என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » us tech moguls
நீங்கள் தேடியது "US Tech Moguls"
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் பட்டியலில் நான்கு இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். #Forbes
ஃபோர்ப்ஸ் பத்திரிகை சார்பில் டெக் உலகின் டாப் 50 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தொழில்நுட்ப சந்தையில் முன்னணி பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பெண் அதிகாரிகள் சைபர்செக்யூரிட்டி, நிறுவனம் மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பம், கேமிங், செயற்கை நுண்ணறிவு, ஏரோ-ஸ்பேஸ், பயோடெக் மற்றும் பல்வேறு பிரிவுகளில் தலைமை வகிக்கின்றனர்.
அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 50 அமெரிக்க டெக் ஜாம்பவான்கள் 2018 பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
அவ்வாறு, சிஸ்கோவின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அலுவலரான பத்மஸ்ரீ வாரியர், உபெர் நிறுவன மூத்த தலைவர் கோமல் மங்டானி, உபெர் நிறுவன தொழில்நுட்ப அலுவலர் நேஹா நர்கடெ, டிராபிரெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி காமாக்ஷி சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணினி உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக கருதப்படும் நிலையில், ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பெண் தலைவர்கள் அவரவர் துறைகளில் தங்களை நிரூபித்து வருகின்றனர்.
×

X