என் மலர்
நீங்கள் தேடியது "Varun Tej"
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா, தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணையும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். #Suriya
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
சூர்யாவுக்கு ஆந்திராவில் அங்குள்ள கதாநாயகர்களுக்கு சமமான மார்க்கெட் உருவாகி உள்ளது. எனவே கதைகளாக தேர்வு செய்யும்போதே 2 மாநில ரசிகர்களுக்குமான கதைகளை தான் தேர்வு செய்கிறார். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறிய சூர்யாவின் விருப்பம் நிறைவேற இருக்கிறது. வெங்கடேஷ், நாகசைதன்யா, வருண் தேஜ் இணைந்து நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் சூர்யாவும் நடிக்க இருக்கிறார். 20 நிமிடங்கள் வந்தாலும் சூர்யாவுக்கு முக்கியமான வேடம் என்கிறார்கள். படத்தை நாகினா திரிநாத் ராவ் இயக்குகிறார். #Suriya