search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Councilors"

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டம் நடக்கும்போது அரங்கத்தில் இருந்து தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பானுமதி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஸ்வரன், வாசுதேவ பிரபு முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. உட்பட 10 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடக்கும்போது அரங்கத்தில் இருந்து தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் வெளியேறினர். இதனால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு தலைவர் பானுமதி பாலசுப்பி ரமணியன் மன்ற பொருள் தன்னை ஆலோசிக்காமல் அதிகாரிகளே தயார் செய்து எடுத்து வருகின்றனர்.

    தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளான சூரப்பள்ளி மற்றும் ஆவடத்தூர் பகுதிக்கு அதிகாரிகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற வார்டுகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது. அனைத்து வார்டுகளுக்கும் பொது நிதியை சமமாக பிரித்து வழங்க வேண்டும்.

    மேலும் பொது நிதி மூலம் செய்யப்படும் வரவு, செலவு கணக்குகளை முறையாக அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என குற்றம் சாட்டினார்.

    தொடர்ந்து அவர் உள்பட 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தென்திருப்பேரை யிலுள்ள ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை யிலுள்ள ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, உறுப்பினர்கள் தானி ராஜ்குமார், மல்லிகா, மாரிமுத்து, தாமஸ், நசரேன், பூல், சஜீதா, காந்திமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×