search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "United Arab Emirates"

    • அக்டோபர் 3 முதல் 20 வரை 20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுகிறது.
    • இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தது.

    மும்பை:

    20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு நடந்த அரசியல் சூழல் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாத நிலை இருந்தது.

    இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தது. இதை இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா நிராகரித்தார்.

    இந்நிலையில் வங்கதேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அக்டோபர் 3 முதல் 20 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இரண்டு மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.

    • இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப் படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    • இதனால் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பில் முன்னிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருக்கிறது.

    மும்பை:

    20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அங்கு நடந்த அரசியல் சூழல் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாத நிலை இருக்கிறது.

    இந்த போட்டியை இந்தியா நடத்த வேண்டும் என்று ஐ.சி.சி. கோரிக்கை வைத்தனர். இதை இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா நிராகரித்தார்.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப் படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய 3 இடங்கள் உள்ளன.

    இதனால் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பில் முன்னிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருக்கிறது. இலங்கை, ஜிம் பாப்வே நாடுகளும் 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவதற்கான போட்டியில் உள்ளன.

    • 2717 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபாதான் தற்போது உலகின் உயரமான கட்டிடம்
    • ஜெட்டா டவரின் 157-வது தளத்தில் மிக பெரிய பார்வையாளர் அரங்கம் அமைய உள்ளது

    மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடு, ஐக்கிய அரபு அமீரகம் (UAE). இதன் தலைநகரம் அபு தாபி (Abu Dhabi). அமீரகத்தில் உள்ள முக்கிய நகரம், துபாய்.

    துபாய் நகரில், 2717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) உள்ளது. 2004ல் கட்ட தொடங்கப்பட்ட இது 2009ல் கட்டி முடிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து பலர் தினமும் இதை காண துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர்.


    இந்நிலையில், "உலகின் உயரமான கட்டிடம்" எனும் அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியாவில், செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஜெட்டா (Jeddah).

    ஜெட்டாவின் வடக்கே, ஜெட்டா எகனாமிக் சிடி (Jeddah Economic City) எனும் திட்டத்தின்படி உருவாகும் நகர மேம்படுத்தலில் கிங்க்டம் டவர் என்றும் அழைக்கப்படும் ஜெட்டா டவர் (Jeddah Tower) கட்டப்பட்டு வருகிறது. இதுவரை உலகில் இல்லாத கட்டிடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் நுணுக்கங்களுடன் இது கட்டப்பட்டு வருகிறது.

    சவுதி அரேபிய இளவரசர் அல்-வலீத் பின் தலால் (Al-Waleed bin Talaal) மிகவும் தீவிரமாக முன்னெடுத்துள்ள இத்திட்டத்திற்காக இக்கட்டிடத்தை வடிவமைத்தவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் (Adrian Smith) எனும் கட்டிட வடிவமைப்பாளர்.

    புர்ஜ் கலிஃபா கட்டிடத்தையும் வடிவமைத்த ஆர்க்கிடெக்ட் ஏட்ரியன் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழிமுறைகளை கையாண்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது.

    இதன் 157-வது தளத்தில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், ஊரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கம் அமைய உள்ளது.

    திட்டமிட்டபடி இது கட்டி முடிக்கப்பட்டால், 3281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகின் முதல் "1 கிலோமீட்டர் உயர கட்டிடம்" எனும் புகழை பெறும்.

    • வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் பிரான்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது தகவல் கசிந்தது.
    • மனித கடத்தல் நடந்திருக்கலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகப்பட்டதால் தடுத்து நிறுத்தி வைத்தனர்.

    பிரான்ஸ் நாட்டின் வாட்ரி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ருமேனியாவைச் சேர்ந்த பெரிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் இருந்தனர். அனைவரும் இந்தியர்கள், விமானமும் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தது. இதனால் மனித கடத்தலாக இருக்கலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகப்பட்டு அனைவரையும் தரையிறக்கினர்.

    விமான நிலையத்திலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இருவர் மனித கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதி அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்திய தூதரகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடந்த 4 நாட்களாக அவர்கள் வாட்ரி விமான நிலையத்திலேயே தங்கியிருந்த நிலையில், நேற்று பிரான்ஸில் இருந்து 276 பேர் ஏர்பஸ் ஏ340 விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று காலை 4 மணிக்கு அந்த விமானம் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது.

    2 சிறுவர்கள் உள்பட 25 பேர் ஸ்பெயினில் புகலிடம் கேட்டுள்ளதால், அவர்கன் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் காட்சிகளுக்காக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    துபாயில் இருந்து நிகாரகுவா சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறங்கியதால் விமானத்தில் இந்தியர்கள் இருந்தது தெரியவந்தது. அமெரிக்காவில் புகலிடம் கேட்பதற்கு நிகாரகுவா சிறந்த இடமாக மாறியுள்ளது. 2023 நிதியாண்டில் மட்டும் 96,917 பேர் அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக தகவல் தெரிவிக்கிறது. இது முந்தைய நிதியாண்டை விட 51.61 சதவீதம் அதிகமாகும். 

    • துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாட்டிற்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறக்கம்.
    • இந்தியர்களில சிலர் புகார் தெரிவித்ததால் மனித கடத்தல் சம்பவமாக இருக்கும் என அதிகாரிகள் சந்தேகம்.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் விமான நிலையத்தில் இருந்து 303 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மத்திய அமெரிக்க நாடானா நிகாரகுவா நாட்டிற்கு ருமேனியாவின் பிரபலமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது.

