search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vendhu thanindhathu kaadu"

    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
    • இப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    வெந்து தணிந்தது காடு

    இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர்.


    வெந்து தணிந்தது காடு

    இந்நிலையில், இந்த பாடலின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மல்லிப்பூ' பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இந்த படத்தின் 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.


    வெந்து தணிந்தது காடு

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.


    வெந்து தணிந்தது காடு

    இதில் நடிகர் சிம்பு பேசியதாவது, "ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் நான் சொல்ல வேண்டும். படம் பண்ணிட்டு இருக்கும் போது பல அப்டேட் கேட்கிறீர்கள். உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், படக்குழு ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அதிக வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். தினமும் நீங்கள் ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்கும் பொழுது ஒரு தவறான முடிவு எடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலை.


    வெந்து தணிந்தது காடு

    எங்களுக்கு அதற்கான இடம் கொடுத்தால் தான் நல்ல படங்கள் வரும் அதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் கதாநாயகர்களை தூக்கி மேலே வைப்பார்கள். நான் என் ரசிகர்களை தூக்கி மேலே வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் படம் மட்டுமல்ல எந்த படத்திற்கும் ரொம்ப தொந்தரவு செய்யாதீர்கள் உங்களுக்கு நல்ல படம் கொடுக்க நாங்கள் எல்லாம் உழைத்து கொண்டிருக்கிறோம். இது என்னுடைய 'பத்து தல' இயக்குனர் சொல்ல சொன்னார். அதனால் தான் கூறினேன்" என்று பேசினார்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.


    வெந்து தணிந்தது காடு

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.


    வெந்து தணிந்தது காடு போஸ்டர்

    அதன்படி 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் ஓடிடி நிறுவனம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நடிகர் கூல் சுரேஷ் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
    • இவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர். ஒவ்வொரு திரைப்படத்தின் போதும் சமூக வலைதளங்களுக்கு இவர் அளிக்கும் பேட்டி ரசிகர்களைக் கவர்ந்தது. சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வரை அதை புரொமோட் செய்துள்ளார்.


    கூல் சுரேஷ்

    சமீபத்தில் கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால்,இதை மறுத்து கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர்கள் என்னை எதற்கு தாக்க வேண்டும், அவர்கள்தான் எனக்குப் பாதுகாப்பு. நான் என்ன துரோகம் செய்தேன். கமெண்ட்களில் என்னைப் பற்றி அவதூறாக பேசுகிறீர்கள்.

    சமூக வலைதளங்களில் பிரபலமானாலும் நான் வருமானமின்றி கஷப்படுகிறேன். ரிவியூ பிடிக்கவில்லை என்றால் இனிமேல் வரமாட்டேன். என் தலைவன் சிம்புவிற்காக தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன் அந்த படம் வெளியாகிவிட்டது. நான் ரிவியூ கொடுப்பதால் எனக்கு வருமானம் வரவில்லை.


    கூல் சுரேஷ்

    ரசிகர்கள் என் மீதுள்ள ஆர்வத்தில் காரின் மீது ஏறினார்கள். அதை நான் சரிசெய்துகொள்கிறேன். என் நண்பன் நடிகர் சந்தனம் எனக்கு உதவுவார். எனக்கு தெரிந்த பத்து இயக்குனர்கள் உதவுவார்கள். தயவு செய்து என்னை பத்தி அவதூறாக பேசாதீர்கள். வெந்து தணிந்தது காடு எஸ்டி ஆருக்கு வணக்கத்த போடு என்று கூறி கொண்டே இருப்பேன் என்று பேசினார்.

    • கவுதம் மேனன் இயக்கியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    வெந்து தணிந்தது காடு

    இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே திரைபிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    வெந்து தணிந்தது காடு

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "படத்தை பற்றி நல்ல செய்திகளை கேள்வி படுகிறேன். படம் பார்க்க காத்திருக்கிறேன். படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிம்பு, சூர்யாவின் வாழ்த்துக்கு, "மிக்க நன்றி அண்ணா" என்று பதிவிட்டுள்ளார்.


    • கவுதம் மேனன் இயக்கியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    வெந்து தணிந்தது காடு

    இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர்.


    வெந்து தணிந்தது காடு

    இதையடுத்து, 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பேசிய நடிகர் சிம்பு ''எல்லோரும் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும். அவர் வேற லெவல். படத்துக்கு அவர் தனி புரொமோஷன் செய்துள்ளார். நன்றி கூல் சுரேஷ்'' என்று கூறினார்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.


    வெந்து தணிந்தது காடு

    அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் 'மல்லிப்பூ' பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் தாமரை வரிகளில் மதுஸ்ரீ பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.
    • வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.


    வெந்து தணிந்தது காடு

    அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

    இத்திரைப்படம் செப்டம்பர் 15-ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2-ந் தேதி சென்னை பல்லாவரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும், அதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி இடம்பெறும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது.


    வெந்து தணிந்தது காடு

    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு 'வெந்து தணிந்தது காடு' படக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    ×