என் மலர்
நீங்கள் தேடியது "Vaigasi Vishagam"
- முருகனுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் உகந்தது.
- கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் சீக்கிரமே திருமணம் நடைபெறும்.
வைகாசி மாதத்தில் பூரணச்சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடிவரும் தினத்தை வைகாசி என்பார்கள்.
விசாக தினத்தில் காலையில் குளித்துப் பூசை அறையில் முருகன் படத்திற்கு பூ, பொட்டிட்டு அஷ்டோத்திரம் செய்து.
நைவேத்தியம் சமர்ப்பித்து பூசிக்க வேண்டும்.
திருப்புகழ், கந்தர் சஷ்டிகவசம், கந்தர் அநுபூதி ஆகிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
பூசை மேற்கொண்ட தினத்தில் இரவில் பால் மட்டும் உண்டு விரதமிருந்தால் பூரண பலன் கிடைக்கும்.
கோவிலில் சென்று முருகனை அபிஷேக ஆராதனைகளுடனும் வழிபடலாம்.
முருகனுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் உகந்தது.
சந்நிதியில் நெய் விளக்குப்போடுவது சாலச்சிறந்தது.
கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் சீக்கிரமே திருமணம் நடைபெறும்.
- நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது.
- ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும்.
அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது.
ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது.
வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனிரெண்டைக் கொண்டவன் வடிவேலன்.
எனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.
பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும்.
அன்றைய தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.
'ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்' என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.
- அதுவும் முடியாவிட்டால் வைகாசி மாதத்தின் கடைசி மூன்று நாட்களாவது நீராட வேண்டும்.
- பகவான் கிருஷ்ணர் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருகிறார்.
கிருஷ்ண பெருமானுக்கு மிகவும் பிரியமான மாதம் வைகாசி மாதமே.
இந்த மாதத்தில் பகவான் மனிதர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி கங்கை, யமுனை, காவேரி, சிந்து, கோதாவரி, சரஸ்வதி, துங்கபத்ரா, கிருஷ்ணா போன்ற எல்லாப் புனித நதிகளையும் அழைத்து வைகாசி மாதத்தில் சூரிய உதயம் முதல் ஆறு நாழிகை வரை எல்லா தீர்த்தங்களிலும் தங்கி இருக்கும்படி கூறினார்.
அந்த சமயத்தில் புனித நதிகளில் நீராடுபவர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பேன் என்றும் விஷ்ணு கூறினார்.
வைகாசி மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும் ஏகாதசி, துவாதசி, பவுர்ணமி தினங்களிலாவது நீராட வேண்டும்.
அதுவும் முடியாவிட்டால் வைகாசி மாதத்தின் கடைசி மூன்று நாட்களாவது நீராட வேண்டும்.
பகவான் கிருஷ்ணர் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருகிறார்.
அப்போது நீராடி இறைவனைப் பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
- இந்த கோவில் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருக்கிறது.
- வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் நடத்தப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருக்கிறது.
வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் நடத்தப்படுகிறது.
என்றாலும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என அமர்க்களப்படும்.
நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் நீடாமங்கலம் சிவாலயத்தில் ஒன்று திரண்டிருப்பார்கள்.
காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தால் பித்ரு தோஷங்கள் உள்பட 16 வகையான சாபங்களும் தோஷங்களும் விலகும், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- தர்மத்தை நிலைநாட்ட வடிவம் கொண்டவன் முருகன்.
- முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.
முருகன் என்றால் அழகன் என்று பொருள். ஓம் என்ற பிரணவத்தின் வடிவமாக நின்றவன் முருகன்.
தர்மத்தை நிலைநாட்ட வடிவம் கொண்டவன் முருகன்.
முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.
முருகனை பூஜிப்பதற்கு சிறப்பு பெற்ற தலங்கள் அறுபடை வீடுகள்.
முருகனை பூஜிப்பதால் சிறப்பு பெற்ற தலங்கள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருவிடைக்கழி.
இங்கு முருகப் பெருமானுக்கு பின்புறம் சிவலிங்கம் உள்ளது.
(குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அதுபோல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்து தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மையுண்டாகும்.
கந்த புராணத்தில் வரும் சுப்ரமண்ய தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்து பாவங்களும் நிவர்த்தியாகும்.
பாவங்கள் விலகி சகல விதமான நன்மையும், இறுதியில் மோட்சமும் கிடைக்கும்.
செவ்வாய் தோஷமுடையவர்கள் இதை படிக்க மிகவும் நன்மை பயக்கும்.
- முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும்.
- இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.
விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்- சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன்.
முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும்.
இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம்.
முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றில் நடுவில் உள்ளது ஒளி மிக்கது.
ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.
சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் ஆகும்.
அதனால் தான் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
விசாக நட்சத்திரத்தின் பிரதான தேவதை முருகப்பெருமான் ஆவார்.
விசாக நட்சத்திரத்தின் அதிதேவதைகள் இருவராவர் ஒருவர் இந்திரன். மற்றொருவர் அக்னி.
இவர்கள் சகல மங்களங்களையும் அளிப்பவர்களாக தமது இருதிருக்கரங்களில் வரதம் மற்றும் அபய முத்திரை ஏந்தி அருள்புரிகிறார்கள்.
அக்னி சிவப்பு நிற மேனி கொண்டவர். இந்திரனோ தகதகக்கும் தங்கத் திருமேனி உடையவர்.
விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன.
ஒன்று வைசாக் மற்றும் விசுவை என்று அழைக்கப்படும் விசாகப் பட்டினம் ஆகும்.
இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.
இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும்.
மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும்.
இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்ரீசுப்பிரமணியர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப்பொன்னும் பொருளும் அருள்வதுடன், திருமண வரமும் வழங்குகிறார்.
- மூலவர் ஸ்ரீஅபிமுக்தீஸ்வரரை ஆயிரம் முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத நோயும் தீரும்.
திருவாரூர் -கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையில் ஸ்ரீஅபினாம்பிகை உடனுறை ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த கோவிலில் திருமண வரம் தரும் கடவுளாக ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி உள்ளார்.
18 படிகள் ஏறிச் சென்று மூலவரை தரிசிக்கும் அமைப்புடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
மூலவர் ஸ்ரீஅபிமுக்தீஸ்வரரை ஆயிரம் முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத நோயும் தீரும்.
சுக்கிரன், இந்தத் தலத்தின் சரவணப் பொய்கையில் நீராடி, தவம் இருந்து, இழந்த சக்தியைச் திரும்பப் பெற்றார்.
எனவே, சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம்.
ஸ்ரீசுப்பிரமணியர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப்பொன்னும் பொருளும் அருள்வதுடன், திருமண வரமும் வழங்குகிறார்.
வள்ளியைக் கரம்பிடிக்க விரும்பிய முருகன், இந்தத் தலத்துக்கு வந்து பரமசிவனையும் பார்வதியையும் வேண்டி தவம் செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம்.
பிறகு, சிவ-பார்வதியின் ஆசியோடும், அண்ணன் விநாயகரின் துணையோடும் வள்ளிமலையில் ஸ்ரீவள்ளியை மணம் செய்து கொண்டார்.
தனது திருமணம் நிறைவேற பெற்றோரின் ஆசி கிடைத்த இந்தத் தலத்தில், பக்தர்களின் திருமண பிரார்த்தனைகளையும் நிறைவேற்ற முருகன் சித்தம் கொண்டு கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.
வேலவன் வழிபட்டதால், இந்த ஊருக்கு வேளூர் என்றும் பெயர் உண்டு.
வைகாசி விசாகத் திருநாளில் இந்த தலத்தில் உள்ள சரவண பொய்கையில் நீராடி, முருகனை வழிபட்டால், திருமண தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வம் பெருகும்.
- ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், “இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம்.
- உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன் இங்கேயே கோவில் எழுப்பு!”என்று அருளி மறைந்தாராம்
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது.
இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது.
முன்னொரு காலத்தில், இங்கு முருக பக்தர் ஒருவர் வசித்தார்.
ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளை யொட்டி, கடும் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் சென்று வழிபடுவது இவரது வழக்கம்.
ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், "இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம்.
உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன்.
இங்கேயே கோவில் எழுப்பு!"என்று அருளி மறைந்தாராம், அதன்படி கட்டப்பட்டதே, காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில்.
இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோவில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர்.
பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம்.
இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.
வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமி யைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலானவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் "மை" பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.
வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது காளிப்பட்டி கந்த சாமியை வணங் கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.
- ஒருவாரம் வரை அவரது தவம் நீடித்தது. அதன் தொடர்ச்சியாக வைகாசி விசாக தினத்தன்று ஞானோதயம் பெற்றார்.
- அவர் தவம் செய்த அந்த மரம் போதி மரம் என்று அழைக்கப்படுகிறது.
