search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trent Bridge Test"

    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை லைவ் ஆக வைத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. பும்ராவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. அடில் ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்கள் விளையாடியதால் இந்தியா நேற்று வெற்றியை ருசிக்க முடியாமல் போனது.



    இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். 5-வது பந்தில் ஆண்டர்சன் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 317 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆகவே இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 3-வது நாள் காலை முழுவதும் விராட் கோலி மற்றும் புஜாரா விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடினார்கள். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்க 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.



    இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்னுடனும், புஜாரா 56 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்று காலை விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தது. தற்போது வரை இந்தியா 362 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND #ViratKohli #Rahane
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலையில் லேசாக மழை பெய்ததால் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. ரிஷப் பந்த், அஸ்வின் களம் இறங்கினார்கள்.



    92-வது ஓவரை பிராட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பந்த் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பிராட் வீசிய 94-வது ஓவரில் அஸ்வின் ஸ்டம்பை பறிகொடுத்தார். அஸ்வின் 17 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஷமியை 3 ரன்னிலும், பும்ராவை டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேற்ற இந்தியா முதல் இன்னிங்சில் 94.5 ஓவரில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய வீரர்களின் இடத்திற்கு என்னால் உத்தரவாதம் அளிக்க இயலாது. வெற்றி ஒன்றே நோக்கம் என விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில் நாளை 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோதான் இந்தியாவில் தொடரை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள முடியும். இதனால் இந்தியா வெற்றிக்காகவே விளையாடும்.

    முதல் இரண்டு டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங் பந்திற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டும். வீரர்கள் அவரவர்கள் வரிசையில் களம் இறங்குவார்கள் என்பதற்கு உத்தரவாதம் வழங்க இயலாது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘வீரர்கள் அந்தந்த வரிசையில் களம் இறங்குவார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்க இயலாது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்தோம். இதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே ஆப்சன் மட்டுமே உள்ளது.



    ஒவ்வொரு முறையும் 100 ரன்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்பது முக்கியமானது என விவாதித்தோம். எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், பயந்தால் நாம் செய்ய வேண்டிய வேலை சரியாக நடக்காது. ஆடுகளத்தில் சரண்டர் ஆகி விடக்கூடாது என்பது வீரர்களிடையே வலியுறுத்தப்பட்டது.

    முதலில் வீரர்கள் 40 முதல் 50 ரன்கள் அடிப்பது முக்கியமானது. தனிப்பட்ட வீரர்களின் எதிர்பார்ப்பில் இருந்து நாம் மீள வேண்டும். அதன்பின் டிரென்ட் பிரிட்ஜ் சூழ்நிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி விளையாடலாம்’’ என்றார்.
    நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்-யில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 9 போட்டிகளில் 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களும் வீழ்த்தி இந்தியாவை படுதோல்வியடையச் செய்தார்.

    அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 553 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இன்னும் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். மெக்ராத் 563 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    3-வது டெஸ்ட் நாளை மறுநாள் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடக்கிறது. டிரென்ட் பிரிட்ஜ் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு இதுவரை ஆண்டர்சன் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும். அப்படி என்றால்தான் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால், ஆண்டர்சன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ஆண்டர்சன் 2003-ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 விக்கெட்டும், 2008-ல் நியூசிலாந்திற்கு எதிராக 7 விக்கெட்டும், 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 11 விக்கெட்டுக்களும், 2013-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 10 விக்கெட்டும், 2017-ல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 5 வி்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
    ×