என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vetrivelm"

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பற்றி அவதூறாக வெற்றிவேல் பேசியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #OPanneerselvam #Vetrivel

    சென்னை:

    சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராக இருப்பவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. அ.தி.மு.க. பிரமுகரான இவர், சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

    அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பற்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வான வெற்றிவேல் தகாதவார்த்தைகளால் பேசியுள்ளார்.

    இருவரையும் ஒருமையில் மிகவும் தரக்குறைவாக பேசியது லட்சக்கணக்கான தொண்டர்களை வேதனை அடைய செய்துள்ளது. நானும் வேதனை அடைந்துள்ளேன். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

     


    இதனை தொடர்ந்து வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். அவர்மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்தான் வெற்றிவேல் அவதூறு கருத்துக்களை கூறியுள்ளார்.

    எனவே இந்த வி‌ஷயத்தில் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெற்றிவேல் மீது விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #OPanneerselvam #Vetrivel

    ×