search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasantha Balan"

    'அங்காடித் தெரு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக தனது முத்திரையை பதித்தவர் வசந்த பாலன். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்ற வசந்தபாலன், சமீபத்தில் அர்ஜுன் தாஸை வைத்து இவர் இயக்கிய அநீதி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

    முதலாளித்துவதை தொடர்ந்து தனது படங்களின் மூலம் எதிர்த்து வரும் வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ஆடுகளம் கிசோர் ஆகியோர் நடிப்பில் 'தலைமைச் செயலகம்' என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. தனது படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வரும் வசந்தபாலன், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இதை இயக்கியுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடர் வரும் மே 17 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வசந்த பாலன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் படங்கள் என்றாலே முதல்வர் கெட்டவர் என்ற கோணத்தில்தான் காட்டப்படுகிறது இதை உடைத்து ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு முதல்வரின் அக சிக்கல்களைப் பேச வேண்டும் என்று நினைத்து இந்த வெப் சீரீஸை இயக்கியுள்ளேன். மக்கள் மீது கொண்டிருக்கும் காதலின் பெயர் தான் நீதி, அந்த நீதியை காப்பாற்றும்போது சில தவறுகள் நடக்கலாம், அதைப்பற்றியே இந்த சீரிஸின் மூலம் பேசியுள்ளேன்.

    மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. தமிழகத்தில் நம்மை 50 ஆண்டுகாலமாக வழி நடத்தி வந்த பெரியாரிய, அம்பேதகரிய, மார்க்சிய கருத்துக்களால் தான் இது சாத்தியமானது. நம் பெயருக்கு பின்னால் சாதி போடாததே ஒரு அரசியல் தான், நீ என்ன சாதி என கேட்காமல் இருப்பதே அரசியல் தான், இதைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கான சூழலை இந்த வெப் சீரிஸ் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார்.
    • இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வெயில் படத்திற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார். கடந்த வருடம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

    இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் இறங்கியுள்ளார். இந்த சீரிஸீன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கிஷோர் மட்டும் தமிழ் குரல் என்ற செய்தித்தாள் வாசிக்கும் படியான புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.

    இந்த சீரிஸிற்கு 'தலைமைச் செயலகம்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

    சீரிஸின் டீசரைப் பார்க்கையில் ஒரு அரசியல் கட்சி தலைவன், ஒரு சம்பவத்தின் நீதிக்காக குற்றங்கள் செய்து, அதனால் மரண தண்டனை வரை செல்கிறது. அது என்ன சம்பவம், என்ன குற்றம் அந்தத் தலைவன் செய்தான் என்பது விரிவாக இந்த சீரிஸ் சொல்வது போல் தெரிகிறது.

    இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அநீதி’.
    • இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அநீதி'. இந்த படத்தில் துஷாரா விஜயன், வனிதா, பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    இந்நிலையில், இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் காளி வெங்கட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திக்குமுக்காடுற அளவிற்கு அநீதி படத்தை கொண்டாடுகிறீர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த வசந்த பாலன் அவர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் ஷங்கருக்கும் என் நன்றி. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு பேராதரவு கிடைத்திருக்கிறது என்று தெரிகிறது. உங்கள் அனைவருக்கும் திருப்பி என்ன கொடுப்பது என்று தெரியவில்லை" என்று பேசினார்.


    • 'மாமன்னன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


    'மாமன்னன்' திரைப்படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வசந்த பாலன் இப்படம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாமன்னன் ஒரு முக்கியமான தனித்துவமான அரசியல் திரைப்படம். இந்த அரசியல் கதையில் நடிக்க தயாரிக்க சம்மதித்த உதயநிதி அவர்கள் பெரிய முன்னெடுப்பு செய்துள்ளார். காட்சிகளில் தன் குற்றவுணர்வை, கையாலாகாத்தனத்தை, காலங்காலமாக அடிவாங்கிய வலியை, அடிமைத் தனத்தை பல்வேறு உடல் மொழிகளில் வெளிபடுத்திய வடிவேலு அவர்கள் தான் திரை முழுக்க நிறைந்து நிற்கிறார்.


