என் மலர்
நீங்கள் தேடியது "tweet"
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள வழக்கத்துக்கு மாறான ஒரு பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. #MajesticGirLion #GirLion #Moditweet
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகிறார்.

புகைப்படக்கலையிலும் ஆர்வம் கொண்டவரான பிரதமர் மோடி, கிர் பகுதியில் உள்ள வனச்சரகர் திபக் வாகர் எடுத்த இந்த புகைப்படத்தை கலையார்வத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாக சிலர் கருதும் அதேவேளையில், பல எதிர்க்கட்சிகள் தன்னை பாராளுமன்ற தேர்தலில் முற்றுகையிட்டுள்ள நிலையில் ‘எதையும் வெல்லும் குஜராத் சிங்கமாக நான் இருப்பேன்’ என்பதை மறைமுகமாக அவர் உணர்த்தியுள்ளதாகவே பலரும் கருதுகின்றனர். #MajesticGirLion #GirLion #Moditweet
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகிறார்.
அவ்வகையில், குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனவிலங்கு காப்பகத்தில் ஒரு சிங்கம் மரத்தின்மீது ஏறி நிற்கும் புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ள மோடி, ‘கம்பீரமான கிர் சிங்கம், அருமையான புகைப்படம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படக்கலையிலும் ஆர்வம் கொண்டவரான பிரதமர் மோடி, கிர் பகுதியில் உள்ள வனச்சரகர் திபக் வாகர் எடுத்த இந்த புகைப்படத்தை கலையார்வத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாக சிலர் கருதும் அதேவேளையில், பல எதிர்க்கட்சிகள் தன்னை பாராளுமன்ற தேர்தலில் முற்றுகையிட்டுள்ள நிலையில் ‘எதையும் வெல்லும் குஜராத் சிங்கமாக நான் இருப்பேன்’ என்பதை மறைமுகமாக அவர் உணர்த்தியுள்ளதாகவே பலரும் கருதுகின்றனர். #MajesticGirLion #GirLion #Moditweet
ட்விட்டர் சமூக வலைதளத்தில் தவறான ட்விட்களுக்கு புகார் அளிக்க புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. #Twitter
ட்விட்டரில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ட்விட்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தற்சமயம் ட்விட்களை புகார் அளிக்கும் போது புதிய மெனு திறக்கும். இதில் பயனர்கள் ட்விட் பற்றி அதிகளவு விவரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு பிரச்சனையை விரிவாக புரிந்து கொள்ள முடியும்.
புதிய வசதியை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. பிரச்சனைக்குரிய ட்விட்களை மிகவேகமாக கண்டறிவதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இன்று முதல் பயனர் எதிர்கொள்ளும் ட்விட்கள் பற்றி அதிகளவு விவரங்களை தெரிவிக்க முடியும்.
We want to move faster in reviewing reported Tweets that share personal information. Starting today, you'll be able to tell us more about the Tweet you are reporting. pic.twitter.com/quJ2jqlYIt
— Twitter Safety (@TwitterSafety) March 7, 2019
இத்துடன் ரிப்போர்ட் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெரிவிக்க முடியும். முன்னதாக பயனர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க ட்விட்டர் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இவற்றில் பலரது குற்றச்சாட்டுகள் டாக்சிங் ஆகும். டாக்சிங் என்பது ஒருவரின் அனுமதியின்றி அவரது விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தாகும். இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தீங்கு ஏற்படுத்த காரணமாக அமையும்.
