என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vasishtar"
- 7 மகரிஷிகள் சிவவழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.
- காஞ்சிபுரத்திலும் சப்தஸ்தான தலங்கள் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் பல இடங்களில் சப்த ஸ்தானம் எனப்படும் ஏழு இடங்களூம், அது தொடர்புடைய ஏழு ஆலயங்களும் இருக்கின்றன. அவற்றில் ஐக்கியமான சப்தஸ்தான தலமாக திருவையாறைச் சுற்றி அமைந்த 7 ஊர்களூம், அதில் அமைந்த ஆலயங்களும் போற்றப்படுகின்றன. திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை, திருபிநய்த்தானம், திருப்பழனம், திருவேதிக்குடி, திருவையாறு ஆகிய இந்த ௭ ஊர்களிலும் சப்தரிஷிகள் எனப்படும் 7 மகரிஷிகள் சிவவழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.
அதேபோல் காஞ்சிபுரத்திலும் சப்த ஸ்தான தலங்கள் இருக்கின்றன. ஒரு முறை பிரம்மதேவன், 'காஞ்சியில் செய்யப்படும் வழிபாடுகளும், தர்மங்களும் பன்மடங்கு பலன் தரக்கூடியது என்று சப்த ரிஷிகளிடம் எடுத்துரைத்தார். அவரது அறிவுரைப்படி சப்த ரிஷிகளான அங்கிரஸ், அத்ரி, காசியபர், குச்சர், கவுதமர், வசிஷ்டர், பிருகு ஆகியோர் காஞ்சிபுரத் தில் உள்ள வியாச சாந்தலீசுவரர் என்ற கோவிலுக்கு அருகில் தனித்தனியாக சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர்.
அந்த சிவலிங்கங்கள், அந்த ரிஷி களின் பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன. அவை அமைந்த இடங்களும் 'சப்த ஸ்தான தலங்கள்' என்று பெயர் பெற்று விளங்குகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.
அங்கீராரீசுவரர் கோவில் (அங்கீரசம்)
காஞ்சிபுரத்தில் உள்ள சிவ சப்தஸ்தான திருத்தலங்களில் முதலாவது கோவிலாக அமைந்திருப்பது தான் அங்கீராரீசுவரர் கோவில், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை பிரதிஷ்டை செய்தவர் அங்கீரச முனிவர். அதனால்தான் இந்த ஆலய இறைவனின் திருப்பெயர், 'அங்கீராரீசுவரர்' என்றானது. இந்த ஆலயத்தில் சப்த ரிஷிகளில் மற்றவர்களான அத்ரி, காசியபர், குச்சர்,பிருகு, கவுதமர், வசிஷ்டர் ஆகியோரும் வழிபாடு செய்திருக்கிறார்கள். இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக சொல்லப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் இடம் அந்த காலத்தில் 'விஷ்ணு காஞ்சி என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள கண்ணப்பன் தெரு புளியந்தோப்பில் சாந்தலீஸ்வரர் கோவில் இருக்கிறது. இதன் அருகில்தான் அங்கிராரீசுவரர் கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் வெங்குடி என்ற ஊர் உள்ளது. இதன் பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்திசையில் சென்றால் கோவிலை அடையலாம்.
அத்திரீசுவரர் கோவில் (அத்திரீசம் - குச்சேசம்)
அத்ரி முனிவரும், குச்சர் முனிவரும் தனித் தனியாக ஒரே இடத்தில் சிவலிங்கங் களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடம் இது. இங்கே ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங் கள் இருக்கின்றன. அத்ரி முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் ஆவுடையாருடனும், குச்சர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் வெறும் பாண வடிவிலும் காணப்படுகின்றன. காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் இந்த ஆலயம். இரண்டாம் மற்றும் மூன்றாம் கோவிலாக அமைந்திருக்கிறது.
இந்த தலம் பற்றிய குறிப்பு களும், காஞ்சி புராணத்தில் தனிப் படலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு தலங்களும் ஒரே இட இடத்தில் அமைந்திருந்தாலும் இங்கே அத்ரி முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமே பிரதானம் என்பதால், இந்த ஆலயம் 'அத்திரீகவரர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் சப்த ரிஷிகளில் மற்றவர் களும் வழிபாடு செய்துள்ளனர். இந்த ஆலயம் அங்கீராரீசுவரர் கோவிலின் அருகாமையிலேயே இருக்கிறது.
காசிபேசுவரர் கோவில் (காசிபேசம்)
காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் 4-வது தலம் இதுவாகும். காசியப முனி வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் இங்கே மூலவராக இருக்கிறது. காசியப முனிவர் காஞ்சியில் தங்கியிருந்து சிவபூஜை செய்ததுடன், சிவனை நோக்கி தியானம் செய்தும், பல தர்ம காரியங்களில் ஈடுபட்டும் இத்தல இறைவனை வழிபாடு செய்திருக்கிறார். சிவலிங்க மூர்த்தம் மட்டுமே உள்ளதாக அறிப்படும் இத்தலம் பற்றிய குறிப்புகளும், காஞ்சி புராணத்தில் காணப்படுகிறது.
காசியப முனிவர் பிரதிஷ்டை செய்து வணங்கியதால், இத்தல மூலவர் 'காசிபேசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். வெங்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்திசையில் சென்றால் வேகவதி ஆற்றங்கரை அம்மன் கோவில் இருக்கும். அந்தக் கோவில் வளாகத்தில் இடதுபுறம் சிறிய கோவிலாக இந்த காசிபேசுவரர் கோவில் இருக்கிறது.
