என் மலர்
நீங்கள் தேடியது "Varalakshmi"
முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கன்னிராசி’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #Kannirasi
விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னிராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து விரைவில் படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Kannirasi
பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவம் குறித்து நடிகைகள் ஆவேசமாக கருத்து கூறியிருக்கிறார்கள். #PollachiAbuseCase #PollachiCase
பொள்ளாச்சியில் பெண்கள் பலர் பாலியல் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சம்பவத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
‘பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தை தாண்டி வரவேண்டும். ஒரு சிலர் செய்யும் தவறால் நாம் நல்ல ஆண்களையும் தவறாக பார்க்க வேண்டியிருக்கிறது.
மற்ற நாடுகளில் இது மாதிரி விஷயங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார்களோ அதைக் கொடுத்தால்தான் அடுத்து பண்ணணும்னு நினைக்கிறவர்களும் பயப்படுவார்கள். இதை அரசியலாக மட்டும் மாற்றி விடாதீர்கள். இவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்காமல் விட்டு விடாதீர்கள்.

யாரையும் நம்பாமல் நம்மால் வாழ முடியாது தான். அதேநேரம் நீங்கள் நம்புகிற, காதலிக்கற யாராக இருந்தாலும் சரி, அவருடன் பைக்கிலோ, காரிலோ தனியாக போவதை தவிர்த்து விடுங்கள். சந்திக்கிற இடம் பொது இடமாக இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பையில் ஒரு தற்காப்பு பொருளை வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் எனக் கேட்கும்போது பதறுகிறது. இன்னும் நீங்கள் மனதளவில் உறுதியுடன் இருக்க வேண்டும்.
காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படங்களின் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது:-
நட்பான குடும்பம் அமையாததே, பல பெண்கள் வெளியில் அன்பைத் தேட காரணம். வீட்டில் மனம் விட்டுப் பேசி, நட்பாய் பழக ஆட்கள் இருந்தால், எந்தப் பெண்ணிற்கும் வெளியில் அதனைத் தேட வேண்டிய தேவை இருக்காது.

வரலட்சுமி சரத்குமார் கூறும்போது,
‘பெண்ணை வைத்து விளையாடுகிறீர்களா? மீண்டும் மீண்டும் அதே கொடூர குற்றம். அப்புறம் ஒரு பக்கம் மகளிர் தினம் வேறு. இந்த சமூகத்திற்கு பெண் என்றால் இதுதான் அர்த்தமா? பொள்ளாச்சி பலாத்காரர்களை தோலுரித்துக் கொல்ல வேண்டும்.
இந்த மாதிரியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? பலாத்காரத்துக்கு மரண தண்டனை. இது மட்டும்தான் ஒரே வழி.
நடிகை ராசிகன்னா கூறும்போது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னை மிகவும் பாதிக்கிறது. நடந்தது எல்லாம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில் ‘இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்கார், சண்டகோழி 2 படத்தை தொடர்ந்து, பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். #Varalakshmi
கடந்த ஆண்டு சர்கார், சண்டகோழி 2 ஆகிய படங்களில் நடித்த வரலட்சுமியின் கைவசம் வெல்வட் நகரம், கன்னி ராசி, நீயா 2, காட்டேரி, டேனி, கன்னித்தீவு உள்ளிட்ட படங்கள் உள்ளன.
இந்நிலையில் ராஜ பார்வை படத்திலும் நடித்து வருகிறார். ஜே.கே இயக்கும் இந்தப் படத்தில் கத்தியை லாவகமாகச் சுற்றும் காட்சி இடம்பெறுகிறது.
அதற்காக நிஜக் கத்தியை அவர் பிடிப்பதை வீடியோ பதிவாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பெண்கள் சண்டையிட முடியாது என்று யார் சொன்னது? நிஜக் கத்தியுடன் ராஜ பார்வை படத்திற்காக பயிற்சி செய்கிறேன்.

