search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Utharavu maharaja"

    ஆஸிப் குரைஷி இயக்கத்தில் உதயா - பிரபுவுடன் நடிகர் சங்க பிரபலங்கள் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் முன்னோட்டம்.
    ஜே‌ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘உத்தரவு மகாராஜா’. 

    இதில் உதயாவுடன் பிரபு இணைகிறார். பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், தனஞ்செயன், தளபதி தினேஷ், சோனியா போஸ், பிரேம் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் குட்டிபத்மினி நடிக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர், நிர்வாகிகளுடன் முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - பாலாஜி ரங்கா. இவர் தமிழில் ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’ மற்றும் பல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர். 



    இசை - நரேன் பாலகுமாரன், படத்தொகுப்பு - சத்ய நாராயணன், நடனம் - சாண்டி, இயக்கம் - ஆஸிப் குரைஷி. 

    `உத்தரவு மகாராஜா’ படத்தின் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குனர் கையாண்டிருக்கிறார். இது முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்‌ஷன் கலந்த சைக்கோ திரில்லர் கதை. இயக்குனராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ், இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

    இந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    உத்தரவு மகாராஜா படத்தை தயாரித்து நடித்திருக்கும் உதயா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி படங்களை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். #Udhaya
    உதயா நடித்து தயாரித்து இருக்கும் ’உத்தரவு மகாராஜா’ படம் நவம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. இதில் பிரபு, உதயா, ஸ்ரீமன், மனோபாலா, பிரியங்கா, ஆடம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் நாயகன் உதயா, விஜய்சேதுபதி, ஜெயம் ரவிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். 

    அதில் ‘இந்த காலகட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் படம் எடுப்பது மிகவும் கஷ்டம். எடுத்த படத்தை விநியோகஸ்தர்களைப் பார்க்கவைப்பது அதைவிடக் கஷ்டம். நவம்பர் 16-ம் தேதி சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்களை மட்டும் வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒப்பதல் அளித்தது. 

    இதன் படி நான் நடித்த 'உத்தரவு மகாராஜா' உள்பட சில படங்களுக்கு மட்டுமே அனுமதியளித்தனர். இதைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கியிருக்கிறேன். தற்போது விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி மற்றும் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு ஆகிய படங்களும் அந்த தேதியில் வெளியாக இருப்பதாக கேள்விப்படுகிறேன். 



    இந்த இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் மற்ற சிறிய பட்ஜட் படங்கள் பாதிக்கப்படாதா? நான் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருக்கிறேன். நடிகர் சங்கத்திலும் இருக்கிறேன். ரசிகர்கள் என்னைப் பார்க்க வருவார்களா? அல்லது அண்ணன் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ஆகியோர்களை பார்க்க வருவார்களா... அதனால் விஜய் சேதுபதி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் மனம் வைத்தால் நானும் ஏனைய சிறிய பட்ஜட் படங்களும் வாழ முடியும்.

    இருவரும் எங்களுக்காக அவர்கள் படங்களை தள்ளி வைக்க வேண்டும். இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.
    சுந்தர பாண்டியன் படம் மூலம் எடிட்டராக அறிமுகமான டான் போஸ்கோ, தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். #DonBosco
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார்  நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தின் எடிட்டிங், சினிமா துறையினரால் அதிகம் கவரப்பட்டது.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக  பணியாற்றியுள்ளார். இன்னும் இவரது எடிட்டிங்கில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’ என்ற திரைப்படம் தயாராக இருக்கும் நிலையில், ‘7 ஸ்டார் புன்னை நகர் அணி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மேலும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவுள்ள ‘கொம்பு வஞ்ச சிங்கம்டா’ என்ற படத்திலும் எடிட்டராக பணியாற்ற இருக்கிறார்.

    இந்நிலையில் ‘உத்தரவு மகாராஜா’ என்ற படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய தோற்றத்தை பார்க்கும் போது, கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.



    உதயா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், பிரபு, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, தனஞ்செயன், சோனியா போஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆஸிப்குரைஷி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    எடிட்டர் டான் போஸ்கோ, சமீபத்தில் ‘வா தமிழா’ என்ற ஆல்பத்தை இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாய அக்கறையுடன் வெளியான வா தமிழா ஆல்பம் ரசிகர்களை கவர்ந்து வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. #DonBosco

    விஜய்சேதுபதியின் ‘96’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ படங்கள் ரிலீசால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #96TheMovie #NOTA
    தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது.

    ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியிட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன. பெரிய நடிகர்கள் படங்களை வாரத்தின் முதல் இரண்டு வாரத்திலும், கடைசி வாரத்திலும் திரையிட தேதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் அந்த படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது. 



    இந்த நிலையில் அடுத்த வாரம் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜருகண்டி, விஷ்ணு விஷாலின் ராட்சசன், விவேக்கின் எழுமின் ஆகிய 5 படங்களையும் திரைக்கு கொண்டுவர அனுமதி வழங்கி அவற்றுக்கு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் விஜய்சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ ஆகிய படங்களும் 5-ந் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் பெரிய படங்கள் என்பதால் மற்ற 5 படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அவற்றை தள்ளிவைக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் அளித்தனர். 

    இதற்கிடையே விவேக்கின் எழுமின் படம் அக்டோபர் 18-ஆம் தேதிக்கும், உதயாவின் உத்தரவு மகாராஜா படம் அக்டோபர் 26-ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. #96TheMovie #NOTA #ProducersCouncil

    ×