    வசந்த பாலன் பதிவு

    மாரியின் பரியேரும் பெருமாள் திரைப்படத்தில் பரியன் தந்தையும் அவமானத்தை சந்திக்கும் இடம் திரையுலகம் பார்க்காத நிஜம். அது போல இந்த திரைபடத்தில் வருகிற கிணற்றில் பள்ளி மாணவர்கள் குளிக்கிற காட்சி, உதய் அவர்களை நாற்காலியில் அமர சொல்கிற காட்சி என பிறப்பால் ஒதுக்கப்படுகிற மனிதர்களின் வலியைத் திரையில் பார்க்கும் போது மெல்ல மெல்ல என் இரவை நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது. நாற்காலி அமர அனுமதி மறுக்கப்படுகிறவர்கள் நாற்காலியில் அமர முயலும் கதையே மாமன்னன். காலம் கொண்டாடும்" என்று பதிவிட்டுள்ளார்.

    'மாமன்னன்' திரைப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இந்திய அளவில் முதலிடத்திலும் உலக அளவில் 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.





    • இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் “அநீதி”.
    • இப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் போன்ற படங்களை இயக்கி திரைத்துறையில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் "அநீதி". இந்த படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.


    அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவான "அநீதி" திரைப்படம் ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் பார்த்த பிரபலங்கள் பலர் படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், "அநீதி" திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது "அநீதி" திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு மாலைமலருக்கு பிரத்யேக பேட்டியளித்தனர்.

    இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "அநீதி". இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.



    இப்படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றது. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் புரொமோஷனுக்காக மாலைமலருக்கு அநீதி படக்குழு சிறப்பு பேட்டியளித்தனர். அப்போது நடிகை துஷாரா விஜயனிடம் சார்ப்பட்டா பரம்பரை மாரியம்மா இந்த படத்துல எந்த மாதிரியான ரோல் பண்ணிருக்காங்க என்று கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த துஷாரா விஜயன், வேற மாரியா ஒன்னு பண்ணியிருக்கேன். நான் பண்ண கதாப்பாத்திரத்துலயே இது ரொம்ப வித்யாசமான கதாப்பாத்திரம். இந்த படம் ஒரு வித்யாசமான கேரக்டரா வந்திருக்கு என்றார்.



    • நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது "அநீதி" திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    அநீதி போஸ்டர்

    இப்படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, "அநீதி" திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது தொடர்பான போஸ்டரை படகுழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    "அநீதி" திரைப்படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி.
    • இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    தமிழில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.



    அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 21-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. 




    இந்நிலையில் 'அநீதி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது, "இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை.



    அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. 'அநீதி' படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். 'அநீதி' திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்" என்றார். 

    • அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி.
    • இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.



    படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. 'அநீதி' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், 'அநீதி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
    ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் அர்ஜூன்தாஸ். இவர் அநீதி என்ற படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துஷாரா விஜயன் இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபால இயக்கியுள்ளார். இதில் வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    அநீதி
    அநீதி

    இப்படத்தை பள்ளி நண்பர்களுடன் இணைந்து வசந்தபாலன் “அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர். கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார். விறுவிறுப்பாக நடைப்பெற்று அநீதி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை அதிகாரப்புர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
    • தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வசந்த பாலன்.
    • இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஜெயில்.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் குறும்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது, "தமிழ் சினிமா ஒரே ஒரு விஷயத்தில் தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. அது நம்மிடம் நிறைய கதாசிரியர்கள், குறிப்பாக ஸ்கிரீன்பிளே எழுத்தாளர்கள் இல்லாததுதான். தமிழ் சினிமாவில் சரிவு ஏற்படுகிறது என்றால், அதற்கு இதுதான் காரணம்.

    மலையாள திரை உலகில் கதாசிரியர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அங்கே கதாசிரியர்களிடம் கதையை முடிவு செய்த பின்பு தான், மம்முட்டி, மோகன்லால் ஆகியோரை தேடி செல்கிறார்கள். அதுபோல இங்குள்ள தயாரிப்பாளர்கள் முதலில் கதாசிரியர்களை கொண்டாட வேண்டும்.


    வசந்த பாலன்

    எப்போது சினிமாவிற்கான புரிதல் கொண்ட கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் அதிகம் உருவாக்கப்படுகிறார்களோ, அப்பொழுது வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெறும். ரசிகர்களால் கொண்டாடப்படும்.

    நான் ஒரு தயாரிப்பாளராக, கதாசிரியர்களை வரவேற்று அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தர தயாராக இருக்கிறேன். தயவுசெய்து எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் தமிழ் சினிமாவுக்கு வாருங்கள்" என்று கூறினார்.

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். 

    முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜா கைப்பற்றி உள்ளார். 

    ஜெயில்

    இந்நிலையில், இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×