    பிரான்ஸ் எல்லைப்பகுதியில பறந்தபோது, விமானத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் கிழக்கு பிரான்ஸில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

    அப்போது விமானத்தில் இருந்த சிலர் தாங்கள் மனித கடத்தல் கும்பலால் அவதிக்குள்ளாகியுள்ளோம் என அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக தெரிகிறது.

    இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்க விடாமல் தடுத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தினர். 303 பேர் ஒரே விமானத்தில் சென்றதால், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்திய தூதரகத்தின் விரிவான விசாரணைக்குப் பின் அவர்கள் மனித கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்டவர்களா? என்பது தெரியவரும்.

    இவர்கள் அனைவரும் மத்திய அமெரிக்காவுக்கு பயணம் செய்து அதன்பின் சட்டவிரோதமாக அமெரிக்கா அல்லது கனடாவுக்கு செல்ல முயற்சி மேற்கொள்ள நினைத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    விமான நிலையத்தில் விமான தரையிறங்கியதும் இந்தியர்கள் அனைவரும் இரவு முழுவதும் அங்கேயே தங்கியுள்ள நிலையில், மீண்டும் செல்வதுற்கு அனுமதி கிடைக்காமல் அங்கேயே இருந்து வருகிறார்கள்.

    வெளிநாட்டினர் பிரான்ஸ் நாட்டிற்குள் வந்தபிறகு, அந்நாட்டின் எல்லை போலீசாரால் நான்கு நாட்களுக்கு அவர்கள் செல்ல வேண்டிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி வைக்க முடியும்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கம்பெனிகளில் வேலை வாய்ப்பு இருப்பதாக வெளிவரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என அங்குள்ள இந்திய தூதர் எச்சரித்துள்ளார். #Embassy

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் ஏமாற்றப்படுவதாக புகார்கள் எழுகின்றன. பல போலி நிறுவனங்களின் கவர்ச்சி கரமான விளம்பரங்களை பார்த்து ஏமாறுபவர்கள் அதில் சிக்கி கொள்கின்றனர்.

    இது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் துபாயில் ஒரு அறிக்கை வெளிட்டுள்ளார்.

    அதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கம்பெனிகளில் வேலை வாய்ப்பு இருப்பதாக பொய்யான விளம்பரங்களை நம்பி இங்கு வந்து சிலர் ஏமாறுகின்றனர். அவர்கள் அத்தகைய விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

    ஏதாவது சந்தேகம் இருப்பின் தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். வேலைக்கான உத்தரவுமற்றும் பணிக்கான விசா கிடைத்தாலும் அதை தூதரகத்துடன் தொர்பு கொண்டு அது உண்மைதானா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். எனவே மோசடி பேர்வழிகளின் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். #Embassy

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவை 2- 0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீழ்த்தியது. #AFCAsianCup #India #UnitedArabEmirates
    17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. இது பிப்ரவரி 1-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.
     
    இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் யுஏஇ அணியின் வீரர் கைபான் முபாரக் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் யு.ஏ.இ. அணி 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 88வது நிமிடத்தில் யு.ஏ.இ. அணியின் வீரர் அலி அகமது மாப்கவுத் ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடிய இந்திய அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், யு.ஏ.இ. அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் பக்ரைனை வரும் 14ம் தேதி சந்திக்கிறது. #AFCAsianCup #India #UnitedArabEmirates
    ஆசிய கோப்பை தொடருக்காக தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி ஹாங்காங் தகுதிப் பெற்றுள்ளது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றது.

    இன்னும் ஒரு அணி தேர்வாவதற்கு தகுதிச்சுற்று நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஹாங் காங் அணிகள் மோதின.

    மழைக் காரணமாக ஆட்டம் முழுமையாக நடைபெறவில்லை. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 24 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.



    பின்னர் 24 ஓவரில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங் காங் அணி களம் இறங்கியது. ஹாங் காங் 23.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை தொடருக்கு ஹாங் காங் தகுதிப் பெற்றுள்ளது. ஹாங் காங் 16-ந்தேதி பாகிஸ்தானையும், 18-ந்தேதி இந்தியாவையும் எதிர்கொள்கிறது.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியருக்கு அபுதாபி ‘பிக் டிக்கெட்’ லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்துள்ளது. #UAElottery
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ‘பிக் டிக்கெட்’ லாட்டரி குலுக்கல் நடந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ என்பவருக்கு முதல் பரிசுத்தொகையான 12 மில்லியன் திர்காம் கிடைத்தது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்மாத்யூ வாங்கிய 175342 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு இந்த பரிசுதொகை கிடைத்துள்ளது.

    இந்த லாட்டரியில் மேலும் 6 இந்தியர்களுக்கும் பரிசுதொகை விழுந்துள்ளது. அண்மை காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பல இந்தியர்களுக்கு லாட்டரியில் பரிசுகள் கிடைத்து உள்ளன.

    கேரளாவை சேர்ந்த தாடுஜா மாத்யூவுக்கு கடந்த ஜுலையில் முதல் பரிசு தொகையான ரூ.13 கோடியே 65 லட்சம் கிடைத்தது. அதற்கு முன்பு ஏப்ரலில் துபாயில் வசிக்கும் இந்திய டிரைவருக்கு ரூ.23 கோடி முதல் பரிசு விழுந்தது.

    கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் கேரளாவை சேர்ந்த மற்றொருவருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்தது. #UAElottery
    ×