search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Open 2024"

    • ஆண்கள் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • பெண்கள் பிரிவில் ஜெசிகா பெகுலா 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் முடிந்ததும் நேற்று புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் சின்னெர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். 2-வது இடத்தில் இருந்த ஒலிம்பிக் சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் நுழைந்த ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் 3-வது சுற்றுடன் வெளியேறியதால் தரவரிசையில் சறுக்கி இருக்கிறார்.

    ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். அமெரிக்க ஓபனில் இறுதி ஆட்டத்தில் தோற்ற டெய்லர் பிரிட்ஸ் 12-ல் இருந்து 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் இரு இடங்களில் ஸ்வியாடெக் (போலந்து), சபலென்கா (பெலாரஸ்) தொடருகிறார்கள். அதே சமயம் நடப்பு சாம்பியனாக கால்பதித்த அமெரிக்காவின் கோகோ காப் 4-வது சுற்றுடன் நடையை கட்டியதால் தரவரிசையில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். அவர் 3-ல் இருந்து 6-வது இடத்துக்கு சரிந்தார். அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவரான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3 இடம் உயர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

    • முதல் செட்டை 1-6 என கரோலினா கைப்பற்றினார்.
    • அடுத்த 2 செட்டுகளை ஜெசிகா வென்று அசத்தினார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் செக் குடியரசு வீராங்கனையான கரோலினா முச்சோவாவும் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கரோலினா கைப்பற்றினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெசிகா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் இறுதிபோட்டியில் சபலென்கா மற்றும் ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு பெகுலா தகுதி பெற்றுள்ளார்.


    • முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரரான ஜோகோவிச் மற்றும் மால்டோவன் நாட்டை சேர்ந்த ராடு அல்போட் மோதினர்.
    • இதில் ஜோகோவிச் 6-2, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், சகநாட்டவரான மாக்சிமிலியன் மார்டரர் உடன் மோதினார்.

    இதேபோல் மற்றொரு முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் தனது முதல் சுற்று ஆட்டத்தில் பிரேசிலின் தியாகோ செய்போத் வைல்ட் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீரரான ரூப்லெவ் 6-3, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் தியாகோ செய்போத் வைல்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் 6-2, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மாக்சிமிலியன் மார்டரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரரான ஜோகோவிச் மற்றும் மால்டோவன் நாட்டை சேர்ந்த ராடு அல்போட் மோதினர்.

    இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-2, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ராடு அல்போட்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலருசிய வீராங்கனையான சபலென்கா ஆஸ்திரேலிய வீராங்கனையான பிரிசில்லா ஹான்னுடன் மோதினர். இதில் சபலென்கா 6-3,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×