அந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு லெஹங்காவையே தாவணி ஸ்டைலில் போட்டுக்கொள்வதுதான்.
அடுத்த தீர்வு இடைப்பகுதியில் கொஞ்சம் லேஸ் அல்லது வலை மாதிரியான துணி கொடுத்து மேலும் அழகு சேர்க்கலாம்.
சராரா ஸ்டைலில் லெஹங்கா அல்லது கிராண்ட் ஓவர் கோட் போலவும் தைக்கலாம்'' என்றவர், லெஹங்காவை தென்னிந்திய பெண்கள் மிக குறைவாக பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.
''வட இந்திய பெண்கள், ஒருமுறை வாங்கிய லெஹங்காவை குறைந்தது 20 நிகழ்ச்சிகளுக்காவது அணிவது உண்டு. ஆனால் தென்னிந்திய பெண்கள், வரவேற்பு நிகழ்ச்சியில் அணிவதோடு சரி, அதை ஓரங்கட்டிவிடுகிறார்கள். அதனாலேயே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் லெஹங்கா வேண்டாம் என கூறிவிடுகிறார்கள். ஒருமுறை பயன்படுத்த எதற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று கோபப்படுகிறார்கள். அதிலும் முகூர்த்தங்களுக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கூட நல்ல பட்டுப்புடவை கிடைத்துவிடும்.
ஆனால் லெஹங்காக்களுக்கு ரூ.30 ஆயிரமாவது செலவழித்தால் தான் கிராண்ட் 'லுக்' கிடைக்கும். அப்படி செலவு செய்து வாங்கும், லெஹங்காக்களை குறைந்தது 10 விழாக்களுக்காவது அணிய பழகிக் கொள்ளுங்கள். அப்போதுதான் பெரியவர்களும், லெஹங்காக்களை ஆதரிப்பார்கள்'' என்றவர், லெஹங்கா உடை அணியும்போது செய்யக்கூடிய மேக்கப் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
''பாரம்பரிய புடவைக்கு உரிய மேக்கப் வேறு. லெஹங்காவிற்கு உரிய மேக்கப் வேறு. தென்னிந்திய புடவை என்றாலே 'பேபி பிங்க்' அல்லது 'ஸ்கின் டோன்' லிப்ஸ்டிக்குகளுடனான லைட் மேக்கப்தான் போட வேண்டும். லெஹங்கா என்றால் கொஞ்சம் இண்டோ-வெஸ்டர்ன் டார்க் நிற லிப்ஸ்டிக், மினுமினுக்கும் ஐ-ஷேடோஸ், பிளஷ், குளோ இப்படி எல்லாமே பளிச்சென்று மேக்கப் செய்யலாம். அப்போதுதான், லெஹங்காவிற்கு மேட்சாக இருக்கும்.
அணிகலன்களை பொறுத்தவரை, லெஹங்காக்களுக்கு ஒரே ஒரு கிராண்ட் நெக்லெஸ் மற்றும் கிராண்ட் தோடு போதும்'' என்றவர், ''அடுத்த 10 வருடங்களில், சுடிதார் போலவே, லெஹங்காவும் தமிழகத்தில் சர்வ-சாதாரண உடையாக மாறியிருக்கும்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
- மகேஷ்பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் என்ற படம் 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றியை பெற்றது.
- அவர்கள் இருவரையும் நோக்கி ரசிகர்கள் குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு இணைந்து நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டனர்.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. சமீப காலமாக ஏராளமான படங்கள் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து வருகிறார். மகேஷ்பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் என்ற படம் 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றியை பெற்றது.
படத்தில் மகேஷ்பாபுவுடன் 'குர்ச்சி மடத்த பெட்டி' என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா மற்றும் சதீஷ் ஆகியோர் தனியார் கல்லூரியின் கல்சுரல்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அடுத்ததாக ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றனர்.
அவர்கள் இருவரையும் நோக்கி ரசிகர்கள் குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு இணைந்து நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டனர்.
இதையொட்டி அந்த பாடலுக்கு சில நிமிடங்கள் இணைந்து நடனம் ஆடினர். அப்போது ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயனுக்கு நடன ஸ்டெப்களை கற்றுக் கொடுத்தார். கல்லூரி மாணவர்களின் வேண்டுதலுக்கு இணங்க மாணவர்களுக்காக கல்லூரி முதல்வரிடம் விடுமுறை கேட்டார். கல்லூரி மாணவர்களின் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்திற்காக ஏற்கனவே பிருத்விராஜ் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளித்தார்.
- இவ்வார இறுதியில் ஆடு ஜீவிதம் படம் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால், கே.ஆர். கோகுல் ஜிம் ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். வெளியாகி மூன்று நாட்களிலே படம் 50 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்பொழுது வசூலில் 70 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.
