என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » veteran journalist
நீங்கள் தேடியது "Veteran Journalist"
குல்தீப் நய்யாரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தினர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #RIPKuldeepNayyar #Modi #PresidentKovind
புதுடெல்லி:
நாட்டின் மிகச்சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த இவர், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடல் நேற்று பிற்பகலில் டெல்லி லோதி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
குல்தீப் நய்யாரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தினர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் குல்தீப் நய்யாரின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்த குல்தீப் நய்யார், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார். பத்திரிகையாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அவர் உருது, ஆங்கில மொழி பத்திரிகைகளில் சிறப்பாக பணியாற்றினார்.
மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் சமூக விடுதலைக்கு போராடிய இவர் இந்தியா-பாகிஸ்தான் அமைதியை எப்போதும் வலியுறுத்தி வந்தார். இவர் இங்கிலாந்துக்கான இந்திய தூதராகவும், மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். #RIPKuldeepNayyar #Modi #PresidentKovind

மூத்த பத்திரிகையாளரும் பிரபல எழுத்தாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 95. #RIPKuldeepNayyar
புதுடெல்லி:
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் 1923-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பிறந்தவர் குல்தீப் நய்யார். பத்திரிகையாளராக தன் பணியைத் தொடங்கிய இவர் எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பிரபலம் ஆனார். குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 'எல்லைகளுக்கு இடையே', 'தூரத்து உறவினர்கள்: துணைக் கண்டத்தின் கதை', 'நேருவுக்குப் பிறகு இந்தியா' மற்றும் 'ஸ்கூப்' போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள்.
இடதுசாரி பார்வை கொண்ட அரசியல் விமர்சகரான இவர் மாநிலங்களைவை உறுப்பினராகவும், ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், 95 வயதான நய்யார், முதுமை சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIPKuldeepNayyar

பிரபல அரசியல் விமர்சகரும் கட்டுரையாளரும், மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யாரை இன்று சந்தித்த அமித்ஷா, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.#AmitShahmetKuldeepNayyar #journalistKuldeepNayyar
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.
இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.
அவ்வகையில், பிரபல அரசியல் விமர்சகரும் கட்டுரையாளரும், மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யாரை இன்று சந்தித்த அமித் ஷா, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை அவரிடம் அளித்த அமித் ஷா, சிறிது நேரம் அவருடன் உரையாற்றினார். #AmitShahmetKuldeepNayyar #journalistKuldeepNayyar #tamilnews

×

X