'ஆசையே துன்பத்திற்கு அடிப்படை காரணம்' என்னும் மாபெரும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கவுதம புத்தர்.
இவரது போதனைகளைப் பின்பற்றுவோர் 'பவுத்தர்கள்' என்றும், அவர்கள் சார்ந்த சமயம் 'பவுத்தம்' என்றும் அழைக்கப்படுகின்றது.
இன்றைய நேபாளத்தில் உள்ள லும் பினி என்ற கிராமத்தில் சாக்கிய மன்னரான கத்தோதனாருக்கும், மாயாதேவிக்கும் ஒரு வைகாசி விசாக நாளில் மகனாக பிறந்தார் கவுதம புத்தர்.
'சித்தார்த்தர்' என்னும் பெயரிட்டு அவரை அழைத்தனர்.
'புத்தர்' பிறந்த ஏழாவது நாளே அவரது தாய் மாயாதேவி இறந்து போனார்.
இதையடுத்து, தன் அத்தை பிரஜூபதி கவுதமியால் வளர்க்கப்பட்டார்.
16-வது வயதில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கை நடத்தினார்.
இவர்களுக்கு ராகுலன் என்ற மகன் பிறந்தான்.
சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை.
அமைதியை இழந்தார். உலக வாழ்க்கையில் தான் கண்ட துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.
ஒருநாள் அவர் வெளியே சென்று கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் அவரது மனதை வெகுவாக பாதித்தன.
வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார்.
இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இதுபோன்ற காட்சி களை அவர் நேரில் கண்டதில்லை. அந்த காட்சிகள் அவரது சிந்தையை தூண்டி விட்டன.
உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்கள் பற்றியும், அதற்கு பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார்.
இத்தகைய துன்பங் களுக்கு தீர்வு காண்பதை தனது லட்சியமாகக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, தனது 29-வது வயதில் இல்லற, வாழ்க்கையை துறந்து துறவறத்தை மேற்கொண்டார்.
வீட்டை விட்டு வெளியேறினார்.
35-வது வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை என்கிற இடத்தில் சுமேதை என்ற பெண்ணிடம் மோர் வாங்கி குடித்து விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
அந்த இடத்தை விட்டு அகலாமல் கடும் தவம் செய்தார்.
ஒருவாரம் வரை அவரது தவம் நீடித்தது. அதன் தொடர்ச்சியாக வைகாசி விசாக தினத்தன்று ஞானோதயம் பெற்றார்.
அவர் தவம் செய்த அந்த மரம் போதி மரம் என்று அழைக்கப்படுகிறது.
புத்த மதத்தினர் இந்த இடத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்வதை புனிதமாக கருதுகிறார்கள்.
- 16 வயது வரை அந்தப் புளிய மரத்தடியில், யோக நிலையிலேயே இருந்தார் மாறன்.
- மெள்ள மெள்ள, ஞானகுருவாக சகல வேதங்களும் கற்றறிந்த ஆச்சார்ய புருஷராக அவருக்குள் தேஜஸ் குடிகொண்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருக்குருகூரில் காரியாருக்கும் உடைய நங்கையாருக்கும் வைகாசி மாதம் பவுர்ணமி திதி, விசாக நட்சத்திரம், கடக லக்னம், வெள்ளிக்கிழமை அன்று நம்மாழ்வார் அவதரித்தார்.
விஷ்வ சேனரின் அம்சமாக, அதாவது, சேனை முதலிகள் எனக் கொண்டாடப்படுபவராக அவர் அவதரித்தார் எனப் போற்றுகின்றனர் வைணனவப் பெரியோர்.
நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகத்தின் பெருமையைப் போற்றுகிறது உபதேச ரத்ன மாலை!
'மாறன்' என்று பெயர் சூட்டப்பட்ட அவர் திருக்குருகூர் பெருமாள் ஆலயப் பிரகாரத்தில் புளிய மரத்தில் தொட்டில் கட்டி, அதன் நிழலில் தியானத்தில் அமர்ந்தார்.
பின்னாளில், திருமாலின் திருவடியே கதியென்று நம்மாழ்வார் மாறினார்.
16 வயது வரை அந்தப் புளிய மரத்தடியில், யோக நிலையிலேயே இருந்தார் மாறன்.
மெள்ள மெள்ள, ஞானகுருவாக சகல வேதங்களும் கற்றறிந்த ஆச்சார்ய புருஷராக அவருக்குள் தேஜஸ் குடிகொண்டது.
