என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Vallavan
நீங்கள் தேடியது "Vallavan"
மன்மதன், வல்லவன் படத்தின் ரீமேக் உரிமை விவகாரம் குறித்து டி.ராஜேந்தர் நேற்று புகார் அளித்த நிலையில், சிம்பு ஏற்படுத்திய நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை என்று தயாரிப்பாளர் தேனப்பன் புகார் கூறியுள்ளார். #STR #Simbu #PLThenappan
நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ‘என் மகன் சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் ஆகிய 2 படங்களின் டப்பிங், ரீமேக் உரிமையும் என்னிடம் உள்ளது.
ஆனால் அதை விற்க தயாரிப்பாளர் பிஎல். தேனப்பன் முட்டுக்கட்டை போடுகிறார்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த குற்றசாட்டுக்கு பதில் அளித்து தயாரிப்பாளர் பிஎல்.தேனப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எனது நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான வல்லவன் படத்தின் இந்தி மற்றும் வட இந்திய உரிமை என் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.
அந்த உரிமையை எஸ்.என் மீடியா என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டேன். இன்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இந்த உரிமைகள் தன்னிடம் உள்ளதாக கூறியிருக்கிறார். இந்த உரிமையை வாங்கியவர்கள், விற்றவர்கள் மீது பழி சுமத்தும் விதமாக பேசியுள்ளார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812251257255971_1_STR-Simbu-PL-Thenappan2._L_styvpf.jpg)
நான் வல்லவன் படத்தை தயாரித்து அதில் சிம்புவை இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். ஆனால் அவரது ஒத்துழையாமையால் படத்தின் பட்ஜெட் பல மடங்காகி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றும் மீள முடியாமல் தவித்து வருகிறேன். என்னை போலவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவரால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து தவிப்பது திரையுகத்துக்கே தெரியும்.
இந்நிலையில் என்னையும் எனது 35 ஆண்டுகால திரையுல அனுபவத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் பேசிய டி.ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறேன். என் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். இது தொடர்பாக போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #STR #Simbu #PLThenappan
×
X