search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Variety Pakoda"

    இந்த குளிர் காலத்தில் மாலையில் காபி, டீயுடன் சூடாக வாழைப்பூ பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று எளிய முறையில் வாழைப்பூ பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைமாவு - 200 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை போட்டு சிறிது வதக்கி வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வதக்கிய வாழைப்பூவை போட்டு அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த ரவா பக்கோடாவை ஸ்நாக்ஸ் அல்லது டிபனாக செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவா - 2 கப்
    கடலை மாவு - 1/2 கப்
    அரிசிமாவு - 1/4 கப்
    வெங்காயம் - 2
    பச்சைமிளகாய்-  4
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையானது



    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை, கடலைமாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
    பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..

    அடுப்பில் எண்ணெய் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.

    பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

    சூப்பரான ரவா பக்கோடா ரெடி.

    பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்ற மாலை டிபன் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான பக்கோடா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    கடலை மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 6,
    இஞ்சி - சிறு துண்டு,
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி, துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு போட்டு நன்றாக கலந்த அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கோதுமை கோதுமை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலத்தில் மாலையில் டீ, காபியுடன் சாப்பிட முந்திரி பக்கோடா அருமையாக இருக்கும். இன்று முந்திரி பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முந்திரி பருப்பு - 30
    மிளகாய் வற்றல் - 4
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை
    அரிசிமாவு - கால் கப்
    கடலை மாவு - 1 கப்
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - 1 கொத்து



    செய்முறை :


    முந்திரிபருப்பை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும்.

    பிறகு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, அரைத்த மசாலா, நெய் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பின் அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து முந்திரியின் மேல் தூவவும்.

    இப்போது சுவையான முந்திரி பக்கோடா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காயில் கூட்டு, பொரியல், குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வெண்டைக்காயில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 10
    அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - அரை கப்
    மஞ்சள் தூள், மிளகு தூள் - சிறிதளவு
    சீரக தூள், தனியாத்தூள் - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    ரொட்டித்தூள் - சிறிதளவு



    செய்முறை :

    வெண்டைக்காயை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு மற்றும் மசாலா தூள் வகைகளை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் வெட்டிய வெண்டைக்காய், போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இந்த கலவையை அரைமணி நேரம் ஊற விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த வெண்டைக்காயை ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கட்டு
    கடலை மாவு- 1 கப்
    பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை:


    கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.

    சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் பன்னீர் பக்கோடா. இன்று இந்த பன்னீர் பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 2 கப்
    கடலை மாவு - 2 கப்
    சாட் மசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - தேவைக்கு
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

    கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் இந்த கலவையை பன்னீர் துண்டுகளுடன் சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் கலவை துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டீ, காபியுடன் மொறுமொறுப்பான நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பலரும் ஆசைப்படுவார்கள். இன்று மொறுமொறு சேமியா பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த சேமியா - 200 கிராம்
    வெங்காயம் - கால் கப்
    கடலை மாவு - 5 டீஸ்பூன்
    இஞ்சி - சிறிதளவு
    அரிசி மாவு - கால் கப்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாபை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சேமியா, வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியான மாவு பதத்துக்கு (பக்கோடா மாவு பதம்) கொண்டுவர வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மாவை பக்கோடாவை போல உதிர்த்து போட்டு பொரித்து எடுக்கவும்.

    மொறுமொறுப்பான சேமியா பக்கோடா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×