என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vajpayee"

    முன்னாள் மத்திய மந்திரியும், ஒடிசா மாநில சட்டசபை உறுப்பினருமான திலிப் ரே பா.ஜ.க.வில் இருந்து இன்று திடீரென விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DilipRay #DilipRayresigns #RourkelaMLA #quitsBJP
    புவனேஸ்வர்:

    மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சிக்காலத்தில் நிலக்கரித்துறை இணை மந்திரியாக பதவி வகித்தவர் திலிப் ரே.

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குடன் பல ஆண்டுகளாக மோதல் போக்கை கடைபிடித்துவந்த இவர் ரூர்கேலா தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ளார்.

    கோப்புப்படம்

    இந்நிலையில், ரூர்கேலா எம்.எல்.ஏ. என்ற முறையில் தனது தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும், இந்த முடிவு தனக்கு வேதனை அளிப்பதாகவும்  திலிப் ரே தெரிவித்துள்ளார்.  #DilipRay #DilipRayresigns #RourkelaMLA #quitsBJP
    வாஜ்பாய் அஞ்சலி கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்த சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா மந்திரிகள் இருவரை நீக்க வேண்டும் என்று வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லா வலியுறுத்தி உள்ளார். #Vajpayee #KarunaShukla #BJP
    ராய்ப்பூர்:

    மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு நினைவு அஞ்சலி செலுத்தும் கூட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சமீபத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா மந்திரிகளான பிரிஜி மோகன் (வேளாண்மை துறை), அஜய் சந்திரசேகர் (சுகாதாரத்துறை) ஆகியேர் ஒருவருக்கொருவர் சிரித்து பேசி கொண்டு இருந்தனர். அருகே இருந்த மற்றொரு மந்திரியும், மாநில பா.ஜனதா தலைவருமான தர்மலால் கவுசிக் அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    வாஜ்பாய் நினைவு கூட்டத்தில் 2 மந்திரிகள் சிரித்து பேசிய அந்த வீடியோ வைரலாக பரவியது.

    இந்த நிலையில் வாஜ்பாய் அஞ்சலி கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்த சத்தீஷ்கர் மாநில பா.ஜனதா மந்திரிகள் இருவரையும் நீக்க வேண்டும் என்று வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நினைவு கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்தன் மூலம் பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயை 2 மந்திரிகளும் அவமதித்து விட்டனர். அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் சிரிப்பது மிகவும் அவமான ஒன்றாகும். வாஜ்பாய்க்கு அவமரியாதை ஏற்படுத்திய அந்த 2 மந்திரிகளையும் உடனடியாக டிஸ்மிஸ் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாஜ்பாய் அஸ்தியை வைத்து அரசியல் செய்வதாக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மீது கருணா சுக்லா ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.

    கருணா சுக்லா முதலில் பா.ஜனதாவில் இருந்தார். 2013-ல் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். #Vajpayee #KarunaShukla #BJP
    திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. #DMK #DMKGeneralCouncilMeeting
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி, சுர்ஜித் சிங் பர்னாலா, கோபி அன்னான் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் கேரளாவில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.



    இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவிக்க உள்ளார்.  #DMK #DMKGeneralCouncilMeeting
    தமிழக பாஜக சார்பில் நாளை நடக்க உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவேந்தல் கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார், கனிமொழி எம்.பி, திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர். #Vajpayee #BJP
    சென்னை:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாளை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கத்தில் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்க உள்ளது. தமிழக பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், அமைச்சர் ஜெயக்குமார், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாமக தலைவர் கோ.க மணி, விசிக தலைவர் தொல்.திருமாவளனன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமாகா துணைத்தலைவர் ஞானதேசிகன், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முஸ்லிம் லிக் கட்சி எம்.எல்.ஏ அபு பக்கர், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சன்முகம், இந்திய கம்யூ. மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மா. கம்யூ. மத்திய குழு உறுப்பினர் சம்பத், லோக் ஜனசக்தி தலைவர் வித்யாதரன் ஆகியோரும் கலந்து கொண்டு பேச உள்ளனர். 
    டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படுவதாக வெளியான செய்திக்கு டெல்லி மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. #RamlilaMaidan ##RamlilaMaidanrename
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு முழு மரியாதையுடன் டெல்லி ஸ்மிருதி ஸ்தல் திடலில் தகனம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது அஸ்தி மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்கு வடக்கு டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வரும் மாநகராட்சி கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.  இதை டெல்லி வடக்கு மாநகராட்சி மேயர் ஆடேஷ் குப்தா இன்று மறுத்துள்ளார்.

    டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை சூட்டும் திட்டம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி, ‘இவ்விவகாரத்தில் சிலர் வதந்தியை உருவாக்க நினைக்கிறார்கள், நாம் அனைவரும் ராமரை வழிபாடு செய்பவர்கள். எனவே, ராம்லீலா மைதானத்தின் பெயரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை’ என தெரிவித்திருந்தார். #RamlilaMaidan ##RamlilaMaidanrename 
    டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. #RamlilaMaidan #VajpayeeName
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு முழு மரியாதையுடன் டெல்லி ஸ்மிருதி ஸ்தல் திடலில் தகனம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது அஸ்தி மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்கு வடக்கு டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வரும் மாநகராட்சி கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    இதுபற்றி வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ஆர்தர் குப்தா கூறுகையில், “ராம்லீலா மைதானம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த  மைதானத்தில் நடைபெற்ற பல்வேறு பொதுக்கூட்டங்களில் வாஜ்பாய்  உரையாற்றியிருக்கிறார். அதனால் அவரது நினைவாக மைதானத்தின் பெயரை அடல் பிகாரி வாஜ்பாய் ராம்லீலா மைதானம் என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாநகராட்சி மருத்துவமனைக்கும் அவரது பெயர் சூட்டப்படும். வரும் 30-ம் தேதி இது தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்படும்” என்றார்.


    ராம்லீலா மைதானத்தில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க போராட்டங்கள் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் இங்கு போராட்டம் நடத்தி உள்ளனர். ராம்தேவ் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராட்டம் நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. #RamlilaMaidan #VajpayeeName
    மறைந்த முன்னாள் பிரதமரின் நினைவாக சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரி சபை முடிவெடுத்துள்ளது. #Chhattisgarh #Vajpayee
    ராய்ப்பூர்:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது  உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் மறுநாள் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது, அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. 

    இந்த நிலையில், வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் அவரை கவுரவித்து வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான புதிய ராய்ப்பூரின் பெயரை 'அடல் நகர்' என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த் கான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வாஜ்பாயின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    அதேபோல, வாஜ்பாய் பிறந்த குவாலியர் மற்றும் போபால் ஆகிய நகரங்களில், வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறுகுறித்து பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்க இருப்பதாக மத்தியப்பிரதேச கல்வித் துறை அறிவித்திருக்கிறது. 
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மக்களுக்காகவே வாந்தவர் என டெல்லியில் இன்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். #PMModi #AtalBihariVajpayee
    டெல்லி:

    பாஜகவின் நிறுவன தலைவரும் மூன்று முறை இந்திய பிரதமராகவும் பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி வயோதிகம் காரணமாக காலமானார். அவரது உடல் மறுநாள் எரியூட்டப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் வாஜ்பாய்க்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நிஹாரிகா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.



    பிரதமர் மோடி பேசுகையில், “வாஜ்பாய் மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அரசியலுக்கு வரும் போது இங்கு ஒரு குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை இருந்தது. எந்த அழுத்தத்துக்காகவும் தனது முடிவில் பின்வாங்காதவர். பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலேயே அவர் இருந்தாலும் தனது கொள்கையில் என்றும் சமரசம் செய்தது இல்லை” என பேசினார்.

    பாஜக மூத்த தலைவர் அத்வானி, “பல பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறேன். ஆனால், வாஜ்பாயின் நினைவு கூட்டத்தில் பேசுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. 65 ஆண்டுகளாக அவருடன் பழகியிருக்கிறேன். ஒன்றாக சினிமா பார்த்துள்ளோம். ஒன்றாக பல இடங்களில் சுற்றியுள்ளோம்” என தனது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதி சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தான் குழுவில், மும்மை குண்டுவெடிப்பு பயங்கரவாதி டேவிட் ஹேட்லி தம்பியும் இடம்பெற்றிருந்தார். #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறுதிச்சடங்கில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    பாகிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் தூதர் சொகைல் முகமது, சட்ட மந்திரி சையதுஅலி ஷாபர் உள்ளிட்ட 5 பேர் குழு பங்கேற்றது. இந்த குழுவில் தன்யாள்கிலானி என்பவரும் இடம்பெற்றிருந்தார்.

