என் மலர்
நீங்கள் தேடியது "Vetrivel"

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் அடையாறில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அமைச்சர் ஜெயக்குமார் விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீர்வு காணவே ஆடியோ வெளியானது. இதை நாங்கள் வெளியிடவில்லை. பிறந்த குழந்தையின் சான்றிதழை வைத்து முகவரியை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு வந்த தகவலின் அடிப்படையின் நன்கு ஆராய்ந்த பிறகே ஆடியோ வெளியிடப்பட்டதாக அறிகிறேன். அமைச்சர் ஜெயக்குமார் தனது தவறுகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் போல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து புகாரை சந்திக்க வேண்டும். இதில் கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகினால் சம்பந்தப்பட்டவர் விளக்கம் அளிப்பார். ஜெயக்குமார் போல் பல அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Vetrivel #Jayakumar
சென்னை:
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெற்றிவேல், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்தார்.
அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், முதல்வர் பற்றி விமர்சித்த காரணத்துக்காகவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் வெற்றிவேலும் ஒருவர். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி சர்மாநகரில் உள்ள அவரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாநகராட்சி அதிகாரிகள் வெற்றிவேலின் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதன் பின்னர் தொடர்ந்து அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.
இந்த நிலையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் மாடி வழியாக உள்ளே புகுந்தனர்.
மாடியில் உள்ள கதவின் பூட்டை உடைத்து அலுவலகத்தில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தினர். பின்னர் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர். மேஜையை இழுத்துப்போட்டு அதில் அமர்ந்து மது குடித்து கும்மாளமிட்டனர்.
பின்னர் அங்கிருந்த 12 மின்விசிறிகள், 2 கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களை திருடிச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறும்போது, கொள்ளை சம்பவம் ஒரு வாரத்துக்குள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். கொள்ளையர்கள் யார்? என்பதை போலீசார் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றார். #MLAsDisqualificationCase #Vetrivel
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவை ஆர்.கே.நகர் தேர்தலின் போது டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த வீடியோவை ஆணையத்தில் ஒப்படைக்காமல் நிருபர்கள் முன்னிலையில் வெளியிட்டது ஏன் என்று அப்போது ஆணையத்தின் செயலாளராக இருந்த பன்னீர்செல்வம் போலீசில் புகார் கொடுத்தார். உடனே வெற்றிவேல் முன்ஜாமீன் பெற்றதால் கைதாகவில்லை.
அதன் பிறகு அந்த வீடியோ 4 நாட்களில் விசாரணை ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீடியோ ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டு 9 மாதம் ஆன நிலையில் அது மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக ஆணையத்தில் இருந்து தகவல் கசிந்தது.

ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ வெளியிடப்பட்டு 9 மாதம் ஆகிறது. இது மார்பிங் செய்யப்பட்டது என்றால் என்னை கைது செய்திருக்க வேண்டுமே? ஏன் இதுவரை கைது செய்யவில்லை? அந்த வீடியோவை தடயவியல் சோதனைக்கும் அனுப்பவில்லை.
விசாரணை கமிஷன் செயலாளர் கோமளா வீடியோ தொடர்பாக பொய் தகவலை பரப்பி மக்களை திசை திருப்புகிறார். அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேண்டப்பட்டவர்.
இந்த ஆணையம் தான் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. வீடியோ மார்பிங் செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #Vetrivel #JayalalithaaVideo
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரவியது. இதுபற்றி அவரது ஆதரவாளர் வெற்றிவேல் ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரில் கூறி இருப்பதாவது:-
டி.டி.வி.தினகரன் பற்றி தர்ம ரக்ஷன சபாவின் மாநில தலைவரான செல்வம், சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தருவதாகவும், கழிப்பறை கட்டித் தருவதாகவும் பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டார் என்று குறிப்பிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.
இதையடுத்து தர்ம ரக்ஷன சபா மாநில தலைவர் செல்வத்தை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினார்கள்.