என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttarkhand CM"

    • உத்தரகாண்ட் சுரங்கத்தில் 13 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
    • மீட்பு பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். உத்தரகாண்ட் சுரங்கத்தில் 13 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.

    துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது.

    தொழில்நுட்பம் கோளாறு காரணமாக துளையிடும் பணி நேற்று மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மீட்பு பணிகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், இதுகுறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, "உத்தரகாண்டில் மீட்பு பணியின்போது சிக்கி உள்ள இயந்திரத்தின் பாகங்களை விரைவாக அகற்ற வேண்டும்.

    ஆகர் இயந்திர பாகங்களை அகற்ற தேவையான இயந்திரங்கள், தொழில் நுட்பங்களை விரைந்து வாங்குமாறு" அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ×