என் மலர்
நீங்கள் தேடியது "TVK flag"
- நடிகர் விஜய் இன்று காலை திடீரென சீரடி புறப்பட்டு சென்றார்.
- விஜய் தனது தாயாருக்காக சென்னை அம்பத்தூரில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். சமீபத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு செப்டம்பர் 23-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை விஜய் மும்முரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று காலை திடீரென சீரடி புறப்பட்டு சென்றார். தனி விமானத்தில் அவர் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.
விஜய் தனது தாயாருக்காக சென்னை அம்பத்தூரில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.
- தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
சென்னை:
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். விஜய் கட்சி கொடியில் மேலும் கீழும் ரத்த சிவப்பு நிறமும், மைய பகுதியில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றுள்ளன. கொடியின் நடுவில் வாகைப்பூவும் அதன் இருபுறமும் காலை உயர்த்திய நிலையில் 2 போர் யானைகளும், 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
விஜய் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை, தங்கள் கட்சியின் சின்னம் என்றும், எனவே அதனை நீக்க வேண்டும் எனவும் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுத்தது.
இந்த நிலையில் கட்சி கொடியில் யானை இடம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளது.
அரசியல் கட்சிகளின் கொடிகளில் இடம்பெறும் சின்னங்கள், உருவங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ கொடுப்பது இல்லை. கட்சிக்கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஆனால் கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.
- மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.
த.வெ.க முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.
மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.
முதல் மாநாடு நினைவாக, 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் நட திட்டமிடப்பட்டுள்ளது. புயல், மழையை தாங்கும் வகையில் விண்ட் வெலாசிட்டிக்கு ஏற்ப கொடிக்கம்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
8 அடி ஆழத்தில் கொடிக்கம்பத்தின் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறது. கொடியின் பீடம் 120 சதுர அடி அளவில் அமைக்கப்படுகிறது.
தொடர்ந்து, வரும் 27ம் தேதி மாநாடு தொடங்கும் முன், திடலின் எதிரே 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார்.
- தொடர்ந்து நேற்றும், இன்றும் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
- பொது இடத்தில் கொடியேற்ற தானே போலீஸ் அனுமதி பெறவேண்டும்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் சுமார் 36 கிராம பஞ்சாயத்துகளும் அது சார்ந்த கிராமங்களும் உள்ளன.
இந்த பகுதியில் ஊராட்சிக்கு ஒரு இடத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கொடி கம்பம் நட்டு கொடியேற்று விழா நடத்த கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டனர்.
இதையடுத்து இதற்கு அனுமதி கோரி கடந்தவாரம் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் கொடியேற்று விழா நடத்த அனுமதி கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதுபற்றி நிர்வாகிகள் கேட்டதற்கு இன்று, நாளை என்று தாமதப்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கொடியேற்றுவது என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் கந்தர்வகோட்டை ஒன்றிய த.வெ.க. தலைவர் அருண்பிசாத், செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் அய்யாதுரை ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கொடிகளை ஏற்றினார்கள். தொடர்ந்து நேற்றும், இன்றும் கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
இதுபற்றி நிர்வாகிகள் கூறுகையில், தமிழக வெற்றிக்கழக கொடி ஏற்று விழாவுக்கு முறைப்படி அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால் போலீசார் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தனர்.
பொது இடத்தில் கொடியேற்ற தானே போலீஸ் அனுமதி பெறவேண்டும். வீடுகளில் ஏற்ற அனுமதி தேவை இல்லையே என எண்ணி எங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள், உறுப்பினர்கள் வீடுகளில் கட்சி கொடியை ஏற்றியுள்ளோம். இதுவரை சுமார் 2 ஆயிரம் வீடுகளில் கொடி ஏற்றப்பட்டு உள்ளது என்றனர்.