search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varma"

    கிரிசய்யா இயக்கத்தில் துருவ் விக்ரம் - பனிதா சந்து நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படத்தின் படப்பிபடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.

    வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா’ படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    படத்தின் பின்னணி வேலைகள் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படம் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இந்தி பதிப்பான கபீர் சிங் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைக்கிறார்.

    விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. #AdithyaVarma #DhruvVikram
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் குவித்த அர்ஜுன் ரெட்டி படத்தை விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க வர்மா என்ற பெயரில் பாலா தமிழில் இயக்கினார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் படம் திருப்தியாக இல்லை என்றும், முழு படத்தையும் கைவிட்டு மீண்டும் வேறு இயக்குனரை வைத்து படப்பிடிப்பை நடத்தப்போவதாகவும் தயாரிப்பாளர் அறிவித்தார்.

    இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி படம் துருவ் நடிக்க ஆதித்யா வர்மா என்ற பெயரில் மீண்டும் தயாரானது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வாங்காவின் உதவியாளர் கிரிசய்யா இந்த படத்தை இயக்கினார். இந்தியிலும் கபீர்சிங் என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி ரீமேக் செய்யப்பட்டது.


    கபீர் சிங் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் ஆதித்ய வர்மா படம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் ஆதித்யா வர்மா படத்தை படக்குழுவினர் கைவிட்டு விட்டதாகவும், அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தையே தமிழில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.

    இதனை படக்குழு மறுத்துள்ளது. ஆதித்ய வர்மா படத்தை கைவிடவில்லை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் போர்ச்சுக்கல் செல்கிறார்கள் என்று தயாரிப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #AdithyaVarma #DhruvVikram #BanitaSandhu

    துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா படத்தில் யூடியூப்பில் மிகவும் பிரபலமானவர் நடிக்க இருக்கிறார். #DhruvVikram #AdithyaVarma
    துருவ் விக்ரம் அறிமுக நாயகனாக நடித்த `வர்மா’ படம், இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது.

    அதை தொடர்ந்து படத்தை `ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் எடுக்க திட்டமிட்டு, படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்குகிறார்.



    பிரிட்டிஷ் இந்திய மாடல் அழகி பனிதா சந்து துருவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். படத்தில் நடிகை கதாபாத்திரத்திலேயே பிரியா ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகனுக்கு நண்பனாக வரும் கதாபாத்திரத்தில் `மீசைய முறுக்கு’, `கோலமாவு கோகிலா’ படங்களில் நடித்த யூடியூப் பிரபலம் அன்புதாசன் நடிக்கிறார். ஆன்லைனில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட இவர், அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கார்த்திக் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    துருவ் விக்ரம் நடிப்பில் மீண்டும் உருவாக இருக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்திற்கு தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. #DhruvVikram #Varma #ArjunReddy
    ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் படமானது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா டைரக்டு செய்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ‘வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறியதுடன், ‘வர்மா’ படத்தை வேறு ஒரு டைரக்டரின் இயக்கத்தில் திரும்ப எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். கதாநாயகன் துருவ்வை தவிர, மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரையும் மாற்றப்போவதாகவும் அவர் கூறினார்.



    தற்போது இப்படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ என்று தலைப்பு வைத்து படக்குழுவினர் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதில் நாயகிகளாக பனிதா சந்து, பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். கிரிசாயா இப்படத்தை இயக்குகிறார். ரவி கே சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இ4 நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 
    துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கும் நிலையில், சுமார் 7 வருடங்களுக்கு பிறகு பிரபலம் ஒருவர் இந்த படத்தில் மீண்டும் இணையவிருக்கிறார். #Varma #DhruvVikram
    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.

    வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வர்மா படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

    இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் ரெட்டியின் ஒரிஜினல் கதையில் பாலா சில மாற்றங்கள் செய்ததாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்காமல் முழு படத்தையும் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.



    புதிய வர்மா படத்தில் துருவ் ஜோடியாக நடிக்க வளர்ந்து வரும் பாலிவுட் நடிகை பனிதா சந்து ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.


    இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் வர்மா படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 7ஆம் அறிவு படத்திற்கு பிறகு சுமார் 7 வருடங்களுக்கு பிறகு, ரவி கே.சந்திரன் ஒபப்பந்தமாக தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Varma #DhruvVikram #BanitaSandhu #Girisayya #RaviKChandran

    துருவ் நடிப்பில் ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. #Varma #DhruvVikram
    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.

    வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தி படத்தை வருகிற ஜூன் மாதத்தில் வர்மா படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

    இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் பாலா இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு” என்று கூறினார்.



    அர்ஜுன் ரெட்டியின் ஒரிஜினல் கதையில் பாலா சில மாற்றங்கள் செய்ததாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்காமல் முழு படத்தையும் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. புதிய வர்மா படத்தை இயக்கும்படி இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.



    ஏற்கனவே வர்மா படத்தில் மேகா சவுத்திரி கதாநாயகியாக நடித்து இருந்தார். அவரை மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. #Varma #DhruvVikram #JhanviKapoor #GauthamMenon

    பாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ படத்தை, மீண்டும் துருவ் விக்ரமை வைத்து இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Varma #DhruvVikram
    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், விக்ரம். சராசரி கதாநாயகனாக இருந்த இவரை, ‘சேது’ என்ற படம் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்த படத்தை பாலா இயக்கியிருந்தார். தொடர்ந்து பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படம், இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கி கொடுத்தது.

    அதனால் விக்ரம் தனது மகன் துருவ்வை பாலா டைரக்‌ஷனில், கதாநாயகனாக அறிமுகம் செய்ய விரும்பினார். அதற்கு டைரக்டர் பாலாவும் சம்மதித்தார். இதற்காக ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கினார்கள். தமிழ் படத்துக்கு, ‘வர்மா’ என்று பெயர் சூட்டப்பட்டது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகளும் நிறைவடைந்தன.



    முதல் பிரதியை தயாரிப்பாளரும், படக்குழுவினரும் திரையிட்டு பார்த்தனர். திருப்தியாக இல்லை. அதனால், பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளரும், விக்ரமும் விரும்பவில்லை.

    ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை வேறு ஒரு டைரக்டரை வைத்து மீண்டும் தயாரிப்பது என்ற முடிவுக்கு தயாரிப்பாளர் வந்தார். அதற்கு விக்ரமும் சம்மதித்தார். ‘வர்மா’ படத்தை மறுபடியும் புதிய கூட்டணியுடன் தயாரிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அந்த படத்தை கவுதம் மேனன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதில் துருவ் கதாநாயகனாக நடிப்பார். மற்ற நடிகர்-நடிகைகள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
    வர்மா படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டுள்ளார். #Varma #DhruvVikram #Megha
    சென்னை:

    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

    பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து டுவிட்டரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன் என இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

    படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். #DirectorBala #Tamilcinema #Varmaa
    பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வர்மா படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்த நிலையில், அதற்கான காரணம் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Varmaa #DhruvVikram
    விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளிவந்த தெலுங்கு படம், ‘அர்ஜூன் ரெட்டி’. இந்த படம் தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை கேரளாவை சேர்ந்த ஈ4 எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் முகேஷ் ஆர்.மேத்தா பெற்று இருந்தார்.

    முகேஷும், நடிகர் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அதனால், விக்ரமின் மகனான துருவை வைத்து இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டார். தனக்கு சேது படத்தின் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த பாலா படத்தில் தன் மகனை அறிமுகம் செய்ய வேண்டும் என்பது விக்ரமின் எண்ணம்.



    இதைத் தொடர்ந்து துருவை அறிமுகம் செய்ய பாலாவும் ஒப்புக் கொண்டார். அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரெய்லரும் வெளியானது. அதற்கு வரவேற்பும் கிடைத்தது. படத்தை காதலர் தினமான வரும் 14-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பு சார்பில் படம் கைவிடப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

    சேது படம் மூலம் விக்ரமுக்கு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தவர் இயக்குனர் பாலா. பிதாமகன் படத்தின் மூலம் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தவர். நான் கடவுள் படத்தின் மூலம், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.



