search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vepery"

    • Zero accident day என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு பிரசாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது.
    • இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்.

    சென்னை:

    சென்னையின் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், Zero accident day என்ற வாசகத்துடன் கூடிய ZAD விழிப்புணர்வு பிரசாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரமானது ஆகஸ்ட் 5 தொடங்கி ஆகஸ்ட் 25-ந்தேதி வரை 20 நாட்களுக்கு நடைபெற்றது.

     

    Zero accident day என்ற வாசகத்துடன் கூடிய ZAD விழிப்புணர்வு பிரசாரம் குறித்து வேப்பேரி டிராபிக் இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,

    சென்னை வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 5.8.2024 முதல் இன்று வரைக்கும் 26.8.2024 வரை சென்னை பெருநகரத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி பல நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நடத்தி இருக்கிறோம்.

    ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது விழிப்புணர்வு செய்து இருக்கிறோம்.

    ஆகஸ்ட் 26-ந்தேதி ZAD (Zero accident day) 20 நாட்கள் விழிப்புணர்வு செய்து இருக்கிறோம்.

    சென்னை பெருநகர மக்கள் அனைவருக்கும் ZAD (ஆக. 26) (Zero accident day) என்று அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறோம்.

    இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்வபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். அவசரமாக செல்ல வேண்டும் என்று ஓவர் ஸ்பீடு செல்லக்கூடாது என்று பல நிகழ்ச்சிகள் நடத்தி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.

    • ஹண்டர்ஸ் சாலையில் டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஹண்டர்ஸ் சாலையில், டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் மாநகர பஸ்கள் மற்றும் வணிக வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள நாராயண குரு சாலை சந்திப்பு முதல் ஜெர்மியா சாலை சந்திப்பு வரையில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சாக்கடை வடிகால் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நேற்று முதல் வருகிற 13-ந் தேதி வரை வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள ஹண்டர்ஸ் சாலை - நாராயணகுரு சாலை சந்திப்பில் இருந்து ஈ.வி.கே. சம்பத் சாலை - ஜெர்மியா சாலை சந்திப்பு வரையிலும் தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

    * ஹண்டர்ஸ் சாலையில் டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் ஜெனரல் காலின்ஸ் சாலை, மெடெக்ஸ் சாலை மற்றும் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

    * ஹண்டர்ஸ் சாலையில், டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் மாநகர பஸ்கள் மற்றும் வணிக வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை மற்றும் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வேப்பேரியில் 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை வேப்பேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

    இது தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பிரேம்குமார், அஜித்குமார், சாமுவேல் ஆகிய 3 பேரும் இவர்களது கூட்டாளிகள் இருவரும் சிக்கினர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் சேர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும், மோட்டார் சைக்கிள்களை திருடி இருப்பதும் தெரிய வந்தது.

    திருடிய செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் கொள்ளையர்கள் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். திருட்டு மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    வேப்பேரி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நகரில் அடிக்கடி வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. சென்னை வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்கள் திருட்டு போயின. இதுதொடர்பான புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டதாக வடபழனி அஜித்குமார், சீனிவாசன், சந்தோஷ், ஏழுமலை ஆகிய 4 பேரை வேப்பேரி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×