இவ்வார இறுதியில் ஆடு ஜீவிதம் படம் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமலு , மஞ்சும்மல் பாய்ஸ் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ரூ. 100 கோடி வசூலை குவித்த படங்கள் வரிசையில் ஆடு ஜீவிதம் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.
ஆடு ஜீவிதம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் வரும் ஒரு நிர்வாண காட்சிக்காக நடிகர் பிருத்விராஜ் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை ஒளிப்பதிவாளர் கே.எஸ். சுனில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
இப்படதிற்காக ஏற்கனவே பிருத்விராஜ் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளித்தார். அதுவும் நிர்வாண காட்சிற்காக பிருத்விராஜ் மூன்று நாள் பட்டினி கிடந்து நடித்து இருக்கிறார். அந்த காட்சி எடுக்கும் கடைசி நாளில் தண்ணீர் கூட அவர் குடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான சாப்பாடு மற்றும் தண்ணீர் இல்லாமல் 2 வருடங்களுக்கு மேல் பாலைவனத்தில் இருந்து வாழ்ந்த ஒரு மனிதன் எப்படி இருப்பானோ அதை கச்சிதமாக திரையில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக உடலை வருத்தி நடித்து இருக்கிறார் பிருத்திவிராஜ். இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்று பலன் கிடைத்து இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்
- கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார்
டாடா படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கவின் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். டாடா படத்திற்கு அடுத்து ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலின் காட்சி முன்னோட்டம் நேற்று வெளியானது.
இதற்கடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கத்தில் கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார், தற்பொழுது அடுத்ததாக கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஆண்ட்ரியா நெகட்டிவ் ஷேட் கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாத இறுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்
- ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுதடுத்து உயிரழந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். அச்சோகத்தில் இருந்து மீண்டுவரமால் இருந்த திரையுலகம் இப்போழுது அடுத்து மீண்டும் ஒரு உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62.

விக்ரம் -சூர்யா நடிப்பில் வெளியான'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.உன்னை நினைத்து படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்ர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், சிறுசேரியில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது.
- இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடி வரை வசூலை ஈட்டியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் புஷ்பா -2 படத்தின் டீசர் ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்போவதாக படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தண்ணா, விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் போன்ற பல நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த போஸ்டரில் சலங்கையிட்ட கால் ஒன்று நடனம் ஆடுவதுப்போல் இடம் பெற்றுள்ளது. புஷ்பா-2 திரைப்படம் எந்த கதைச்சூழலில் நடக்கப்போகிறது என தெரியவில்லை. இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷங்கர் தாதா சிந்தாபாத், வாண்டட், ரவுடி ராத்தோர், தபங் போன்ற பல ஹிட்டான படங்களை இயக்கினார்.
- ’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்தியன் மைக்கில் ஜேக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிணாமத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
காதலன், லவ் பர்ட்ஸ், மின்சார கனவு , காதலா காதலா போன்ற பல ஹிட்டான படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். பின் தெலுங்கு திரையுலகில் "நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தனா." என்ற படத்தின் மூல இயக்குனராக அறிமுகமாகினார். இப்படத்தின் ரீமேக்தான் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் திரிஷா நடித்து வெளியான உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் திரைப்படம்.
பின் அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி படத்தை இயக்கினார். மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் ஒரு மாறுப்பட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருப்பார்.
போக்கிரி படத்திற்கு பிறகு இந்தி திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார் ஷங்கர் தாதா சிந்தாபாத், வாண்டட், ரவுடி ராத்தோர், தபங் போன்ற பல ஹிட்டான படங்களை இயக்கினார்.
தற்பொழுது மீண்டும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்று 51- வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரபுதேவாவிற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படக்குழுவினர் வாழ்த்து கூறி போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பின் சினு இயக்கத்தில் ப்ளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா மற்றும் வேதிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் பேட்ட ராப். படக்குழுவினர் பிரபுதேவாவிற்கு வாழ்த்து கூறி சமூக வலைத்தளங்களில் போஸ்டரை பதிவிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது.
- இந்த ஆண்டோடு வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைகிறது.
தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இத்திரைப்படம் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் இந்த படத்தில் கபடி வீரராக நடித்து இருப்பார். மதுரையில் கபடி போட்டிக்கு செல்லும் போது திரிஷாவை பிரச்சனையில் இருந்து காப்பாற்றி சென்னைக்கு தன்னுடன் அழைத்து வருகிறார். பின் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டிலே பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? என்பதே கில்லி படத்தின் கதைக்களமாகும்.