திருக்கோளூரில், தோன்றிய மதுரகவி ஆழ்வார் மாறனின் மகிமையை உணர்ந்து பூரித்தார்.
'நீங்களே என் ஆச்சார்யர்' என வணங்கினார்.
பிறகு மாறனுக்குப் பணிவிடை செய்வதையே தனது கடமையாக கொண்டு அவருடனேயே இருந்தார்.
மாறன் என்கிற நம்மாழ்வார், பகவானிடம் இருந்து தாம் பெற்ற சிறப்புகளையெல்லாம் பாசுரங்களாகப் பாடி அருளினார்.
'திருவிருத்தம்' 'திருவாசிரியம்' பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிய அற்புதமான நூல்களை உலகுக்கு அளித்தார் அதனால்தான் ஆழ்வார்களில் தலைவராக நம்மாழ்வார் கொண்டாடப்படுகிறார்.
பெருமாளின் திருவடியில் நிலையாக சடாரியாகத் திகழ்கிறார் நம்மாழ்வார்.
அதனை சடாரி, சடகோபன் என்றெல்லாம் சொல்கிறோம்.
மாறன், காரிமாறன், சடகோபன், பராங்குசன், குருகைப்பிரான், திருக்குருகூர் நம்பி, வகுளாபரணன், அருள்மாறன், தென்னரங்கள், பொன்னடி, திருநாவீறு டைய பிரான் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
என்றாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் இவர், நம் ஆழ்வார் என அழைத்ததால், அவருக்கு நம்மாழ்வார் எனும் பெயரே நிலைக்கப் பெற்றது.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 1,269 பாசுரங்களை இனிக்க இனிக்கப் பாடி பரம்பொருளைப் போற்றியுள்ளார் நம்மாழ்வார்.
39 திவ்விய தேசங்களின் அருள் சிறப்படையும் போற்றி பாடியுள்ளார் அவரை வணங்கினால் வளம் பெறலாம்.
- ஓம் சிவக்குமரா போற்றி!
- ஓம் சிவக்கொழுந்தே போற்றி!
ஓம் அப்பா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் அழகா போற்றி
ஓம் அருவே போற்றி
ஓம் உருவே போற்றி
ஓம் அபயா போற்றி
ஓம் அதிகா போற்றி
ஓம் அறுபடையோய் போற்றி
ஓம் ஆறுமுகத்தரசே போற்றி
ஓம் ஆதி போற்றி
ஓம் அனாதி போற்றி
ஓம் இச்சை போற்றி
ஓம் கிரியை போற்றி
ஓம் இறைவா போற்றி
ஓம் இளையோய் போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் நேசா போற்றி
ஒம் உத்தமா போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உமைபாலா போற்றி
ஓம் எளியோய் போற்றி
ஓம் எண்குணா போற்றி
ஓம் ஏகா போற்றி
ஓம் அனேகா போற்றி
ஓம் ஒலியே போற்றி
ஓம் சுடரொளியே போற்றி
ஓம் கந்தா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் காவலா போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி
ஓம் குகனே போற்றி
ஓம் குமரா போற்றி
ஓம் குறவா போற்றி
ஓம் குன்றுதோர் நின்றாய் போற்றி
ஓம் சரவணா போற்றி
ஓம் சண்முகா போற்றி
ஓம் சத்தியசீலா போற்றி
ஓம் சிட்டானே போற்றி
ஓம் சிவக்குமரா போற்றி
ஓம் சிவக்கொழுந்தே போற்றி
ஓம் சித்தி போற்றி
ஓம் முத்தி போற்றி
ஓம் தலைவா போற்றி
ஓம் தவப்புதல்வா போற்றி
ஓம் தணிகைமுருகா போற்றி
ஓம் சூரா போற்றி
ஓம் வீரா போற்றி
ஓம் சுப்ரமண்யா போற்றி
ஓம் செந்தமிழா போற்றி
ஓம் செங்கல்வராயா போற்றி
ஓம் சேவலா போற்றி
ஓம் சேனாதிபதியே போற்றி
ஓம் ஞானபண்டிதா போற்றி
ஓம் தூயோய் போற்றி
ஓம் துறையே போற்றி
ஓம் நடுவா போற்றி
ஓம் நல்லோய் போற்றி
ஓம் நாதா போற்றி
ஓம் போதா போற்றி
ஓம் நாவலா போற்றி
ஓம் பாவலா போற்றி
ஓம் நித்தியா போற்றி
ஓம் நிமலா போற்றி
ஓம் பொன்னே போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் புலவா போற்றி