வசிட்டேசுவரர் கோவில் (வசிட்டேசம்)
சப்தஸ்தான தலங் களில் 5-வதாக வைத்து போற்றப்படும் ஆலயம் இது. வசிஷ்டர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இத்தல இறைவன் 'வசிட்டேசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த சிவலிங்கமானது வெடித்துச் சிதறி, பின்னர் வசிஷ்டரின் வழிபாட்டால் மீண்டும் ஒன்று கூடியதாக சொல்லப்படுகிறது. எனவே இத்தல இறைவனுக்கு 'வெடித்து கூடிய வசிட்டேசுவரர்' என்ற பெயரும் உண்டு. இத்தலம் பற்றியும் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் வேகவதி ஆற்றின் கரையில் உள்ள வியாச சாந்தலீசுவரர் கோவிலின் எதிர்புறம் உள்ள குளக்கரையின் தென்புலத்தில் அமைந்திருக்கிறது.
கவுதமேசுவரர் கோவில் (கவுதமேசம்)
காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் கடைசி தலமாகவும், ஏழாவது தலமாகவும் இருப்பது, கவுதமேசுவரர் கோவில் கவுதம முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் என்பதால் இத்தல இறைவனுக்கு 'கவுதமேசுவரர்' என்று பெயர் வந்தது. இந்த ஆலயம் பற்றிய தகவல்களும், காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக காணப்படுகிறது. காஞ்சியின் தென்புலத்தில் உத்திரமேரூர் செல்லும்
சாலையில் அரசு நகர் வெளிங்கப்பட்டரை அருகில் அரச மரத் தெருவில் இந்த ஆலயம் இருக்கிறது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், வேகவதி ஆற்றின் முற்பகுதியிலும் கவுதமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பார்க்கவேசுவரர் கோவில் (பார்க்கவேசம்)
பிருகு முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் உள்ள இந்த ஆல யம், காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் 6-வது தலமாக போற்றப்படுகிறது. பிருகு முனிவர் வழிபட்ட மூர்த்தி என்பதால், இத்தல இறைவன் 'பார்க்க வேசுவரர்' என்றும் 'பார்க்கீசுவரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் பற்றிய குறிப்புகளும், காஞ்சிபுராணத்தில் தனிப் படலமாக சொல்லப்பட்டுள்ளது. காஞ்சியின் தென்புலத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஒரிக்கை அரசு நகர் பகுதியில் இத்தலம் அமைந்திருக்கிறது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் வேகவதி ஆற்றின் அருகில் இந்தக் கோவில் இருக்கிறது.
- தவம் இயற்றினாலும் சத்ரியனால் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது.
- கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிகிறார்.
முன்பு ஒருமுறை சத்ரியரான கவுசிக மன்னனுடைய நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. இதனை போக்க மகரிஷி வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண் வயிற்று பிள்ளையான நந்தினி என்ற பசுவை தன் நாட்டின் பஞ்சம் போக்க வேண்டி இரவல் கேட்கிறார். வசிஷ்டர் இவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். கோபமுற்ற கவுசிகன் அவர் மேல் போர் தொடுத்து தோல்வி அடைகிறார்.
தோல்வியுற்ற கவுசிக மன்னனிடம் வசிஷ்டர், பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு, மந்திரி என்ற பசுக்கள் கட்டுப்படும் எனவே நீர் பிரம்மரிஷியானால் நந்தினி பசுவை தருகிறேன் என்கிறார். மேலும் தவம் இயற்றினாலும் சத்ரியனால் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று உரைக்க, கவுசிகனும் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிகிறார். இதை கண்ட அன்னை சக்தி கவுசிகன் முன் தோன்றி தன கோவிலில் உள்ள விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகும் என்று அறிவித்து மறைகிறாள்.
சக்தியின் வாக்கை ஏற்று நான்கு வேதங்களின் பிறந்தநாள் (பவுர்ணமி) அன்று அவளது ஆலயம் சென்று பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைகிறார். ஆனால் எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன் தலை, இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் ஓதி எரிய வைக்கிறார். தனது உடலையே திரியாக்கி ஒரு நாள் முழுவதும் தனது நாட்டு மக்களுக்காக போராடுவதை கண்ட சக்தி அவரை விசுவாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்குகிறார்.
தனது உடலை திரியாக்கி ஜோதியை மையமாக வைத்து தன் தவத்தின் போது கவுசிக மன்னன் தான் அறிந்த நன்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி உச்சாண்டம் செய்ததால் அதுவும் மந்திரத்திற்காக தன் உடலையே திரியாக்கி உச்சாண்டம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் கவுசிகன் கூறிய இம்மந்திரம் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் இனி வேதியர்கள் ஜோதி சொரூபமாக என்னை நினைத்து உலக நன்மைக்கு பிராத்தனை செய்யலாம் என அருளியதால் அன்று முதல் இன்று வரை நாம் உச்சாண்டம் செய்து பலன் பெறுகிறோம்.
காயத்ரி மந்திரத்திற்கு கட்டுப்பட்டு மனம் இறங்கிய சக்தியை அந்த மந்திரத்தை கொண்டே காயத்ரி தேவி என்று அழைக்கிறோம். சிரவண மாத பவுர்ணமிக்கு மறுநாள் அவர் வரமும் பட்டமும் பெற்றதால் நாமும் அதே நாளில் காயத்ரி மந்திரத்தை உச்சாண்டம் செய்து வணங்குகிறோம். அந்நாளில் இம்மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க பூர்வஜென்ம பாவங்கள் தொலைந்து போகும்.
'காயத்திரி' என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு "காயத்திரி மந்திரம்" என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.
காயத்ரி மந்திரம்:
ஓம் பூர் புவ ஸுவ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
இதை தினசரி ஜெபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜெபிப்பவனை காப்பாற்றுவது என்று பொருள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்