என் மலர்
நீங்கள் தேடியது "Uttarakhand High Court"
- மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும்
- ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன்
சிறுமிகளுடன் டேட்டிங் செய்வதாக மைனர் சிறுவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிக்கத் தொடங்கியள்ளது. ஆனால் மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பந்தாரி என்ற சமூக ஆர்வலரால் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்ட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வெறுமனே சிறுவர்களை கைது செய்வதற்கு பதிலாக நடைமுறை தீர்வுகள் குறித்து ஆராய வேண்டும். பெற்றோரின் புகார் மட்டுமே சிறுவர்களை கைது செய்வதற்கு போதுமானது அல்ல. கைது செய்வதற்கு பதிலாக சிறுவர்களுக்கு அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறை வழங்கலாம். மாநில அரசு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து காவல்துறையினருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பொதுநல வழக்கு தாக்கல் செய்த பந்தாரி, ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன.
இந்த இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லை.
குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மட்டும் இடம்பெற்றால் அவை தடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது.
அதை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் 27-ந் தேதி உத்தரவிட்டனர்.
இதையடுத்து மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
கோர்ட்டு கூறிய 857 ஆபாச தளங்களை ஆய்வு செய்ததில் 30 தளங்களில் ஆபாச படங்கள் இல்லை. மீதி 827 தளங்களில் ஆபாச படங்கள் இருந்தன.
எனவே, அந்த தளங்களை முடக்கும்படி மத்திய எலெக்ட்ரானிக் தகவல் தொழில்நுட்பத்துறை டெலிபோன் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அதையடுத்து அந்த துறை இணையதள வசதிகள் வழங்கும் அனைத்து டெலிபோன் நிவனங்களுக்கும் ஆபாச தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி படிப்படியாக ஆபாச இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருகிறது. #PornWebsitesban