என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » varsha
நீங்கள் தேடியது "Varsha"
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி, வீரா, சாந்தினி, வர்ஷா, சுந்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பெட்டிக்கடை' படத்தின் விமர்சனம். #Pettikadai #PettikadaiReview
சாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார்.
அருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.
அருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் `பெட்டிக்கடை' தேவை.
கீதன், வர்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமத்துரை’ எளிய மனிதர்களின் வாழ்வியலை இயல்பு சிதையாமல் பிரதிபலிக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். #Seemathurai
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”.
கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல் வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
“ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும்.
அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட “கர்வம்” ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும் தான் “சீமத்துரை” படத்தின் கதை என்கிறார் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன்.
மேலும், “கிராமப் பின்னணி கொண்ட இப்படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும், எளிய மனிதர்களின் வாழ்வியலை இயல்பு சிதையாமல் பிரதிபலிக்கும்” எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குனர்.
ஜோஸ் ப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர் எழுதியுள்ளனர். D திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, “மேயாதமான்” படத்தின் “தங்கச்சி” பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை, “பிச்சைக்காரன்” படத்தின் படத்தொகுப்பாளரான டி வீர செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை “மரகத நாணயம்” படத்தின் கலை இயக்குனர் என்.கே.ராகுலும் மேற்கொண்டுள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X