என் மலர்
நீங்கள் தேடியது "Vaikam struggle"
- பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
- அனைவருக்கும் கி.வீரமணி, பெரியார் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
சென்னை:
இந்திய சமூக நீதிப் போரில் முதல் களம் வைக்கம் போராட்டம் ஆகும்.
கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து 1924-ம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது கேரள தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி இந்த போராட்டத்திற்கு நீங்கள் வந்துதான் உயிர் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்த கடிதம் கிடைத்ததும், தந்தை பெரியார் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு வந்து, வைக்கம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.
இந்த போராட்டம் அப்போது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மக்கள் திரண்டு வந்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். இதனால் தந்தை பெரியார் 2 முறை கைதானார். முதல் முறை ஒரு மாதமும், 2-ம் முறை 6 மாதமும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் கை, கால்களில் சங்கிலியால் பிணைக்கப் பட்டு அவர் சிரமப்படுத்தப்பட்டார். அந்த சமயத்தில் திருவாங்கூர் மகாராஜா இயற்கை எய்ததால், ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார்.
அதுமட்டுமின்றி வைக்கம் தெருவில் நடக்கக் கூடாது என்ற தடையையும் ராணி நீக்கினார். இதனால் பெரியாரின் போராட்டம் வெற்றி யில் முடிந்து 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார்.
இந்த போராட்ட வெற்றி யின் 100-ம் ஆண்டை குறிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட் டம் நூற்றாண்டு சிறப்பு விழா சென்னை நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. திடீரென இன்று காலையில் வேப்பேரி பெரியார் திடலுக்கு விழா மாற்றப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்றே சென்னை வந்துவிட்டார். அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்று தங்க வைத்தனர்.
இன்று காலையில் விழா நடைபெற்ற வேப்பேரி பெரியார் திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஒருசேர வந்தனர். அவர்களை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றார்.
அதன் பிறகு அங்கிருந்த பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
அதன் பிறகு பெரியார் திடலில் உள்ள நினைவு தூண் அருகே விழா நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரியார் நினைவுப் பரிசு வழங்கினார்.
அதனை தொடர்ந்து நூற்றாண்டு விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடை பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூற்றாண்டு மலரை வெளியிட அதை பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார்.
அதே போல் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பெரியாரும் வைக்கம் போராட்டமும் என்ற நூலை வெளியிட அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா. மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., பரந்தாமன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் கி.வீரமணி, பெரியார் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிகள் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது.
- தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது.
- மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக தமிழ்நாடு அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்து உள்ளது. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவற்றால் நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டு உள்ளது. ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது.
திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.