மக்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் கில்லி. படத்தின் நகைச்சுவை காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இடம்பெற்றிருக்கும், வெள்ளி அண்டா நகைச்சுவை காட்சி, நான் தான் ஓட்டேரி நரி பேசுறேன், என்ற நகைச்சுவை காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டுகளாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.
விஜயின் வெகுளித்தனமான கதாப்பாதிரமும், திரிஷாவின் அப்பாவித்தனமான முக பாவனையும் இப்படத்தின் கூடுதல் கவனத்தை பெற்றது. படத்தின் பாடல்களைப் பற்றி கூறியே ஆகவேண்டும் . வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜூனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.
ஏப்ரல் 14 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம். இந்த ஆண்டோடு வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதையொட்டி இப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்
- புதுவிதமான படங்களை இயக்குவதும் அதில் நடிப்பதும் முயற்சி செய்வதும் இவரின் வழக்கம்.
நக்கலும் நையாண்டித்தனமுமாக பேசுவதில் வல்லவர் பார்த்திபன். புதிய பாதை மற்றும் ஹவுஸ் ஃபுல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இவர் இயக்கிய புதிய பாதை சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.
இதுவரை பார்த்திபன் 15 படங்களை இயக்கியுள்ளார்., 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். புதுவிதமான படங்களை இயக்குவதும் அதில் நடிப்பதும் முயற்சி செய்வதும் இவரின் வழக்கம்.
பார்த்திபன் இயக்கத்தில் 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே படம் முழுக்க நடித்திருப்பார். இதில் இந்திய சினிமாவில் ஒரு புது முயற்சியாகும். இப்படத்தை இயக்கி நடித்தற்காக மிக பெரிய பாராட்டை பெற்றார் பார்த்திபன்.
பின் 2022 ஆம் ஆண்டு இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார். இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டீன்ஸ்' படத்தை இயக்கிருக்கிறார். இத்திரைப்படம் ஒரு திகில் திரில்லர் படமாக அமைந்துள்ளது. படத்தின் டீசர் சென்ற வாரம் வெளியிடப்பட்டது.
படத்தின் டிரெயிலர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை இயக்குனர் மணிரத்னம் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்
- சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா.
சென்னையில் விளம்பர மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர் சஞ்சனா நடராஜன். இவர் இறுதிச்சுற்று படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0, பாலாஜி மோகனின் வலைத் தொடரான 'அஸ் ஐம் சப்ரிங் பிரம் காதல்' ஆகியவற்றில் நடித்து புகழடைந்தார்.
ஜகமே தந்திரம் படத்தில் 'ரக்கிட்ட ரக்கிட்ட' பாடலுக்கு தனுஷ் உடன் இணைந்து நடனமாடி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதோடு ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தில் எஸ். ஜே. சூர்யா விற்கு இணையாக நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள இயக்குனர் பிஜய் நம்பியார் இயக்கிய போர் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் சஞ்சனா. அதில் இவர்கள் இருவருக்கும் இடையிலான லிப்லாக் முத்த காட்சிகள் மற்றும் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிகவும் வைரலாக பேசப் பட்டது.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் சஞ்சனா, இந்தக் கோடை வெயிலுக்கு இதமாக குளுகுளு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். புகைப்பட கலைஞரான ஹ்ரிஷி, சஞ்சனாவை அழகாக படம்பிடித்துள்ளார்.

இந்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் சஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சஞ்சனா, கடற்கரையில் வெள்ளை நிற ஆடையில் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
- அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் டிரெண்டாகும் நயன்தாராவின் புகைப்படங்கள்தமிழ்திரை உலகில் முன்னணி கதாநாயகியான வலம் வரும் நயன்தாரா, திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
அங்கு மின் விளக்கில் அலங்காரம் செய்யப்பட்ட மரத்தின் கீழ் இருவரும் இணைந்து நின்றபடி எடுத்த புகைப்படம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷிவனுடன் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை குட் டைம்ஸ் என்று பதிவிட்டு நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகர்ந்துள்ளார்.
பிறந்த நாள் நிகழ்ச்சியில், நயன்தாரா குழந்தைகள் கேக் சாப்பிடும் வீடியோவையும் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜீவா நடிப்பில் வெளிவந்த ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.
ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.
பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.
3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.
இதற்கிடையே, அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.
அந்த வகையில், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் தமிழ்த்திரை துறையில் அறிமுகமானார்.
இந்நிலையில், பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு இயக்குனர் அட்லீ-யின் "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதைதொடர்ந்து, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து தமிழ் படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீவா நடிப்பில் வெளிவந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.