search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "United Nation"

    • பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.
    • அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் அந்த அமைப்பின் தலைவரும், மும்பை, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார்.

    அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு, காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.

    இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தது. இதேபோல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.

    இந்தநிலையில் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி உலக அளாவிய பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டுள்ளான். இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எல். அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2016-ன் படி சொத்துகள் முடக்கம், பயண தடை, ஆயுதத் தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. சபை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    இவருக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு உண்டு. மேலும் இந்தியாவில் நடந்த செங்கோட்டை தாக்குதல் (2000-ம் ஆண்டு) ராம்பூர் சி.ஆர்.பி.எப். முகாம் தாக்குதல் (2008-ல்), ஸ்ரீநகர் தாக்குதல் (2018) உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்புடையவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக, அப்துல் ரகுமான் மக்கிக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதி மன்றம் சிறை தண்டனை விதித்தது.

    ஏமன் நாட்டில் சவுதி விமானப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Yemenclashes
    சனா:

    ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஹோடேய்டா மாகாணத்தில் உள்ள ஜபால் ராஸ் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது திடீர் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பேருந்தில் பயணம் செய்த 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குலுக்கு ஏமனில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். #Yemenclashes
    ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் ஒவ்வொரு 5 விநாடிகளுக்கும் ஒரு குழந்தை உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. #UnitedNation
    நியூயார்க்:

    ஐ.நாவின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை குறித்து பேசிய ஆய்வுக்குழுவின் தலைவர் லாரன்ஸ் சாண்டி, ஒவ்வொரு ஆண்டும் 15 வயதுக்கு உட்பட்ட 6.3 மில்லியன் குழந்தைகள், சரிசெய்யக்கூடிய சாதாரண காரணங்களினால் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    1990-ஆண்டுக்கு பிறகு குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இன்றும் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இன அடிப்படையில் குழந்தைகள் இறப்பு அமைவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

    ஆப்ரிக்காவில் உள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், ஆசிய கண்டத்தில் இறக்கும் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வீதம் ஆப்ரிக்காவில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், 2018-ல் இருந்து 2030-க்குள் 5 வயதுக்கும் குறைவான 56 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் எனவும் அந்த ஆய்வுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகச்சாதாரண வழிமுறைகளான நல்ல உணவு, குடிநீர் மருத்துவம் போன்றவற்றால் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைக்க முடியும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.



    குணப்படுத்தக்கூடிய மலேரியா போன்ற நோய்களாலேயே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் அதிகம் உயிரிழப்பதாகவும் ஐ.நா குழு வேதனை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விபத்துக்களினாலும், நீரில் மூழ்குவதாலும் இறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், அதிக அளவிலான நாடுகளில் கிராமப்புற பகுதிகளிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும், படிப்பறிவு அற்ற பெற்றோர்களினால் தங்கள் குழந்தைகளை முறையாக பேண முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை தொடர்பாக பேசிய உலக வங்கியின் சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை இயக்குனர் டிம் எவான்ஸ், குணப்படுத்த முடியும் காரணங்களால் ஏற்படும் மரணங்களை தடுப்பதிலும், குழந்தைகள் நலத்தில் முதலீடு செய்வதிலுமே நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட முடியும் என குறிப்பிட்டுள்ளார். #UnitedNation
    வடகொரிய அதிபர் கெஞ்சி கேட்டதனால் தான் ரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு மீண்டும் ட்ரம்ப் சம்மதித்ததாக ட்ரம்பின் வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார். #trumpkimsummit
    வாஷிங்டன்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

    இதன்பிறகு அமெரிக்காவுடன், வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து, டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

    பின்னர், வடகொரிய அதிபருடனான சந்திப்புக்கு ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடக்கும் எனவும் தெரிவித்தார். இந்த சந்திப்பு சிங்கப்பூரின் பிரபல கேபல்லா விடுதியில் நடைபெற உள்ளது. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப்பின் தலைமை வழக்கறிஞரும், நியூ யார்க் நகர முன்னாள் மேயருமான ரூடி கிலியானி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், மண்டியிட்டு கெஞ்சி கேட்டதனால் தான் அவரை சந்திக்க ட்ரம்ப் மீண்டும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    திட்டமிட்டபடி, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், இவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #trumpkimsummit
    ×