ஓம் பூரணா போற்றி
ஓம் மன்னா போற்றி
ஓம் மயிலோய் போற்றி
ஓம் மறையே போற்றி
ஓம் மணக்கோலா போற்றி
ஓம் மாசிலாய் போற்றி
ஓம் மால்முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் முத்தையா போற்றி
ஓம் மூவர்க்கும் மேலோய் போற்றி
ஓம் வரதா போற்றி
ஓம் விரதா போற்றி
ஓம் விவேகா போற்றி
ஓம் விசாகா போற்றி
ஓம் விதியே போற்றி
ஓம் கதியே போற்றி
ஓம் விண்ணோர் தொழும் விமலா போற்றி
ஓம் குஞ்சரிமணாளா போற்றி
ஓம் பரங்குன்றின் பரமா போற்றி
ஓம் சூரனைமாய்த்தோய் போற்றி
ஓம் செந்தில் செவ்வேலா போற்றி
ஓம் ஆண்டியாய் நின்றாய் போற்றி
ஓம் ஆவினன் குடியோய் போற்றி
ஓம் ஏரகப் பெருமான் போற்றி
ஓம் எம்பிரான் குருவே போற்றி
ஓம் வள்ளி மணாளா போற்றி
ஓம் வளர் தணிகேசா போற்றி
ஓம் சோலையில் செல்வா போற்றி
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி
ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
ஓம் செறுக்கினை அறுப்பாய் போற்றி
ஓம் சினம் காமம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் அவாவினை அழிப்பாய் போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் அனைத்தும் நீயே போற்றி
ஓம் அருள்வாய் வள்ளி மணாளா போற்றி
ஓம் தேவசேனா சண்முகா போற்றி போற்றி போற்றியே!
- முதலில் இங்கு 12 கருட சேவை தான் நடந்தது. பின்னாளில் 23 கருட சேவையாக அதிகரித்துள்ளது.
- வாழ்வில் ஒருமுறையேனும் கருட சேவையைத் தரிசித்தால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும்.
தஞ்சையில் அரக்கர்களின் அட்டூழியத்தால் கலங்கிப்போன மக்களுக்காக, திருமாலை நினைத்து பராசர முனிவர் தவம் இருந்தார்.
அவருக்கு காட்சி தந்த நாராயணர், அரக்கர்களை அழித்தார்.
தஞ்சகாரனை அழித்த ஸ்ரீநரசிம்மர் தஞ்சை ஆளிநகர் ஸ்ரீவீர நரசிம்ம பெருமாள் கோவிலில் உள்ளார்.
தண்டகாசுரனை வராக மூர்த்தமாக வந்து அழித்தவர் தஞ்சை மாமணிக் கோவிலான ஸ்ரீநீலமேகப் பெருமாள் திருக்கோவிலில் உள்ளார்.
அருகிலேயே ஸ்ரீமணிகுன்றப் பெருமாள் கோவிலும் உள்ளது.
அருகருகே அமைந்துள்ள இந்த மூன்று ஆலயங்களையும் சேர்த்து, ஒரே திவ்விய சேத்திரமாகப் போற்றுகின்றனர்.
இங்கே நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, தஞ்சை மாவட்ட மக்கள் ஒன்று திரள்வார்கள்.
வைகாசியின் பூச நட்சத்திர நாளில், கொடியேற்றத்துடன் துவங்குகிற பிரம்மோற்சவ விழா, வம்புலாஞ்சோலை அமிர்த புஷ்கரணியில், தீர்த்தவாரியுடன் நிறைவுபெறும்.
பிரம்மோற்சவம் முடிந்த ஒரே வாரத்தில் இங்கே கருடசேவை நடைபெறும்.
அப்போது, அருகில் உள்ள ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள், கரந்தை ஸ்ரீகிருஷ்ணர், வேலூர் ஸ்ரீவரதராஜர், படித்துறை ஸ்ரீவெங்கடேச பெருமாள், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட 23 ஆலயங்களின் பெருமாளும் ஒரே இடத்தில் அணிவகுத்து கருடசேவையில் காட்சி தருவார்கள்.
இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
முதலில் இங்கு 12 கருட சேவை தான் நடந்தது. பின்னாளில் 23 கருட சேவையாக அதிகரித்துள்ளது.
வாழ்வில் ஒருமுறையேனும் கருட சேவையைத் தரிசித்தால், பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும்.