search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veeraragava Perumal temple"

    • முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் காட்சி அளித்தார்.
    • கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை கோவில்குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதேபோல் முத்தங்கி சேவையில் வருகிற 7-ந்தேதி வரை மூலவர் வீரராகவ பெருமாள், கன கவல்லி தாயார் காட்சியளிப்பர்.

    இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதேபோல் நாளையும் மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    • நாளை மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    • 2-ந் தேதி மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

    திருப்பூர்  :

    திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர் திருவிழா இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி இன்று 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6மணிக்கு கிராமசாந்தி அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. நாளை 27-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நாளை முதல் 1-ந்தேதி வரை காலை 10 மணி மற்றும் மாலை 6-30மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

    நாளை 27-ந்தேதி கற்பக விருட்ஷ வாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2-ம் நாளான 28-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) பூத வாகனம், அன்ன வாகனத்திலும், 3-ம் நாளான 29-ந்தேதி(திங்கட்கிழமை) ராவணேஸ்வரர் வாகனம், காமதேனு, சேஷ வாகனத்திலும், 4-ம் நாளான 30-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கற்பக விருட்சம், அதிகார வாகனம், யாழி வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 5-ம் நாளான 31-ந்தேதி(புதன்கிழமை) பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கருட சேவை புறப்பாடு நடக்கிறது.

    6-ம் நாளான 1-ந்தேதி(வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 7-ம் நாள் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3-30மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 5மணியில் இருந்து 6மணிக்குள் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

    8-ம்நாளான 3-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 3-30மணிக்கு பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 9-ம் நாளான 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை பரிவேட்ைட, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 10-ம்நாளான 5-ந்தேதி (திங்கட்கிழமை) தெப்பத்திருவிழா (பெருமாள் கோவில் ) நடக்கிறது.

    11-ம்நாளான 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தரிசனம் , 12-ம்நாளான 7-ந்தேதி (புதன்கிழமை) மஞ்சள் நீரரட்டு விழா, மலர் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 13-ம் நாளான 8-ந்தேதி (வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை காலை 10மணி, மாலை 7மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    விழாவையொட்டி நாளை 27-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை மாைல 6மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்படி நாளை 27-ந்தேதி மாலை 6மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி ஜெயந்தி ஸ்ரீதரின் தெய்வீக பாடல் நிகழ்ச்சி,29-ந்தேதி திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம், 30-ந்தேதி சவிதா ஸ்ரீராமின் நாம சங்கீர்த்தனம், 31-ந்தேதி நவீன் பிரபஞ்ச நடன குழுவின் கொங்கு நாட்டு பாரம்பரிய ஒயில் கும்மி நடனம் நிகழ்ச்சி, 1-ந்தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 2-ந்தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 3-ந்தேதி நரசிம்மர் தரண்டகம் என்ற தலைப்பில் நாட்டிய நாடகம், 4-ந்தேதி வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி, 5-ந்தேதி மணிகண்டனின் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ,6-ந்தேதி தெய்வீக பாடல்கள் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    • வைகாசி விசாகத்தே ர்த்திருவிழா, ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்க உள்ளது.
    • தேர் அலங்கார துணிகளை மாற்றுவது என பல்வேறு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத்தே ர்த்திருவிழா, ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்க உள்ளது. அதற்காக தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன், தேர்த்திருவிழா துவங்குகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மையப்ப ரும், ஸ்ரீவீரராகவப் பெருமாளும், தேர்வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து ஜூன் 2-ந் தேதி ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமிகோவில் தேரோட்டமும், 3-ந் தேதி ஸ்ரீவீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடக்க உள்ளது.

    தேர்த்திருவிழா ஏற்பாடுகள்குறித்த ஆலோசனைகூட்டம் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்தது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.,செல்வராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் சரவணபவன், விழாஏற்பாடுகள் குறித்து விவரித்தார். பல்வேறு அமைப்பினரும், தேர்த்திருவிழா ஏற்பாடு குறித்துபேசினர்.கலை நிகழ்ச்சிஏற்பாடு, தேர்களுக்குபுதிதாக வடக்கயிறு வாங்குவது, தேர் அலங்கார துணிகளை மாற்றுவது என பல்வேறு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    • திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாகபூஜை நடத்தப்பட்டது.
    • யாகபூஜை காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியுடன் தொடங்கியது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாகபூஜை நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் நல்ல நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான பூஜை கடந்த 26-ந் தேதி திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தொடங்கியது. இதில் பிளஸ்-2 மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 3-வது வாரமாக இன்று நடைபெற்ற இந்த யாகபூஜை காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியுடன் தொடங்கியது.

    இந்த பூஜையையொட்டி மாணவ-மாணவிகளின் பெயர் மற்றும் நட்சத்திரங்கள் உச்சரிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட கயிறு, ஹயக்ரீவர் சுலோக அட்டை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ரத்னாங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தர்ர.
    • புரட்டாசி மாதம் மட்டுமே பெருமாளுக்கு இந்த ரத்னாங்கி அலங்காரம் சாற்றப்படுகிறது.

    திருப்பூர் :

    புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சுவாமி ரத்னாங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தர்ர. வருடத்தில் புரட்டாசி மாதம் மட்டுமே பெருமாளுக்கு இந்த ரத்னாங்கி அலங்காரம் சாற்றப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக புரட்டாசி சனிக்கிழமையில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    இந்த வருடம் அனுமதி அளிக்கப்பட்டதால் பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்கள் விளக்கேற்றி துளசி மாலைகளை வழங்கி பெருமாளை வழிபட்டனர்.

    ×