பயிற்சியே முழுமையைத் தரும் அப்போது மிகுந்த மகிழ்ச்சியைப் பெறலாம். இதை படம் பிடித்த சிகை அலங்கார கலைஞர் ஸ்ரீதருக்கு நன்றி” என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் வரலட்சுமி பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார்.
எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி. கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி இருக்கும் `நீயா 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் லட்சுமி ராயால் ஜெய் சங்கடத்திற்குள்ளானார். #Neeya2 #Jai
கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா'. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2' என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது.
படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் இயக்குநர் எல்.சுரேஷ், ஜெய், ராய் லட்சுமி, பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
பொதுவாக பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நடிகர் ஜெய் நீயா 2 படத்திற்காக பங்கேற்றிருந்தார். அவர் பேசும்போது,
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார். முடிவில் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜெய் மற்றும் ராய் லட்சுமி இணைந்து புகைப்படம் எடுத்தனர். அப்போது ராய் லட்சுமி போட்டிருந்து காலணியின் ஹீல்ஸ் மிக உயராக இருந்ததால், நாயகியுடன் சிரமப்பட்டுக் கொண்டு ஜெய் நின்றுள்ளார்.

படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Neeya2 #Jai #RaaiLaxmi
தமிழில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், முதல்முறையாக புதிய படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆக இருக்கிறார். #Varalakshmi
கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது பயணத்தை மாற்றி வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.
இவரது நடிப்பில் தற்போது ‘வெல்வெட் நகரம், கன்னிராசி, நீயா 2, காட்டேரி, ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், முதல் முறையாக தெலுங்கு படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

சந்தீப் கிஷன், ஹன்சிகா நடிக்க இருக்கும் புதிய படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். நாகேஷ்வர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார். #Varalakshmi #Danny
கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது பயணத்தை மாற்றி வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.
அடுத்ததாக காமெடியிலும் களமிறங்கத் தொடங்கி உள்ளார். அறிமுக இயக்குனர் சந்தானமூர்த்தி இயக்கும் புதிய படம் டேனி. முத்தையா, தீபா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜனவரி 7-ம் தேதி இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வில்லத்தனமான கேரக்டரில் நடித்துவந்த வரலட்சுமி முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் காமெடிக்கு மாறியுள்ளார். இதன் திரைக்கதையில் நாய் ஒன்று முக்கிய இடம் வகிக்கிறது.

வரலட்சுமி கதாபாத்திரத்துடன் இணைந்து பயணிக்கும் விதமாக அந்த நாய் இடம் பெறுகிறது. அந்த நாயின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள வரலட்சுமி, “பெரிய நட்சத்திரம் இவள். டேனி படத்தில் தனது காட்சிக்காக காத்திருக்கிறாள்.
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான். இவளோடு இணைந்து பணியாற்றுவது விருப்பமானதாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இப்படத்திற்கு ஆன்ந்த்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பாசில் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
மாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், ஒரு பக்தனாக அவர் முன்னாடி நின்றது என்னால் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார். #Dhanush #Maari2
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், ‘எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி. எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன். மாரி நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும்.
மாரி 2 படத்தோட வெற்றிக்கு பின் பாகம் 3 பத்தி யோசிக்கணும். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார். அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம். நான் எழுதிய வரியை பார்த்து, முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் சம்மந்தமே இல்லை என்றார். பின்னர் படித்து பார்த்து பாடி கொடுத்தார்.

என் கிட்ட ஒரு சில வீடியோக்கள் இருக்கிறது அதை அப்புறம் பகிர்கிறேன். ஒரு குழந்தையாக, ஒரு பக்தனாக அவர் முன்னாடி நின்ற சில நேரங்கள் என்னால் மறக்கவே முடியாது’ என்றார்.
எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி இருக்கும் நீயா 2 படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Neeya2 #Jai
கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா'. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2' என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. கதைக்கு தேவைப்பட்டதால் `நீயா 2' என்று பெயர் வைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் எல்.சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்டியாக படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். மேலும் ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட் கைப்பற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். #Neeya2 #Jai
வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் நாளை வெளியிட இருக்கிறார். #Dhanush #Varalakshmi #VelvetNagaram
‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது.
தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வெல்வெட் நகரம் படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை படத்தை அடுத்து, தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மார் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Maari2 #Dhanush
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ‘மாரி 2’ உருவாகி இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெறும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பாக ரிலீஸ் ஆனது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Maari2 #Dhanush
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் கொண்டாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் முதல் தகவல் வெளியாகியுள்ளது. #Sarkar #Vijay
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்! படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படநிறுவனம் அறிவித்தது.
தற்போது அந்த அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சர்கார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை செப்டம்பர் 24ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 25ம் தேதி ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் வருவதால், முதல் பாடலை ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. #Sarkar #Vijay #SarkarKondattam
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் விமர்சனம். #MrChandramouli #Gauthamkarthik #Karthik
அப்பா, மகன் என கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கார், ரேடியோ என பழமையான பொருட்களின் மீது அதீத ஆர்வம் கொண்டவராக கார்த்திக்கும், நிகழ்கால வளர்ச்சிக்கு ஏற்ப பாக்ஸராக கவுதம் கார்த்திக்கும் வருகின்றனர்.
ஒருநாள் தனது பத்மினி காரில் வெளியே செல்லும் கார்த்திக் ரெஜினா மீது மோதி விடுகிறார். இதையடுத்து தனது வண்டியை சரிசெய்து கொடுக்கச் சொல்லி கார்த்திக்கின் காரை ரெஜினா எடுத்துச் செல்கிறார். இதையடுத்து அந்த வண்டியை சரிசெய்து ரெஜினாவை திட்டுவதற்காக கவுதம் கார்த்திக் அவளது அலுவலகத்திற்கு செல்கிறார். ரெஜினாவை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வலையில் சிக்குகிறார். உடனடியாகவே தனது காதலையும் ரெஜினாவிடம் வெளிப்படுத்துகிறார். சண்டையில் ஆரம்பிக்கும் இவர்கள் சந்திப்பு, பின்னர் காதலாக மாறுகிறது.

