search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP Congress"

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் உ.பி. மாநில தலைவர் ராஜ் பபர் ராஜினாமா செய்தார்.
    லக்னோ:

    நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரசேதத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா -62 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்-10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி-5 தொகுதிகளிலும், அப்னாதளம் -2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே காங்கிரஸ் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டும் ரேபரேலி தொகுதியில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட கூடுதலாக 55 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில், மிக மோசமான இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில தலைவர் ராஜ் பபர் மற்றும் அமேதி மாவட்ட தலைவர் யோகேந்திர மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.
    உத்தப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் நிர்வாக அமைப்புகளை கலைத்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் உத்தரவிட்டுள்ளார். #UPCongress #RajBabbar
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடக அமைப்புகளை, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் இன்று கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநில நிர்வாக அமைப்பு மற்றும் நிதி் விவகார அமைப்புகளில் பதவி வகித்த சிலரையும் அவர் நீக்கியுள்ளார். இதற்கான அறிவிப்புகளை அம்மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஆர்.பி. திரிபாதி வெளியிட்டார்.

    அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் விதமாக, கலைக்கப்பட்ட இடங்களில் திறமையான புதிய நிர்வாகிகள் நியமிக்க உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கலைக்கப்பட்ட உ.பி. மாநில ஊடக அமைப்பு கடந்த இரண்டு மாதமாகவே செயல்படாத நிலையில் இருந்துவந்தது. அதில், 21 பேர் செய்தி தொடர்பாளர்களாக பதவி வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   #UPCongress #RajBabbar
    ×