என் மலர்
நீங்கள் தேடியது "UP Rains"
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை சார்ந்த விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று 40 ஆக உயர்ந்துள்ளது. #UPRains #UPRainstoll40
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இருநாட்களில் மழைசார்ந்த விபத்துகளில் 28 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கோன்டா மற்றும் குஷிநகர் மாவட்டங்களில் தலா 3 பேரும், மிர்ஸாபூர் மாவட்டத்தில் இருவரும், பஹ்ராய்ச், சிதாபூர், மீரட் மற்றும் எட்டா மாவட்டத்தில் தலா ஒருவரும் என நேற்று ஒருநாளில் மட்டும் மின்னல் தாக்கியும், வீடுகள் இடிந்து விழுந்த விபத்துகளில் சிக்கியும் 12 பேர் உயிரிழந்தனர்.
இதனால், கடந்த மூன்று நாட்களில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 40 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #UPRains #UPRainstoll40