search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Biryani"

    பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சீரக சம்பா அரிசி சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ
    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    புதினா - ஒரு கட்டு
    கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
    பால் - கால் லிட்டர்
    தயிர் - 100 மில்லி
    எண்ணெய் - 50 மில்லி
    நெய் - 2 டீஸ்பூன்
    பட்டை, கிராம்பு, ஏலக்காய்  - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.

    அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.

    அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.

    கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

    பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நண்டில் சூப், வறுவல், கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நண்டு - 400 கிராம்
    தக்காளி - 2
    பாசுமதி அரிசி - 300 கிராம்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன்
    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    தேங்காய் பால் - கால் கப்
    தயிர் - 4 ஸ்பூன்
    கரம் மசாலா - அரை ஸ்பூன்
    பட்டை - 2
    ஏலக்காய் -5
    அன்னாசிப்பூ - 2
    மல்லித்தூள் - 1 ஸ்பூன்
    எலுமிச்சை - 1
    நெய், எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, ப.மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும்

    பின்னர் தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேக விடவும்.

    நண்டு நன்றாக வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் தம் கட்டி இறக்கினால் சுவையான நண்டு பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    பல்வேறு வகையான வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காயை வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்
    பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - ஒரு கப்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    புளித்தண்ணீர் - 2 கப்
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    தக்காளிச் சாறு - கால் கப்
    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 5
    தனியா - ஒரு டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    சின்னவெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்தரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

    பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

    வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை போட்டு வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

    புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் புதினா, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் மண்டி பிரியாணியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிதாக வெட்டிய மட்டன் - அரை கிலோ,
    வெங்காயம் - 4
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 7,
    இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
    வெண்ணெய் எண்ணெய் - தேவையான அளவு,
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ,
    கொத்தமல்லி, புதினா, உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா சிறிதளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சிறிது, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மட்டன் முக்கால் பாகம் வெந்தவுடன் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சீரக சம்பா அரிசி, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன்  அதில் வறுத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு பின்பு பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெஜ், சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் கொத்துக்கறியை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்
    சீரக சம்பா அரிசி - 300 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்
    புதினா - சிறிதளவு
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
    பிரிஞ்சி இலை - ஒன்று
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - தேவையான அளவு
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
    நெய் - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:


    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து சேர்த்து தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து, தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அரிசி முக்கால் பதம் வரும் வரை வேகவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நெய் விட்டு நன்கு புரட்டவும்.

    பின்னர் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால்... கமகம மட்டன் கொத்துக்கறி பிரியாணி ரெடி.

    குறிப்பு: சீரக சம்பா அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்துக் களையவும். அரிசி ஒரு பங்குக்கு, 2 பங்கு தண்ணீர் போதுமானது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக, சைவ பிரியாணியில் வித்தியாசம் காட்டுவது சற்று சிரமம். இன்று கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாசுமதி அரிசி சாதம் - 1 கப்
    கொண்டைக்கடலை - 1 கப்
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 2
    நெய் - 2 ஸ்பூன்
    தக்காளி சாஸ் - ½ கப்
    கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
    புதினா - 1 கைப்பிடி
    இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
    கரம் மசாலா - 1 ஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

    பாசுமதி அரிசி நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பச்சை வாசனை போனவுடன் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    எல்லாம் சேர்த்து வரும் போது உதிரியாக வடித்த சாதம் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவைத்து பரிமாறவும். 

    சூப்பரான ஆலு சுண்டல் பிரியாணி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான கராசாரமான பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பென்னே பாஸ்தா - 200 கிராம்,
    குடைமிளகாய் - 1
    கேரட், பீன்ஸ் - 1/4 கப்,
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    கொத்தமல்லி - 1/2 கட்டு
    புதினா - 1/2 கட்டு
    தயிர் - 2 கப்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
    கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்,
    தனியா தூள் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்.

    தாளிக்க…

    எண்ணெய் - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    சோம்பு - 2 டீஸ்பூன்,
    பட்டை - 2,
    கிராம்பு - 2,
    பிரிஞ்சி இலை - 2.



    செய்முறை :


    குடைமிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து முதலில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

    இப்போது மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

    காய்கள் வதங்கிய பின் தயாராக வைத்துள்ள தயிரைப் போட்டு மூடி வைக்கவும்.

    மசாலாப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வெந்து ஓரத்தில் எண்ணெய் பிரிந்து வரும் போது பாஸ்தாவைச் சேர்த்துக் கலந்த பின்னர் இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

    சூப்பரான பாஸ்தா பிரியாணி ரெடி.

    சிப்ஸ், பச்சடியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உணவு வகையில் பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரையும் கவரும் ஒரு உணவாக இருக்கிறது. இன்று சாமை அரிசியில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சாமை அரசி - 1 கப் (200 கிராம்),
    பூண்டு - 8 பல்,
    இஞ்சி துண்டு - 2 அங்குல,
    பச்சை மிளகாய் - 5
    தயிர் - கால் கப்,
    புதினா - ஒரு கைப்பிடி,
    மல்லி - ஒரு கைப்பிடி,
    கேரட், பீன்ஸ், குடை மிளகாய், நூக்கல், உருளை, பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள் - தேவையான அளவு (காய்கறிகளுடன் மஷ்ரூம், பனீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்).
    வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    பட்டை இலை - சிறிதளவு,
    எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாயை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    சாமை அரிசியை நன்கு கழுவி, 1½ கப் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.

    குக்கரில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ந்த பின் பட்டை மற்றும் பிரிஞ்சி இலையை போட்டு சிவந்தவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் லேசாக சிவந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதையும், புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் அதில் கொத்தமல்லி சேர்த்து பின்பு காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

    மேலும் இவற்றுடன் தக்காளி தயிர் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.

    பின்பு சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்க வேண்டும்.

    ஒரு கப் சாமைக்கு ஒன்றரை கப் தண்ணீர் போதுமானது. எனவே நாம் வதக்கிய காய்கறிகளில் தண்ணீர் இருக்குமானால் அந்தளவு தண்ணீரை அரிசியில் இருந்து வடித்து விட வேண்டும்.

    அரிசியை போட்ட பின் அடுப்பை முழுதாக வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி விட வேண்டும். ஆனால் வெயிட் வைக்கக்கூடாது. 15 முதல் 20 நிமிடம் ஆன பின் அடுப்பை அணைத்து லேசாக கிளறி விட வேண்டும்.

    சாமை பிரியாணி இப்பொழுது சாப்பிட தயாராக இருக்கும்.

    இதற்கு தொட்டுக் கொள்ள வழக்கமாக பிரியாணியுடன் சாப்பிடும் தயிர் வெங்காயம் பச்சடி போன்ற எதையும் வைத்துக் கொள்ளலாம்.

    வழக்கமான அரிசி பிரியாணியை விட இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சாமை மிகச்சிறிய அளவில் இருக்கும் என்பதால் பிரியாணி உதிர்வதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாப்பிடும் போது அதன் சுவையுடன் ஒப்பிடுகையில் அது ஒரு குறையாக தெரியாது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×