search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttanasana"

    • ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது.
    • ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது.

    உட்கடசனா (நாற்காலி போஸ்)

    * உத்கடாசனா நமது தொடை தசைகள் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்துகிறது.

    * இந்த ஆசனம் நமது தோள்பட்டைகள், முதுகு, இடுப்பு மற்றும் பிட்டம் ஆகிய உறுப்புகளை சீராக்குகிறது. மேலும் நமது தசைகளை இறுக்கி, அவற்றுக்குள்ளேயே வலிமையைத் தருகிறது.

    * தட்டையான பாதங்களினால் சிரமப்படுபவா்களுக்கு உத்கடாசனா மிகப் பொிய நன்மையைச் செய்கிறது. அதாவது தட்டைப் பாதப் பிரச்சினையை படிப்படியாகக் குணப்படுத்துகிறது.

    * இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உத்கடாசனா மிகவும் உதவியாக இருக்கிறது. இது இதயத்தை மேம்படுத்தி, இதயத்தையும் அதன் துடிப்பையும் தூண்டிவிடுகிறது. பதங்குஸ்தாசனம் (பெருவிரல் போஸ்)

    இந்த ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. பதங்குஸ்தாசனத்தில் கால்களின் விரல்களை கைகளின் கட்டைவிரல்களால் தொட வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

     உத்தனாசனம் (முன்னோக்கி நிற்கும் வளைவு)

    உத்தனாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இது முக்கியமாக கணுக்கால், முழங்கால்கள், தொடைகளில் வலிமையை உருவாக்குகிறது. இது தசையின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. உத்தனாசனம் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்கிறது.

    உத்தாசனத்தில் உடலின் மேல் பகுதி தரையை நோக்கி வளைவதுடன், தலை பாதங்களைத் தொடுவது போல இருக்க வேண்டும். இதன் காரணமாக, இதயத்தை நோக்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கத் தொடங்கலாம். இது இதய செல்திறனை மேம்படுத்துகிறது.

     தடாசனா (மலை போஸ்)

    தடாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது மிகவும் பயனுள்ள ஆசனமாகும். இந்த ஆசனம் செய்வது உடல் தோரணையை மேம்படுத்துவதுடன், உடல் சீரமைப்பை சரியாக்குகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் மன வலிமையை அதிகரிக்கிறது.

    கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் எதிர்மறை எண்ணங்களைக் குறைக்கிறது. நுரையீரலை சுத்தம் செய்வதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்துகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் நேர்மறையை ஊக்குவிக்கிறது. கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. உங்கள் முதுகுத்தண்டில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

     சக்ராசனம்

    இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் யோகாசனங்களில் சக்ராசனம் மிகவும் கடினமான ஒன்றாகும். இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பிட்டம், முதுகு மற்றும் கால்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும். இது தவிர, இந்த ஆசனம் செய்வது மார்பு தசைகளை நீட்டுவதுடன் முதுகுத் தண்டின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய செயல்பாட்டை அதிகரிக்கிறது.

    முதுகு எலும்புகளைப் பலப்படுத்துவதுடன் புத்துணர்ச்சியை அளிக்கிறது. நீண்ட நேரம் மேசையில் அமர்ந்து கணினி பயன்படுத்துவோர்களுக்கு மன அழுத்தம், கோபம் மற்றும் கூன் முதுகு வராமல் தடுக்கும்.

    இந்த ஆசனங்கள் அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் ஆசனம் செய்யும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதைத் தவிர்ப்பது நல்லது. எனவே நிபுணரின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த ஆசனம் செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

    • யோகா ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு தோற்றத்தையும் மேம்படுத்தும்.
    • மன அழுத்தத்தை போக்கி, கூந்தல் நலனையும் மேம்படுத்துகிறது.

    கூந்தலின் நிலையை வைத்தே நம்முடைய தினசரி அட்டவணை எப்படி இருக்கிறது என சொல்லிவிடலாம். அத்துடன், மன அழுத்தம், மோசமான வாழ்வியல் தெரிவுகள், மரபணு, மருந்துகள், ஹார்மோன் சமநிலையின்மை, கூந்தலில் அதிகளவில் ரசாயன பயன்பாடு ஆகியவை சேரும்போது, கூந்தல் மேலும் பாதிக்கப்படுவதில் வியப்பில்லை. யோகா ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு தோற்றத்தையும் மேம்படுத்தும்.

    ஒரு சில யோகாசனங்கள் உச்சந்தலை, மயிர்க்கால்களுக்கான ரத்த ஓட்டத்தை சீராக்கி, கவலை, மன அழுத்தத்தை போக்கி, கூந்தல் நலனையும் மேம்படுத்துகிறது.

     உஸ்த்ராசனா

    உஸ்த்ரா என்றால் சமஸ்கிருதத்தில் ஒட்டகம் என்று பெயர். இந்த யோகாசனம் ஒட்டக போசில் இருக்கும். தரையில் முட்டி போட்டு, நன்றாக நிமிர்ந்து நிற்கவும். பின் பக்கம் வளைந்து, மேற்கூரையை பார்த்தபடி பாதங்களை பிடித்துக்கொள்ளவும். சில வினாடிகள் இதேநிலையில் இயல்பாக மூச்சு விட்டபடி இருக்கவும். மூச்சை இழுத்துவிட்டு ஆரம்ப நிலைக்கு வரவும். நான்கு அல்லது ஐந்து முறை செய்து ரிலாக்ஸ் ஆகவும்.

    பலன்கள்

    முதுகுத்தண்டு, கழுத்து ஆகியவை பலம் பெற்று, நெகிழ்வுத்தன்மையை பெறும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். மாதவிலக்கு சீராகும். உங்கள் தோற்றம் கம்பீரமாய் நடைபோடும். முதுகுத்தசை வலிமை பெறும். முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவை நீங்கும்.

     உத்தனாசனா

    கட்டைவிரல் உட்பட பாதங்கள், குதிக்கால், முழங்கால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும் வகையில் கால்களை அருகாமையில் வைத்தபடி நேராக நிற்கவும். மூச்சை இழுத்துக்கொள்ளவும், வெளியே விடும் போது கைகளை மேலே தூக்கி கைவிரல்கள், உள்ளங்கை தரையில் படும் வகையில் முன் பக்கம் குனியவும். இதேபோல ஐந்து முறை செய்யவும்.

    பலன்கள்

    இது நரம்பியல் மண்டலத்தை சமநிலை செய்து, அமைதியை அளிக்கிறது. அதேசமயம் பின்புற வலி, கைகளில் வலி, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று செய்யவேண்டும்.

    ×