என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varma"

    பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்தித்தில் நடித்துள்ள சான்ட்ரா ஏமி, பாலாவை பார்த்து முதலில் பயந்ததாகவும், பின்னர் மிகவும் வசதியாக உணர்ந்ததாகவும் கூறினார். #Varma #SandraAmy
    காற்றின் மொழி படத்தில் பண்பலைத் தொகுப்பாளினியாக நடித்து கவனம் பெற்றவர் சான்ட்ரா ஏமி. அடுத்து அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்மா படத்தை எதிர்பார்த்துள்ளார்.

    அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகும் வர்மா படத்தை பாலா இயக்குகிறார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் சான்ட்ரா நடித்துள்ளார். அவர் பாலா இயக்கத்தில் நடித்த அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 



    “காற்றின் மொழி படத்திற்கு முன்பே வர்மா படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். ஆர்வமுள்ள எந்த நடிகருக்கும் பாலா இயக்கத்தில் நடிப்பது கனவாக இருக்கும். கதாபாத்திர தேர்வு நடைபெற்ற போது கலந்து கொண்டு தேர்வு ஆனேன். எந்த நடிகருக்கும் முதல் நாள் படப்பிடிப்பில் நடிக்கும்போது பதட்டமாக இருக்கும். பாலா மிரட்டுவார் என்று கூறி இருந்தார்கள். வசனம் சரியாக பேசவில்லை என்றாலோ அல்லது சரியாக நடிக்கவில்லை என்றாலோ மட்டும் தான் கோபப்படுவார் என்பதை நான் நடிக்கத் தொடங்கிய பின் புரிந்துகொண்டேன். மிகவும் வசதியாக உணர்ந்தேன்.

    ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்தேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். தேவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். துருவ் விக்ரமுடன் இணைந்து சில காட்சிகளில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார். #Varma #DhruvVIkram #Bala #SandraAmy

    ‘வர்மா’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் துருவ் விக்ரம், திரிஷாவுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும், நான் தூங்கும் போது அவர் கன்னத்தை கிள்ளிச் சென்றதாகவும் கூறியுள்ளார். #DhruvVikram #Trisha
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘வர்மா’ படத்தில் மேகா என்ற மாடல், துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 



    இந்நிலையில், ‘எந்த நடிகையோடு நடிக்க ஆசை?’ என துருவ் விக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிறுவயதில் இருந்தே திரிஷாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால், இதுவரை அவரைச் சந்தித்தது கூட இல்லை. ஒருமுறை பிரிவியூ தியேட்டரில் இருந்தபோது நான் தூங்கிவிட்டேன். அப்போது அவர் வந்து என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றுவிட்டார்” எனத் தெரிவித்தார். #DhruvVikram #Trisha #Varma

    பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் `வர்மா' படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Varma #DhruvVikram #Megha
    தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா சவுத்ரி என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். 

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் கைப்பற்றியிருக்கிறார். படத்தை வருகிற பிப்ரவரியில், காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே `வானோடும் மண்ணோடும்' என்ற பாடல் வரிகள் அடங்கிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


    இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரதன் இசையமைக்க சுகுமார் இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். #Varma #DhruvVikram #Megha

    வரும் காதலர் தினத்தில் ஜி.வி.பிரகாஷின் படமும், துருவ் விக்ரமின் படமும் வெளியாகி மோத இருக்கிறது. #GVPrakash #DhruvVikram
    ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நடித்துள்ள 100 சதவீத காதல் படமும் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் வர்மா படமும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று திரையில் மோத இருக்கின்றன.

    அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தெலுங்கில் வெளியான அந்த படம் தென்னிந்தியத் திரையுலகம் முழுக்க கவனம் பெற்றது.

    ஜி.வி.பிரகாசுடன் ஷாலினி நடித்த 100 சதவீத காதல் படம் தெலுங்கில் வெளியான 100 சதவீதம் காதல் படத்தின் ரீமேக். சந்திரமெளலி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார்.



    காதலர் தினத்தை முன்னிட்டு அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படமும் திரைக்கு வர உள்ளது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
    பாலா இயக்கத்தில் துருவ் - மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் வர்மா படத்தை டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha
    தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். 

    ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதக் நடனத்தில் தேர்ச்சி பெற்ற இவருடைய கேரக்டர் பெயரும் மேகா என்று தகவல் கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே சொந்தப் பெயரில் நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேகா. 

    இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் 17-ம் தேதியுடன் நிறைவுற்றது.



    இதன் டீஸர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தை வருகிற டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Varma #DhruvVikram #Megha

    வர்மா படத்துக்காக தான் பெற்ற முதல் சம்பளத்தை, நடிகர் விக்ரமின் மகன் துருவ் கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியுள்ளார். #Varma #DhruvVikram
    விக்ரம் மகன் துருவ், வர்மா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி அடைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் இது. இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், துருவ் விக்ரமின் தோற்றமும் பேசப்பட்டு வருகிறது.

    இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா மற்றும் துருவ்வை அறிமுகம் செய்து வைக்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் இயக்குநர் பாலா, விக்ரம், துருவ் விக்ரம், மேகா சவுத்ரி, ரைசா வில்சன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.



    இதற்கிடையே, வர்மா படத்தில் நடித்ததற்காக தான் பெற்ற முதல் சம்பளத்தைக் கேரள வெள்ளத்துக்கு அளித்துள்ளார் துருவ். சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாகத் தன் முதல் பட சம்பளத்தைத் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா மற்றும் இணை தயாரிப்பாளர் அனூப்புடன் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அளித்துள்ளார். #Varma #DhruvVikram #KeralaFloodRelief

    பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘வர்மா’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. #Varma #DhruvVikram
    தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார். 

    பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் தொடங்கியது. பின்னர் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட இருக்கின்றனர்.

    இப்படத்தில் துருவ் ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு பிக்பாஸ் புகழ் ரைசா நடனம் ஆடி இருக்கிறார். ரதன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். `குக்கு', `ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் வசனங்களை எழுதியுள்ளார். இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. #Varma #DhruvVikram
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா, பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் படத்தின் இயக்குனர் பொறுமையாகவே வேலை வாங்கினார் என்று கூறியிருக்கிறார். #Raiza
    தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், ரைசா. மாடல் அழகியாக வலம் வந்த இவர், ஹரிஸ் கல்யாணுடன் ஜோடியாக நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இதன் மூலம் திரையுலகில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார், ரைசா. 

    இதன் விளைவு, தான் இயக்கி வரும் ‘வர்மா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ரைசாவை நடிக்க வைத்திருக்கிறார், டைரக்டர் பாலா. இதனால் சந்தோ‌ஷத்தில் திளைத்திருக்கிறார், ரைசா. 



    இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு என்றதும் நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். அதேசமயம் லேசான பயமும் இருந்தது. ஆனால் என்னை பொறுமையாகவே பாலா வேலை வாங்கினார். சிறிய வேடம் என்றாலும் மிகவும் அழுத்தமான வேடத்தில் ‘வர்மா’ படத்தில் நடித்திருக்கிறேன். இது எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை இருக்கிறது’’, என்றார். 
    பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் ‘வர்மா’ படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். #Varma #DhruvVikram
    தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார். 

    பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் துருவ் ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் ஒரு பாடலுக்கு பிக்பாஸ் புகழ் ரைசா நடனம் ஆட இருக்கிறார்.

    இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக ரதன் ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இவர்தான் இசையமைத்திருந்தார்.



    `வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு `குக்கு', `ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் வசனங்களை எழுதுகிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். #Varma #DhruvVikram
    விக்ரம் மகன் துருவ் விக்ரமை இயக்க, விருது இயக்குனர் பாலாவை தொடர்ந்து மற்றொரு விருது இயக்குனரும் அவரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #DhruvVikram
    தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடனத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள புதிய படம் ஒன்றில் துருவ் ஒப்பந்தமாகியுள்ளார். 22 வயதான துருவ் விக்ரமின் தோற்றம் இந்தப் படத்துக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாலேயே அவரைத் தேர்வு செய்ததாகப் படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா தெரிவித்துள்ளார்.



    இந்தப் படத்தில் நிகில், வருண் சந்தேஷ், ராணா டகுபதி, சாய் பல்லவி இணைய உள்ளதாகத் தெலுங்குத் திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வர்மா படத்தின் இயக்குநரான பாலா மற்றும் கம்முலா இருவரும் தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘வர்மா’ படத்தில் பிக்பாஸ் புகழும், தற்போது நடிகையாக இருப்பவரும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார். #Bala #Varma
    தாரைதப்பட்டை படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘வர்மா’. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழில் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயனாக அறிமுகமாகிறார். 

    துருவ் ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிக்பாஸ் புகழ் ரைசா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 



    ரைசா தற்போது ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ’பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா தயாரித்து வரும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
    பாலா இயக்கத்தில் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக உருவாகும் `வர்மா' படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்க பெங்கால் நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Varma #DhruvVikram
    தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார். 

    பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், துருவ் ஜோடியாக நடிக்க வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். முன்னதாக ஷ்ரியா சர்மா, சுப்புலெட்சுமி, ஜான்வி கபூர் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில் துருவ் ஜோடியாகி இருக்கிறார் மேகா.



    `வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு `குக்கு', `ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் வசனங்களை எழுதுகிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். #Varma #DhruvVikram

    ×