என் மலர்
நீங்கள் தேடியது "venki atluri"
- வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
- வெங்கி அட்லூரி சூர்யாவின் 46ஆவது படத்தை இயக்க உள்ளார்
இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வெங்கி அட்லூரி சூர்யாவின் 46ஆவது படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் அண்மையில் பரவியது. அதனை சமீபத்தில் சூர்யா உறுதி செய்தார். இப்படத்தை சித்தாரா என்டெர்டெய்ண்மென்ட் தயாரிக்கவுள்ளது.
இப்படத்திற்கு சூர்யாவிற்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் 85 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையாக உருவாக இருக்கிறது.
- அஜித் குமாரின் குட் பேட் அக்லி வெற்றிகரகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி (GBU) படம் உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியிடம் அடுத்த படம் குறித்து அஜித் குமார் ஆலோசித்தாக தகவல் கசிந்துள்ளது. இதனால் இருவரும் அடுத்த படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெங்கி அட்லூரி சூர்யாவின் 46ஆவது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான முந்தைய வேலைகளில் பிசியாக உள்ளார். அதன்பிறகு அஜித் குமார் உடன் கைக்கோர்ப்பதற்கான திட்டத்தை தொடங்கலாம் எனத் தெரிகிறது.
வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
- இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’.
- இப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.118 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் தனுஷின் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
- தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.
- தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

துல்கர் சல்மான்
இப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார்
இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இணைந்துள்ளதாக படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிவித்துள்ளது. துல்கர் சல்மானுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Welcoming the Enchanting Composer @gvprakash onboard for another BLOCKBUSTER Collaboration ???
— Sithara Entertainments (@SitharaEnts) June 13, 2023
Team #Production24 wishes you a very Happy & musical Birthday! #HBDGVPrakash ?@dulQuer #VenkyAtluri @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas #SrikaraStudios pic.twitter.com/40aOoqFS2S