ட்விட்டரில் கருத்து சுதந்திரம் மற்றும் கேலி கிண்டல்களை வித்தியாசப்படுத்துவதில் ட்விட்டர் சிரமப்படுகிறது. அந்த வகையில் புதிய அம்சம் மூலம் அவற்றை எதிர்கொள்ள ட்விட்டர் முயன்று வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விளம்பரப்படுத்த ஐபோன் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. #Samsung
சாம்சங் மற்றும் ஐபோன்களிடை அவ்வப்போது நடைபெறும் அக்கப்போர் இம்முறை ட்விட்டரில் ஆரம்பித்து இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் மூலம் ஏற்கனவே சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், மற்றொரு சாம்சங் அக்கவுண்ட் ஐபோன் மூலம் ட்விட் பதிவிடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த முறை சாம்சங் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்த சாம்சங் இம்முறை எதுபோன்ற நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
சாம்சங் மொபைல் நைஜீரிய அக்கவுண்ட் ட்விட்டர் கணக்கில் சாம்சங் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான விளம்பர வீடியோ ஐபோன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பிரபல யூடியூபரான MKBHD தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பதிவிட்டு இருக்கிறார்.
Might as well add "Twitter police" to my bio at this point 🤦♂️ pic.twitter.com/DRlrXl7bak
— Marques Brownlee (@MKBHD) December 2, 2018
விவகாரம் ட்விட்டரில் சூடுப்பிடித்த நிலையில், சாம்சங் மொபைல் நைஜீரிய ட்விட்டர் அக்கவுண்ட் சில மணி நேரங்களுக்கு டி-ஆக்டிவேட் செய்யப்பட்டு பின் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட சாம்சங் அதிகாரிகள் தான் காரணம் என தெரிகிறது.
சமீபத்தில் ரஷ்யாவுக்கான சாம்சங் விளம்பர தூதர் செனியா சோப்சாக் பொதுவெளியில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. பிரபல தொலைகாட்சி தொகுப்பாளரான செனியா சோப்சாக் ஐபோன் X பயன்படுத்திய வீடியோ தொலைகாட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சாம்சங் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டது. #Samsung #iPhone
ட்விட்டர் சமூக வலைதளத்தில் நீங்கள் பதிவிட்ட பழைய ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். #Twitter #socialmedia
ட்விட்டர் துவங்கப்பட்ட காலத்தில், இந்த வலைதளம் பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் தளமாக இருக்கும் போல என்ற கருத்து பரவலாக பரவியிருந்தது.
பின் படிப்படியாக ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ட்விட்டர் பயன்பாடுகளில் அந்நிறறுவனம் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
ட்விட்டர் பயன்படுத்த துவங்கிய காலக்கட்டத்தில் ஒரே சமயத்தில் தொடர்ந்து அதிகப்படியான ட்விட்களை பதிவிட்டு, தற்சமயம் அவை அர்த்தமற்றதாக உணர்கிறீர்களா?
ட்விட்டரில் நீங்கள் பதிவிட்ட ட்விட்களை ஒரே சமயத்தில் அழிப்பது சிரமமான காரியமாக தெரிகிறதா, கவலை வேண்டாம். நீங்கள் பதிவிட்ட ட்விட்களை இனியும் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளீர்களா?
அப்படியெனில் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். சமூக வலைதளங்களில் இருந்து சற்று தள்ளியிருக்கவோ அல்லது சில காலம் தனிமைப்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்களா. அப்படியெனில் உங்களது ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க பல்வேறு சேவைகள் இருக்கின்றன.
ட்விட்டர் டைம்லைனில் 3200 ட்விட்கள் மட்டுமே தெரியும் என்றாலும், உங்களது பழைய ட்விட்களை சர்ச் கன்சோலில் இருந்து தேடினால் அவை கிடைக்கும்.

பழைய ட்விட்களை பேக்கப் செய்வது
உங்களது அனைத்து ட்விட்களையும் அழிக்க நினைக்கும் பட்சத்தில், அவற்றை டவுன்லோடு செய்து பேக்கப் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் டவுன்லோடு செய்யும் சிப் ஃபைல் அனைத்து ட்விட்கள் மற்றும் ரீட்விட்களையும் கொண்டிருக்கும்.
