என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vaadivasal"
- நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாடிவாசல்
இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். ஆனால், வெற்றிமாறன், சூரி நடிப்பில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வந்ததால் சூர்யா கங்குவா படத்தில் நடிக்கத் தொடங்கினார். 'விடுதலை' படப்பிடிப்பு முடிந்ததும் 'வாடிவாசல்' படப்பிடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 'விடுதலை' இரண்டாம் பாகம் பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளதால் 'வாடிவாசல்' படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப் போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
- இவர் தற்போது 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரி நடிப்பில் 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார்.
வெற்றிமாறன்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "நான் என் குழந்தைகளுக்கு 'நோ கேஸ்ட்' (No Cast) என்ற சான்றிதழ் வாங்க முயன்றேன். கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க. பிறகு கோர்ட்டுக்கு போனேன். அங்கேயும் அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. நீங்க சாதி குறிப்பிட்டுத்தான் ஆகணும் என தீர்ப்பு வழங்கிட்டாங்க. இதையடுத்து சாதி சான்றிதழ் எங்கேயும் கொடுக்காதபடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
வெற்றிமாறன்
பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். யாருக்கு தேவையில்லை என்று எண்ணுகிறார்களோ அவர்கள் இதை செய்யலாம். எனக்கு தேவையில்லை அதனால் நான் இதை வாங்கிக்கொள்கிறேன். ஆனால் நம் உரிமையை வாங்க வேண்டிய இடத்தில் நாம் சாதிச்சான்றிதழ் கொடுத்து தான் ஆக வேண்டும்" என்று பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்