இதுஒருபுறம் இருக்க, கால்டாக்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் மகேந்திரன். சிறந்த சேவை வழங்குவதாக அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அடுத்த வருடம் அந்த விருதை தான் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சந்தோஷ் பிரதாப். ஆனால் அவரது கால்டாக்சியில் சில குற்றச் செயல்கள் நடக்கிறது. அதற்கு மகேந்திரன் அச்சாணி போடுகிறார்.
இந்த நிலையில், மகேந்திரனின் ஸ்பான்சர்ஷிப் மூலம் கவுதம் கார்த்திக் பெங்களூ சென்று பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று திரும்புகிறார். வெற்றி களிப்பில் இருக்கும் கவுதம் கார்த்திக்கிடம், எதையோ சொல்ல முயற்சி செய்கிறார் கார்த்திக். அதற்காக இருவரும் காரில் வெளியே செல்கின்றனர்.

அப்போது, அவர்கள் கார் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த விபத்தில் கார்த்திக் இறந்துவிடுகிறார். கவுதம் கார்த்திக்குக்கு கண்ணிற்கு செல்லும் நரம்பு அறுந்து, பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. இந்த நிலையில், வரலட்சுமி பற்றிய அதிர்ச்சியளிக்கும்படியான போஸ்ட் ஒன்று கவுதம் கார்த்திக் வீட்டிற்கு வருகிறது.
அது என்ன போஸ்ட்? வரலட்சுமி யார்? அவளுக்கு என்ன ஆனது? கார்த்திக் உயிரிழப்பு இயற்கையானதா? வரட்சுமிக்கும், கார்த்திக் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல் காட்சிகளில் துறுதுறுவெனவும், அப்பாவை இழந்து தவிக்கும் காட்சியில் கவர்ந்தும் ரசிக்க வைத்திருக்கிறார். ரெஜினா தைரியமான பெண்ணாக வந்து கவர்கிறார். ஏதேதோ ஆனேனே பாடலில் ஓரளவுக்கு கவர்ச்சியுடன் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டியிருக்கிறார்.

கார்த்திக்குக்கு தீனி போடும் கதாபாத்திரமாக, இது அமையவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும், கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார்.
கார்த்திக்குக்கு சமமான கதாபாத்திரத்தில் வரலட்சுமி ஸ்கோர் செய்திருக்கிறார். வரலட்சுமி தனது கதாபாத்திரத்தை முதிர்ச்சியான நடிப்புடன் மெருகேற்றியிருக்கிறார்.
இந்த படத்தை பொறுத்தவரை சதீஷ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் அவர் அடிக்கும் கவுண்டரும் பெரிதாக எடுபடவில்லை. காமெடி இருக்கும் என நினைத்து போனால் ஏமாற்றம் தான்.

இயக்குநர் திருவை பொறுத்தவரையில், மாறுபட்ட கதையின் மூலம் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் மனோநிலை ஒரே மாதிரியாகவே இருக்கிறது. சிரிப்பு, காதல், சண்டை, சோகம் என மாறுபட்ட உணர்ச்சிகள் இல்லாமல் கதை எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸ்யம் இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது.
சாம்.சி.எஸ். பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `மிஸ்டர்.சந்திரமௌலி' வலுவில்லை.
#MrChandramouli #Gauthamkarthik #Karthik