உங்களின் ட்விட்டர் ஆர்ச்சிவ் ஃபைலை டவுன்லோடு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:
1) முதலில் ப்ரோஃபைல் படத்தை கிளிக் செய்து செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்களை இயக்க வேண்டும்
2) கீழ் புறம் ஸ்கிரால் செய்து பக்கத்தின் கீழ் பகுதியில் இருக்கும் Request your archive ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
3) இனி உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதில் உங்களது விவரங்கள் இருக்கும் டவுன்லோடு செய்யக்கூடிய ஃபைலாக இடம்பெற்றிருக்கும்

ட்விட்டெலீட் (TweetDelete) சேவையை கொண்டு உங்களின் அனைத்து ட்விட்களையும் அழிக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் பதிவிடும் ட்விட்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து போக செய்ய முடியும். எனினும் மூன்றாம் தரப்பு சேவை என்பதால் சமீபத்தில் பதிவிட்ட 3200 ட்விட்களை மட்டுமே அழிக்க முடியும்.
உங்களது எதிர்கால ட்விட்களை அழிக்க குறைந்த பட்சம்: ஒரு வாரம், இரண்டு வாரங்கள், ஒரு மாதம், இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு வருடம் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ட்விட்டெலீட் உங்களின் அக்கவுன்ட்டை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை சரிபார்க்கும். ட்விட்டர் செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்கள் சென்று இதற்கான அனுமதியை மாற்றியமைக்கலாம்.

ட்விட்டர்இரேசர் (TwitterEraser) கொண்டு உங்களது 3200 ட்விட்களையும் அழிக்க முடியும். எனினும் 6.99 டாலர்கள் செலுத்தி அப்கிரேடு செய்யும் போது அதிகப்படியான ட்விட்களை அழிக்கலாம்.
உங்களது அனைத்து ட்விட்டர் ஆர்ச்சிவ்களையும் ட்விட்டெலீட்டில் அப்லோடு செய்ய வேண்டும். பின் சர்ச் ஃபில்ட்டர் மூலம் ட்விட்களை தேதி, ஹேஷ்டேக் மற்றும் குறியீட்டு சொல் கொண்டு தேடலாம்.
பல்வேறு ட்விட்களை அழிக்கும் போது, அந்த மாற்றங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட மாட்டாது. ட்விட்டரில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்விட்களை மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும், இந்த எண்ணி்க்கை ஆயிரங்களை கடக்கும் பட்சத்தில் அதற்கான நேரம் அதிகமாகும்.
ட்விட்களை அழிக்கும் போது அவற்றை பொது மக்கள் தேடும் போது கிடைக்காமல் போகும். எனினும் நீங்கள் அழிக்கும் ட்விட்களை ட்விட்டர் சர்வெர்களில் இருக்கும். சட்ட ரீதியிலான தேவைகளுக்காக அவை தேவைப்படலாம் என்ற காரணத்திற்காக ட்விட்டர் உங்களது ட்விட்களை பேக்கப் வைத்திருக்கும். #Twitter #socialmedia
சுரண்டப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களுடன் வரிசையில் நான் கடைசியாக நிற்கிறேன் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi
புதுடெல்லி:
‘காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி’ என்று அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக சர்ச்சை எழுந்து உள்ளது.
இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று அவர் டுவிட்டரில் உருக்கமான கருத்து வெளியிட்டார்.
அதில் அவர், ‘‘சுரண்டப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களுடன் வரிசையில் நான் கடைசியாக நிற்கிறேன். அவர்களுடைய மதமோ, ஜாதியோ, நம்பிக்கையோ எனக்கு பெரிது அல்ல. வலியில் உள்ளவர்களை அரவணைத்துக்கொள்ள தேடுகிறேன். வெறுப்புணர்வையும், அச்சத்தையும் நான் அழிக்கிறேன். வாழும் எல்லா உயிர்களையும் நான் நேசிக்கிறேன். நான்தான் காங்கிரஸ்’’ என கூறி உள்ளார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்து குறித்து பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘அவர் (முஸ்லிம் கட்சி காங்கிரஸ் என கூறிய) தனது கருத்தை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. மறுக்கவில்லை என்பதைவிட அவரது டுவிட்டர் கருத்தை ஒப்புக்கொள்ளுதல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தை விட அவரது தமிழ் ட்வீட்டுகள் அனைவரையும் கவர்ந்த நிலையில், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ள பிறந்த நாள் வாழ்த்து வியக்க வைத்துள்ளது.
சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைத்தார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கினர்.
ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தை விட அவரது தமிழ் ட்வீட்டுகள் அனைவரையும் கவர்ந்தது. தனது தமிழ் ரசிகர் ஒருவரின் மூலமே அவர் தமிழில் ட்வீட் செய்து வந்தாலும், அவரது இந்த செயல் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹர்பஜன் சிங்குக்கு சச்சின் டெண்டுல்கர் சிறப்பு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்’ என சச்சின் ட்வீட் செய்துள்ளார். சச்சின் தெரிவித்த பிறந்தநாளை விட அவர் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது இன்றைய இணையத்தை வைரலாக்கியுள்ளது.
சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். #DonaldTrump #SaudiArabia
வாஷிங்டன்:
ஈரான் உடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது.
மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4-ந் தேதியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு இப்படி நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப், சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, அவர் சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு சவுதி அரேபியா, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது. #DonaldTrump #SaudiArabia #Tamilnews

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததை வைத்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மோடி, கிண்டல் செய்து பதிவிட்ட ட்வீட்களை தற்போது காங்கிரஸ் கட்சியினர் தேடி எடுத்து, கேள்விகளை எழுப்பி வருகின்றனர். #RupeeAllTimeLow #Congress #Modi
புதுடெல்லி:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாயை தொட்டு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியுடன் சேர்ந்து சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணத்தின் மதிப்பு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தது போல, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஐ.டி விங் உறுப்பினர்கள் சமூக வலைதளத்தில் பாஜகவை தாளித்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 ரூபாயை தொட்டது. அப்போது, குஜராத் முதல்வராகவும், பிரதமர் போட்டியில் இருந்த மோடி, மன்மோகன் சிங் வயதுக்கு ஏற்றவாறு ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது என ட்வீட் செய்திருந்தார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூபாயின் மதிப்பு 40 ரூபாய்க்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.
இது மட்டுமல்லாது, கருப்புப்பணம், பெட்ரோல் விலை உயர்வு, பயங்கரவாதம் ஆகியவை குறித்து அப்போதைய காங்கிரஸ் அரசையும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் மோடி கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். தற்போது, மோடி பிரதமராகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் விஸ்வரூபம் எடுத்துள்ளதே தவிர துளியும் குறையவில்லை.

அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், எனக்கான முறை இது என காங்கிரஸ் கட்சி தற்போது மேற்கண்ட பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது. ‘ரூபாயின் மதிப்பு 40-க்கு வரும் என கூறினீர்களே? இப்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 69 ரூபாயாக உள்ளது.
கருப்புப்பணத்தை மீட்டு 15 லட்சம் கொடுப்பேன் என்றீர்களே? இப்போது, 50 சதவிகித பணம் சுவிஸ் வங்கியில் அதிகரித்துள்ளது.’ என பெட்ரோல் விலை உயர்வு, பயங்கரவாதம், பணமதிப்பிழப்பு ஆகிய பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் அதிரடி கேள்விகளை எழுப்பி வருகிறது.
மேலும், மோடியின் பழைய ட்வீட்களை தேடி எடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கேள்விகளை எழுப்பும் போது, பாஜக கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. சர்வதேச அளவில் எல்லா ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. அதனால், இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது என பாஜகவினர் சமாளித்து வருகின்றனர்.
எங்களுக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? போன்ற கேள்விகளையும் காங்கிரசார் எழுப்புகின்றனர். மேற்கண்ட விவகாரங்களால் சமூக வலைதளம் கருத்து மோதல் களமாக மாறியுள்ளது.