    இவர் பாகிஸ்தானில் மத்திய சினிமா தணிக்கை குழு தலைவராக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

    ஆனால் இவர் மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி டேவிட் ஹேட்லியின் தம்பி என்று தெரியவந்துள்ளது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

    இந்த தாக்குதலுக்கு டேவிட் ஹேட்லிதான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தான். தாக்குதல் நடப்பதற்கு முன்பு இந்தியாவிற்குள் ரகசியமாக வந்த அவன் மும்பை சென்று எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என முன்கூட்டியே ஆய்வு செய்தான்.

    டேவிட் ஹேட்லி

    பின்னர் பயங்கரவாதிகளை அனுப்பிய அவன் பாகிஸ்தானில் இருந்தபடி சாட்டிலைட் போன்மூலம் எங்கெங்கு தாக்குதல் நடத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று பயங்கரவாதிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

    அமெரிக்காவில் குடியுரிமை பெற்றிருந்த அவன் பின்னர் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டான். தற்போது அமெரிக்க ஜெயிலில் இருக்கிறான்.

    அவருடைய தம்பி தன்யாள்கிலானி வாஜ்பாய் இறுதி சடங்கில் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் தன்யாள்கிலானி டேவிட் ஹேட்லியின் தம்பி என தெரிந்திருந்தும் அவரை இந்தியாவிற்கு வர விசா வழங்கி உள்ளனர். இறுதிசடங்கில் பங்கேற்கவும் அனுமதி அளித்துள்ளனர்.

    இதுபற்றி வெளியுறவு துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தன்யாள் கிலானி, டேவிட் ஹேட்லியின் தம்பியாக இருந்தபோதும் அவர் மீது பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக எந்த புகாரும் இல்லை.

    இந்தியா தரப்பில் இருந்து அவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவில்லை. எனவே பாகிஸ்தான் அரசு குழுவில் அவர் வருவதால் நம்மால் தடுக்க முடியாது என்று கூறினார்கள்.  #AtalBihariVajpayee
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாளை (செவ்வாய்க் கிழமை) சென்னை கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee
    சென்னை:

    முன்னாள் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.



    அந்த வகையில், டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், அவரது அஸ்தியும் வைக்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒவ்வொரு மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் வாஜ்பாயின் அஸ்தி வழங்கப்பட இருக்கிறது. அவர்கள் அதை பெற்றுவந்து, தங்களது மாநிலங்களில் உள்ள முக்கிய நதிகளில் அஸ்தியை கரைக்க இருக்கின்றனர்.

    வாஜ்பாயின் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

    வாஜ்பாயின் அஸ்தி நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை கொண்டுவரப்பட இருக்கிறது. தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு, தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது. சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம், ராமேசுவரம் கடல், கன்னியாகுமரி கடல், மதுரையில் வைகை ஆறு, ஈரோட்டில் பவானி ஆறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு ஆகிய இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது.  #AtalBihariVajpayee #tamilnews
    முன்னாள் பிரதமர் 'பாரத ரத்னா’ அட்டல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தி இன்று ஹரித்துவார் நகரில் கங்கைல் ஆற்றில் கரைக்கப்பட்டது. #AtalBihariVajpayee
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.

    பன்னா லால் பல்லா நகராட்சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை பிரேம் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் புனித நதியான கங்கையின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் பகுதிக்கு சென்று சேர்ந்தது.


    புரோகிதர்கள் மந்திரம் ஓத, ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளும், அவரது சிதைக்கு தீமூட்டியவருமான நமிதா கலசத்தில் இருந்த வாஜ்பாயின் அஸ்தியை கங்கை நீரில் கரைத்தனர்.

    இந்த சடங்கில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், வாஜ்பாயின் பேத்தி நிஹாரிக்கா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #RIPVajpayee #AtalBihariVajpayee #VajpayeeAsthiimmersed
    ஆண்கள் மட்டுமே சிதைக்கு தீ மூட்ட வேண்டும் என்ற பாரம்பரிய வழக்கத்தை உடைத்த வாஜ்பாய் வளர்ப்பு மகளுக்கு, புதிய கவுரவத்தை ஏற்படுத்தி தந்துள்ளார். #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகன் நமிதா கவுல் பட்டாச்சார்யா தீமூட்டி இறுதி சடங்குகளை செய்தார்.

    வாஜ்பாய் திருமணம் ஆகாதவர். எனவே, நமிதா கவுலை வளர்ப்பு மகளாக எடுத்து வளர்த்து வந்தார்.

    பொதுவாக இந்துக்களின் மரபுப்படி பெற்றோரின் சிதைக்கு மகன் தீ மூட்ட வேண்டும். அப்படிஇல்லாத பட்சத்தில் நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் மகன் உறவு கொண்ட ஒரு ஆண் தீ மூட்ட வேண்டும்.பெண்கள் தீ மூட்டுவதற்கு அனுமதிப்பது இல்லை.

