என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » velu prabhakaran
நீங்கள் தேடியது "Velu Prabhakaran"
சி.வி.குமார் இயக்கத்தில் அசோக் - சாய் பிரியங்கா ருத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் விமர்சனம். #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar
கல்லூரியில் படிக்கும் போது அசோக் - சாய் பிரியங்கா ருத் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு தெரிந்தவர் மூலமாக கடத்தல் தொழில் செய்யும் கும்பலிடம் கணக்காளராக வேலைக்கு சேர்கிறார் அசோக்.
இந்த நிலையில், ஒருநாள் அவர்கள் கொடுத்த வேலைக்காக மும்பை சென்று திரும்பும் போது போலீசார் அசோக்கை என்கவுண்டர் செய்கிறார்கள். கணவனை இழந்த சாய் பிரியங்கா, அசோக்கை போலீசார் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன, அதன் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது பற்றி அலசுகிறார்.
பின்னர் அசோக்கை கொலை செய்தவர்களை பழிவாங்க முடிவு செய்கிறார். அதற்காக மும்பையில் இருக்கும் டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். பிரியங்கா மூலமாக சென்னையில் மீண்டும் கடத்தல் தொழிலை ஆரம்பிக்க திட்டமிடும் டேனியல் பாலாஜி, பிரியங்காவுக்கு உதவுகிறார்.
கடைசியில், அசோக் கொலைக்கு காரணமானவர்களை பிரியங்கா பழிவாங்கினாரா? டேனியல் பாலாஜியின் திட்டம் பலித்ததா? என்பதே கேங்ஸ் ஆஃப் மெட்ராஸின் மீதிக்கதை.
காதல், ஆக்ஷன், கோபம் என படத்தின் திரைக்கதையை நகர்த்தும் முக்கிய வேடத்தில் வருகிறார் பிரியங்கா ரூத். டேனியல் பாலாஜியிடம் தொழில் கற்றுக் கொள்ளும் போதும், அதன் பின்னர் செய்யும் கொலைகள் என சிறப்பாக நடித்திருக்கிறார். அசோக் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன் வில்லத்தனத்தில் விளையாடியிருக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தனது காதல் கணவனுக்காக பழிவாங்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சி.வி.குமார். படத்திற்கு கிடைத்த ஏ சான்றிதழுக்கு ஏற்ப படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிரம்பி இருக்கிறது. இதில் இரத்தம் தெறிக்கும் ஒருசில ஆக்ஷன் காட்சிகள் ஒருவித நெருடலை ஏற்படுத்துகிறது. அதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது.
ஹரி டப்யூசியாவின் பின்னணி இசையும், கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவும், மஞ்சள் நிறமான பின்னணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' இரத்தக்களரி. #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar #SaiPriyankaRuth #AshokKumar #DanielBalaji
சி.வி.குமார் இயக்கத்தில் பிரியங்கா ருத், அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் முன்னோட்டம். #GangsofMadras #CVKumar
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்'.
பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள், டைரக்டர் ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசை - ஹரி டஃபுசியா, இசை (OST) - ஷ்யமளங்கன், இசை மேற்பார்வை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - கார்த்திக் கே.தில்லை, படத்தொகுப்பு - ராதாகிருஷ்ணன் தனபால், கலை - விஜய் ஆதிநாதன், சிவா, சண்டைப்பயிற்சி - ஹரி தினேஷ், சவுண்ட் டிசைன் - தாமஸ் குரியன், நடனம் - சாண்டி, நிர்வாக தயாரிப்பு - எஸ்.சிவகுமார், தயாரிப்பு, இயக்கம் - சி.வி.குமார்.
"மாயவன்" திரைப்படத்திற்கு பிறகு சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்" படத்தின் கதைக்கரு.
படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #GangsofMadras #CVKumar
கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீசர்:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் பிரபாகரனாக பாபிசிம்ஹா நடிக்கும் படத்திற்கு `சீறும் புலி' என்று தலைப்பு வைத்துள்ளனர். #SeerumPuli #BobbySimha
தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 4 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.
தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.
சீறும் புலி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.
— Simha (@actorsimha) November 26, 2018
இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று சீறும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பாபி சிம்ஹா, பிரபாகரன் தோற்றத்தில் இருக்கும் அந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #SeerumPuli #VeluPrabhakaran #BobbySimha
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் வேலு பிரபாகரனாக பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார். #VeluPrabhakaran #BobbySimha
தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 3 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.
தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.
இவர் ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தில் இலங்கையில் இருந்து வருபவராக வில்லன் வேடத்தில் நடித்து இருந்தார்.
சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.
இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை. #VeluPrabhakaran #BobbySimha
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X