    இந்த நிலையில் தயாரிப்பு தரப்பு வேறு இயக்குனரை வைத்து வர்மா படத்தை எடுக்க இருப்பதாக அறிவித்து இருப்பது, தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் சுமார் ரூ.15 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் வீணாகப்போகிறது. தயாரிப்பு தரப்புக்கு ரூ.15 கோடிக்கு மேல் நஷ்டம் ஆகலாம் என்கிறார்கள்.

    இதன் பின்னணி பற்றி படக்குழுவை சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது, ‘முதலில் ரீமேக் படத்தை எடுக்க பாலா விரும்பவே இல்லை. அவரை கட்டாயப்படுத்தி தான் சம்மதிக்க வைத்தார்கள். வர்மா படத்தின் கதையில் பாலா ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தார். அசல் தெலுங்கு பதிப்பில் சில காட்சிகளில் மட்டுமே வரும் வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் வேடத்தை பெரிதாக்கி படம் முழுக்க வருவது போல மாற்றி அமைத்தார்.

    அந்த கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். படம் தொடங்கியபோதே விக்ரமுக்கும், பாலாவுக்கும் செட் ஆகவில்லை. பாலா இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொன்னார். ஆனால் விக்ரம் அதை நிராகரித்து அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் இசையமைப்பாளர் ரதனை ஒப்பந்தம் செய்ய சொன்னதாகவும் தெரிகிறது.



    முழு படத்தையும் பார்த்த விக்ரமுக்கும், அவரது மகன் துருவ்வுக்கும் திருப்தி இல்லை. நெருக்கமான காட்சிகள் அதிகமாக படத்தில் இருந்ததும் இதற்கு காரணம். இதனால் கோபமான துருவ் சினிமாவே வேண்டாம் என்று கூறி அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். இந்த படத்தை ரிலீஸ் செய்தால் துருவ்வுக்கு மோசமான தொடக்கமாக அமையும் என்பதால் தான் விக்ரம் பாலாவின் நட்பை மீறி இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

    படத்தை பார்த்த தயாரிப்பாளர் கதையில் சில மாற்றங்கள் செய்ய கூறி இருக்கிறார். ஆனால் ஒரு காட்சியை கூட மாற்ற மாட்டேன் என்று பாலா கூறிவிட்டார். தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்திய சினிமா வரலாற்றிலேயே முழுமையாக எடுக்கப்பட்ட படத்தை கைவிடுவது முதல் நிகழ்வு. ஆனால் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளரை பாராட்டியே ஆகவேண்டும்’ என்றனர். #Varmaa #DhruvVikram

    பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் `வர்மா' படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் படம் ரிலீசாகாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha
    தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

    பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மேலும் படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். மேலும் வர்மா படத்தை துருவ்வை வைத்தே மீண்டும் முதலில் இருந்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். 

    படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி 2019 ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். 

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha

    நடிகர் விக்ரமின் கட்டுக்கோப்பான உடலமைப்புக்கு நிகராக அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம், தன்னுடைய உடலமைப்பை மாற்றி வருகிறார். #Vikram #DhruvVikram
    நடிகர் விக்ரம் தன்னுடைய உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். தற்போது இவரது நடிப்பில் கடாரம் கொண்டான் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் இவரின் உடலமைப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது இவரது உடலுக்கு நிகராக இவரது மகன் துருவ் விக்ரம் உடலை ஏற்றி வருகிறார்.

    துருவ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விக்ரமின் உடலுக்கு நிகராக உங்கள் உடம்பு உள்ளது என்று கூறி வருகிறார்கள்.



    துருவ் விக்ரம் நடிப்பில் தற்போது ‘வர்மா’ திரைப்படம் உருவாகியுள்ளது. பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வர்மா’ படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார். #Varma #VarmaTrailer
    தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா சவுத்ரி என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். 

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    இப்படம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    ×