    வாஜ்பாய் குடும்பத்திலும் இதே நடைமுறைதான் இருந்து வந்தது. இறந்தவருடைய மகன் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருந்து வர முடியாத நிலை இருந்தாலும், ஆண் வாரிசு இல்லை என்றாலும் உறவினரில் ஒரு ஆண்தான் தீ மூட்ட வேண்டும் என்று விதிகளை வகுத்துள்ளனர்.

    ஆனால், வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா கவுல் தீ மூட்டினார். இது, பாரம்பரிய பழக்கத்தை மீறும் செயல் என சர்ச்சை எழுந்துள்ளது.

    ஆனாலும், நமிதா கவுல் செய்தது சரியானது என்று பல பெண்கள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.

    டெல்லியை சேர்ந்த பேராசிரியை கியா சவுத்ரி கூறும்போது, பெண்களை சுடுகாட்டுக்கு செல்ல அனுமதி மறுப்பது, இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்காதது போன்ற பழக்கங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது.

    எங்கள் வீட்டில் ஆண் வாரிசு இல்லை. எனது தாயார் இறந்த போது நான் தான் தீ மூட்டினேன். அடுத்து எனது தந்தைக்கும் நான் அதை செய்வேன்.

    நான் அவர்களுக்கு ஒரே மகள். என்னை அவர்கள் ஒரு ஆண் மகன் போலவே வளர்த்தார்கள். ஆண் மகன் போன்ற கடமையை நான் செய்கிறேன் என்று கூறினார்.

    மகள்களையும் இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே சமூக அமைப்புகளை சேர்ந்த பெண்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பெண்கள் பிரசாரமும் செய்து வருகிறார்கள்.

    கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி மதுநாயர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

    அப்போது மதுநாயரின் விருப்பப்படி அவரது மகள்கள் தான் சிதைக்கு தீ மூட்டினர். இதனால் அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மகள்கள் தீ மூட்டினால் இறந்தவர் மோட்சத்துக்கு செல்ல முடியாது என்று அவர்கள் வாதிட்டார்கள்.

    மராட்டிய மாநிலம் குபாரி என்ற இடத்தில் இறந்தவர் ஒருவருக்கு அவரது மகள்கள் தீ மூட்ட முயற்சித்தனர். அப்போது உறவினர்கள் அவர்களை தள்ளி விட்டு விட்டு உறவினரில் ஒரு ஆண் சிதைக்கு தீ மூட்டினார்.

    இது சம்பந்தமாக அந்த பெண்கள் கூறும்போது, வாஜ்பாய் உடலுக்கு அவரது வளர்ப்பு மகள் தீ மூட்டியதை நாங்கள் பார்த்தோம். இது, பெண்களுக்கு கிடைத்த உரிமையாக கருதுகிறோம் என்று கூறினார்கள்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் இறந்த ஒருவருக்கு அவரது மகள் தீ வைத்ததற்காக கிராம பஞ்சாயத்தார் அந்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்தனர். அவர்களுக்கு யாரும் உணவு மற்றும் எந்த பொருளும் வழங்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

    மராட்டிய பாரதிய ஜனதா தலைவர கோபிநாத் முண்டே 2014-ல் மரணம் அடைந்தார். அப்போது கூட அவரது மகள் பங்கஜ் முண்டேதான் சிதைக்கு தீ மூட்டியது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் வாஜ்பாய் உடலுக்கு நமிதா கவுல் தீ மூட்டி பெண்களுக்கும் உரிமை உள்ளது என்பதை நிலைநாட்டி உள்ளார்.

    இதற்கிடையே வாஜ்பாய் அஸ்தியை கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இது சம்பந்தமாக வாஜ்பாய் குடும்ப பூசாரிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

    வாஜ்பாயின் பூர்வீக ஊர் பதேஸ்வர் ஆகும். ஆனால், வாஜ்பாய் குடும்பத்தினர் நீண்ட காலமாக குவாலியரில் வசித்து வந்தனர். அங்கு தான் வாஜ்பாய் பிறந்தார்.

    இப்போது பதேஸ்வர் மற்றும் குவாலியரில் இருந்து 3 பூசாரிகள் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் நான்தான் வாஜ்பாய் அஸ்திக்கு சடங்கு செய்யும் அதிகாரம் கொண்டவன் என்று வாதிட்டு வருகிறார்கள்.

    இது சம்பந்தமாக கங்கா சபா என்ற அமைப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

    ×