search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trinidad"

    கரிபியன் பிரீமியர் லீக் இறுதி போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. #CPLFinal #GAWvTKR
    டிரினிடாட்:

    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட கயானா அமேசான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது. கயானா சார்பில் லூக் ரோன்சி அதிகபட்சமாக 44 (35) ரன்களை குவித்தார். ட்ரின்பகோ சார்பில் கரி பியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    148 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பகோ அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக தெனேஷ் ராம்டின், பிரண்டன் மிக்கல்லம் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்களை குவித்திருந்த நிலையில், 7-வது ஓவரை கிறிஸ் கிரீன் வீசினார். அதை எதிர்கொண்ட மெக்கல்லம் பந்தை தூக்கி அடிக்க டெல்போர்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய கொலின் முன்ரோ தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 12-வது ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீச 24 (30) ரன்களுடன் தெனேஷ் ராம்டின் வெளியேறினார். அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்ற கொலின் முன்ரோ 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 68 (39) ரன்களை சேர்த்தார். டேரன் பிராவோ காயம் காரணமாக 4 ரன்களில் ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார்.
    கடைசியில் 17.3 வெற்றி இலக்கை எட்டிய ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்றது. #CPLFinal #CPL2018 #GAWvTKR 

    போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 226 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. #WIvSL #FirstTest
    போர்ட் ஆப் ஸ்பெயின்:
     
    வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். தனது முதல் இன்னிங்சில் 
    154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இலங்கை அணி வெற்றி பெற 453 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. குசால் மெண்டிஸ் 94 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் குசால் மெண்டிஸ் சதமடித்தார். ஆனால் 102 ரன்களில் குசால் மெண்டிஸ் அவுட்டானதும் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் சென்றது. அதற்கு பின்னர் வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இதனால் இலங்கை அணி 83.2 ஓவரில் 226 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டும், தேவேந்திர பிஷு 3 விக்கெட்டும், ஷானோன் காபிரியல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, 226 ரன்கள் வித்தியாசத்தில்  வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனான ஷேன் டாவ்ரிச் தேர்வு செய்யப்பட்டார். #WIvSL #FirstTest
    போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 277 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #WIvSL #FirstTest
    போர்ட் ஆப் ஸ்பெயின்:
     
    வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். தனது முதல் இன்னிங்சில் 
    154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இலங்கை அணி வெற்றி பெற 453 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. குசால் மெண்டிஸ் 94 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில், கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள இலங்கை 277 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா? அல்லது 7 விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறுமா? என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #WIvSL #FirstTest
    போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்துள்ளது. #WIvSL #FirstTest
    போர்ட் ஆப் ஸ்பெயின்:
     
    வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் பாவெல் 38 ரன்களும், ஷாய் ஹோப் 44 ரன்களும், ரோஸ்டன் செஸ் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. ஷேன் டாவ்ரிச் 46 ரன்களுடனும், தேவேந்திர பிஷு ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

    இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷேன் டாவ்ரிச் பொறுப்பாக சதமடித்து அசத்தினார். அவரை தவிர மற்றவர்கள் நிலைக்காததால், வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

    இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாக, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.  

    மூன்றாம் நாள் ஆட்டத்தில் தினேஷ் சண்டிமால் 44 ரன்களும், நிரோஷன் டிக்வெலா 30 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர், தேவேந்திர பிஷு ஆகியோர் தலா ஒரு  விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. கேத் பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். பிராத்வைட் 16 ரன்னிலும், ஸ்மித் 20 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கிரன் பாவெல் பொறுப்பாக ஆடி அரை சதமடித்தார்.

    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. பாவெல் 64 ரன்களுடனும், ஷேன் டாவ்ரிச் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டும், சுரங்க லக்மா, ரங்கனா ஹெராத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். தற்போதைய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை அணியை விட 360 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது. #WIvSL #FirstTest
    போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை எடுத்துள்ளது. #WIvSL #FirstTest
    போர்ட் ஆப் ஸ்பெயின்:
     
    வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் கிரெய்க் பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர்.

    இருவரும் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய பாவெல் 38 ரன்களும், ஷாய் ஹோப் 44 ரன்களும், ரோஸ்டன் செஸ் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

    தொடர்ந்து இறங்கிய விக்கெட் கீப்பர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. ஷேன் டாவ்ரிச் 46 ரன்களுடனும், தேவேந்திர பிஷு ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஷேன் டாவ்ரிச் பொறுப்பாக சதமடித்து அசத்தினார். அவரை தவிர மற்றவர்கள் நிலைக்கவில்லை.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்துள்ளது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

    இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் குசால் மெண்டிஸ், குசால் பெராரா விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய மேத்யூசும் 11 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.  

    வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமர் ரோச், காப்ரியல், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு  விக்கெட் எடுத்தனர். #WIvSL #FirstTest
    போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களை எடுத்துள்ளது. #WIvSL #FirstTest
    போர்ட் ஆப் ஸ்பெயின்:
     
    வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் கிரெய்க் பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர்.

    இருவரும் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய பாவெல் 38 ரன்களும், ஷாய் ஹோப் 44 ரன்களும், ரோஸ்டன் செஸ் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

    தொடர்ந்து இறங்கிய விக்கெட் கீப்பர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. ஷேன் டாவ்ரிச் 46 ரன்களுடனும், தேவேந்திர பிஷு ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

    இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால், ரங்கனா ஹெராத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். #WIvSL #FirstTest
    ×