என் மலர்
நீங்கள் தேடியது "Varun Dhawan"
- தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
- இவர் தற்போது குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவரி, நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார்.

வருண் தவான் -திரெளபதி முர்மு- சமந்தா
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதையடுத்து 'குஷி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமந்தா நடித்த சிட்டாடல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

சிட்டாடல் படக்குழுவினர்
இந்நிலையில், நடிகை சமந்தா செர்பியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்துள்ளார். இவருடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சிட்டாடல் படக்குழுவினர் இருந்தனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் வருண் தவான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Team Citadel India had the privilege of meeting the Hon'ble President of India, Smt. Droupadi Murmu Ji in Serbia. What an absolute joy and honour to meet you ma'am @presidentofindia ?? pic.twitter.com/OU6J5cD9hy
— VarunDhawan (@Varun_dvn) June 8, 2023
- வருண் தவான் நடித்து வரும் திரைப்படம் ‘பேபி ஜான்’.
- இந்த படத்தை இயக்குனர் அட்லீ தயாரிக்கிறார்.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பேபி ஜான் போஸ்டர்
இந்நிலையில், 'பேபி ஜான்' திரைப்படத்தில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மே மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Hold on tight, the ride is about to get wild. #BabyJohn coming to your nearest theaters on May 31st!@Varun_dvn @Atlee_dir @priyaatlee @GabbiWamiqa @kalees_dir @MuradKhetani #JyotiDeshpande @bindasbhidu @rajpalofficial @sumitaroraa @MusicThaman @jiostudios @aforapple_offcl… pic.twitter.com/AjAraKlM7r
— Keerthy Suresh (@KeerthyOfficial) February 7, 2024
- ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
- விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.
அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.
ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.
ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.
அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.
- கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.
இந்தி திரையுலகிலும் தற்போது அறிமுகமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் விஜய் நடித்து வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக அவர் நடித்த ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர இருக்கிறது. சினிமா மட்டுமின்றி உடல் தகுதி விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டவர் கீர்த்தி சுரேஷ். உடற்பயிற்சி செய்வதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் கீர்த்திசுரேஷ் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தலை கீழாக நின்று யோகாசனம் செய்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கும் பக்கத்தில் அவரின் நாய் குட்டி அழகாக நின்றுக் கொண்டு இருக்கிரது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
- இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்கலில் 'All Eyes On Rafah" 2என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இருத்தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்திற்கு வராமல் போர் தொடுத்து வருகின்றனர்.
நேற்று இஸ்ரேலி டிஃபன்ஸ் ஃபோர்ஸ் ரஃபாபில் உள்ள அகதிகள் முகாமில் ஏவுகனைகளை வீசினர், இந்த தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 45 பேர் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.
இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து 'All Eyes On Rafah" புகைப்படத்தை பகிர்ந்து இந்திய திரையுலக பிரபலங்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆலியா பட், டியா மிர்ஸா, கரீனா கபூர், ரிச்சா, வருண் தவான்,ராஷ்மிகா மந்தனா, திரிஷா, சமந்தா, பார்வதி, துல்கர் சல்மான் போன்றவர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" படத்தை பதிவிட்டு தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
- ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர். 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார். இவர் பிரபல இந்தி இயக்குனர் டேவிட் தவானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு இயக்குனர் கரன் ஜோஹருக்கு உதவி இயக்குனராக பணிப் புரிந்தார். 2012 ஆம் ஆண்டு `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார். பல வெற்றி படங்களில் நடித்த வருண் தவான் ஜனவரி 24 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி வருண் தவான் அப்பா ஆக போகிறார் என்ற செய்தியை இணையத்தில் பதிவிட்டார் . நேற்று வருண் தவான் மற்றும் நடாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வருண் தற்பொழுது அட்லி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
- இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
- இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா நடித்துள்ள சிடாடெல் ஹனி பன்னி (CITADEL HONEY BUNNY) ஹாலிவுட் வெப் தொடர் நவம்பர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ் & டிகே இயக்கியுள்ள இந்த வெப் தொடரின் ட்ரைலர் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது.
ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடரின் யூனிவர்சின் ஒரு அங்கமாக தான் இந்த புதிய சிடாடெல் வெப் தொடர் உருவாகியுள்ளது.
இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'
- திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிகத்துள்ளனர்.
திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'.
- திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிகத்துள்ளனர்.
திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. படத்தின் டேஸ்டர் கட் என அழைக்கப்படும் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்டு தெறி படத்தின் காட்சிகள் இடம் பெற்று டீசர் அமைந்துள்ளது.
தற்பொழுது படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தெறி படத்தின் ரீமேக்கில் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார்.
- பேபி ஜான் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிகத்துள்ளனர்.
இந்தப் படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பேபி ஜான் படத்தின் 'நைன் மடாக்கா' முதல் பாடல் வருகிற 25 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'.
- கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தயரித்துள்ளது.
இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பேபி ஜான் படத்தின் 'நைன் மடாக்கா' மற்றும் பிக்லி பாம் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இதை குறித்து படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்