என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVK leader"

    • தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
    • 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார்.
    • நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது.

    அப்போது, விஜய் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளை மறைமுகமாக தாக்கி பேசினார்.

    இதைதொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த நவம்பர் 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, "விஜய் சொல்வது கொள்ளை அல்ல கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை" என்றார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

    இந்நிலையில், சீமானால் பாதிக்கப்பட்டதாக கூறி வரும் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், சீமானை கடுமையாக விமர்சித்து கூறியுள்ளார்.

    வீடியோவில் கூறப்பட்டுள்ளாதவது:-

    என்ன மிஸ்டர் சீமான். சாபம் கொடுக்குறீங்க விஜய் அண்ணாவை லாரி மோதி செத்துற போறனு சொல்றீங்க சாபம் விடுறதுக்கு தீங்க உத்தமரா? பப்ளிசிட்டி பண்ணிட்டு சுத்துற நீங்கதான் கூமுட்டை.

    முதல்ல உங்க கட்சியில இருக்குற ஓட்டையை அடையுங்க.. நிறைய ஓட்டை இருக்கு. உங்க கட்சியில நடக்குற ஊழலை சரி பண்ணனுங்க. திருச்சி சூர்யா உங்ளோட நிர்வாண வீடியோவ வெளியிட்டு மானத்தை வாங்கப்போகிறாராம். அதைப்போய் பாருங்க..

    அண்ணன் விஜய் ஆகட்டும்; அல்லது திமுக ஆகட்டும்; கொள்கை ரீதியாக தானே தவறு பண்ணி இருக்காங்க அப்படின்னு நீங்க தான் சொல்லிட்டு இருக்கீங்க. கொள்கை ரீதியா தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா, எங்கள மாதிரி பெண்களோட வாழ்க்கைய சீரழிச்சு எங்கள நடுரோட்டில் விட்ட நீங்க எது அடிச்சு சாவமாட்டீங்க?

    தி.மு.க.,வுக்கும், விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ணனும்ன்னு நல்லாவே தெரியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக-வின் கொள்கைகளையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் அரசியல் பாதிப்பு அவர்களுக்கு தான்.
    • முதலில் சீமான் பாஜகவின் "பி" டீம் என்றீர்கள். தற்போது, விஜய் பாஜகவின் "பி" டீம் என்கிறீர்கள்.

    பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த வாரம் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார் நண்பர் விஜய். அவர் சில தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கார். ஆனால் இந்த தீர்மானங்களை பார்க்கும்போது நீங்கள் திமுகவுடன் சேர்ந்திடலாம் என்று தோன்றுகிறது.

    காரணம், திமுக இத்தனை நாட்களாக சில விஷயங்களை கிளி பிள்ளைப்போல் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அதையே இப்போது விஜய் சொல்கிறார். பாஜக சொல்லிக் கொண்டிருப்பதையே அவர் சொல்லி வருகிறார். இதை விரிவாக எடுத்துக்கூற எதுவும் எல்லை.

    திமுக-வின் கொள்கைகளையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதால் அரசியல் பாதிப்பு அவர்களுக்கு தான்.

    பாஜகவுக்கு எத்தனை பி டீம்ங்க.. தாங்காது கட்சி. முதலில் சீமான் பாஜகவின் "பி" டீம் என்றீர்கள். தற்போது, விஜய் பாஜகவின் "பி" டீம் என்கிறீர்கள்.

    விஜய் எப்போ ஒன்றிய அரசு என்று சொன்னாரோ அப்போவே அவர் உங்க சித்தாந்தம்தான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் உரையாற்றினார்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனன் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நூல் வெளியீட்டு விழா மேடையில் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது.

    தமிழகத்தின் வெற்றிக்கு பெரியார் கொள்கைகளே காரணம். அப்பேத்கரின் கனவை தமிழகத்தில் நிறைவேற்றியவர் திருமாவளவன்.

    அம்பேத்கர் பற்றி தலித் தலைவர்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தது போய், தற்போது தலித் அல்லாத விஜய்யும் பேசுகிறார்.

    புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து வருகிறார். தமிழக அரசியலில் புதிய வரலாறு உருவாகக்கூடிய மேடையாக இது இருக்கும்.

    இந்தியாவில் காங்கிரஸ் வலிமையாக இருந்தபோது முதல்முறையாக தமிழகம் வென்று காட்டியது.

    மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை.

    2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது.

    கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதியை போல ஊழல் எதிர்ப்பை ஏன் யாரும் முன்னெடுக்கவில்லை.

    ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஏன் நாம் கேட்க கூடாது. பங்கு கேட்பதை இனி முதுகுக்கு பின்னால் இல்லை, நெஞ்சுக்கு நேராகவே கேட்போம்.

    சாதியை அடிப்படையாக கொண்ட தேர்தல் அரசியல் தான் இங்கு பெரிய பிரச்சினை.

    தமிழகத்தில் பாஜகவுக்கு 2 சதவீதம் தான் ஓட்டு, இங்கு மத பெரும்பான்மைக்கு ஆதரவு கிடையாது. மத பெரும்பாபன்மை என்று பாஜகவை விமர்சிக்கும் நாம், அதை தான் ஜாதியை வைத்து இங்கு செய்கிறோம்.

    மலம் கலந்த தண்ணீர் தொட்டி விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

    25 சதவீதம் மட்டுமே வாக்குகளை வைத்துக்கொண்டு எப்படி பெரிய கட்சி என்று சொல்ல முடியும். கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியுமா ? இதை கேட்டால் சங்கி என்று கூறுவார்கள்.

    சாதியை ஒழிப்பதற்காக தான் திருமாவளவனோடு நான் கைகோர்த்தேன்.

    பெரியால் கொள்கையும், அம்பேத்கர் கொள்கையும் இணைந்து பயணித்தால் புதிய மாற்றம் ஏற்படும்.

    ஏழைகள் ஒன்று சேர்ந்தால் புதிய மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல் நகரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.
    • வேங்கைவயல் சம்பவம் குறித்து விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதில் பதிலடி அளித்துள்ளார்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இதில், சிறப்பு விருந்தினரக பங்கேற்ற த.வெ.க தலைவர் விஜய், நூலை வெளியிட்டார்.

    பிறகு, விஜய் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய விஜய், 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் என்றார்.

    2026 தேர்தல் கூட்டணி கணக்கு அனைத்தும் மைனஸாகும் என விஜய் பேசிய நிலையில் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும், வேங்கைவயல் சம்பவம் குறித்து விமர்சித்த விஜய்க்கு அமைச்சர் ரகுபதில் பதிலடி அளித்துள்ளார்.

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

    கூட்டணியில் தப்பு கணக்கு போடும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. அரசியலில் எந்த பிளஸூம் மைனஸ் ஆக வாய்ப்பு இல்லை.

    நாங்கள் மன்னர் ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சி தான் நடத்துகிறோம்.

    வாரிசு என்ற அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கவில்லை.

    வேங்கைவயல் விவகாரம் குறித்து தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.

    வேங்கைவயல் விவகாரத்தில் எந்த அமைச்சரோ, எம்எல்ஏவோ தலையிடவில்லை.

    சீமான் உடன் நேரடியாக மோத திமுகவுக்கு எந்த பயமுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் மன்னராட்சியா நடைபெறுகிறது ? மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் ஆள முடியும்.

    திமுகவை எதிர்ப்போர் மண்ணாகி விடுவார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மன்னராட்சியா நடைபெறுகிறது ? மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் ஆள முடியும்.

    நேற்று முளைத்தவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். திமுகவை எதிர்ப்போர் மண்ணாகி விடுவார்கள்.

    திராவிடம் என்ற வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாத ஒரு கூட்டம் கண்டபடி பேசுகிறது.

    தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டியில் கட்சி ஆரம்பித்துள்ளார் ஒருவர். மக்களுக்காக அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
    • கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனப் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

    மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

    ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.

    இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×