என் மலர்
நீங்கள் தேடியது "VHP"
தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளின் மீது சுற்றப்பட்டிருக்கும் சாமி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். #VHPleader #crackerswithgodphotos #SasikantSharma
பெங்களூரு:
காற்றுமாசு மற்றும் ஒலிமாசுவை குறைக்கும் வகையில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, கர்நாடக மாநிலத்தில் இரவு 8 மணி முதல் 10 மணிவரை பட்டாசுகள் வெடிக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளின் மீது சுற்றப்பட்டிருக்கும் சாமி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் சசிகாந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இனி பட்டாசுகளின் மீது சாமி படங்களை ஒட்டி விற்கப்படுவதை அரசு தடை செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இதற்காக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறோம்.
ஏற்கனவே, சாமி படங்களுடன் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள வெடிகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தாங்களாவே முன்வந்து தவிர்க்க வேண்டும் எனவும் சசிகாந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.
பஜ்ரங் தள், இந்து ஜக்ருதி சமிதி ஆகிய அமைப்புகளின் தலைவர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
#VHPleader #crackerswithgodphotos #SasikantSharma

இதுதொடர்பாக பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பட்டாசுகளில் இருந்து வெடித்துச் சிதறிய காகித குப்பைகளில் தெய்வங்களின் படங்கள் இடம்பெற்றிருப்பது இந்து மதத்தின்மீது பக்தி வைத்திருக்கும் மக்களின் மன உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இனி பட்டாசுகளின் மீது சாமி படங்களை ஒட்டி விற்கப்படுவதை அரசு தடை செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இதற்காக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறோம்.
ஏற்கனவே, சாமி படங்களுடன் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள வெடிகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தாங்களாவே முன்வந்து தவிர்க்க வேண்டும் எனவும் சசிகாந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.
பஜ்ரங் தள், இந்து ஜக்ருதி சமிதி ஆகிய அமைப்புகளின் தலைவர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
#VHPleader #crackerswithgodphotos #SasikantSharma
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான விசாரணையை ஜனவரி மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்த நிலையில் ராமர் கோயிலை கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. #Ayodhyahearing #Ayodhyahearingdelay #newLegislativeroute
புதுடெல்லி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அருண் குமார், சுப்ரீம் கோர்ட் வேண்டும் என்றே இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
‘சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி திபக் மிஸ்ரா பதவி காலத்தின்போது, உடுப்பியில் கூடிய சாதுக்கள் மாநாட்டில் அயோத்தி தீர்ப்பு வரும்வரை காத்திருப்போம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், திபக் மிஸ்ரா ஓய்வுபெற்ற பின்னர் பதவி ஏற்றுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் இவ்வழக்கின் விசாரணையை தற்போது ஒத்திவைத்துள்ளார்.
மற்ற வழக்குகளில் பணி நேரம் முடிந்த பின்னரும், இரவு வேளைகளிலும் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நேரம் இருக்கிறது. ஆனால், மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை தவிர்க்கப்படுகிறது.
இதே கருத்தை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவரான அலோக் குமாரும் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், சுப்ரீம் கோர்ட்டின் தாமதத்துக்கு மத்திய இணை மந்திரி கிரிராஜ் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அயோத்தி விவகாரத்தை இந்து -முஸ்லிம்கள் இடையிலான பிரச்சனையாக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளதாக குற்றம்சாட்டிய கிரிராஜ் சிங், ஸ்ரீராமர் இந்துக்கள் மத நம்பிக்கையின் அடையாளம். சுப்ரீம் கோர்ட்டின் தாமதத்தால் இந்துக்கள் பொறுமையை இழந்து வருகின்றனர். அவர்கள் பொறுமை எல்லைமீறி போகும்போது என்ன ஆகுமோ? என்ற அச்சஉணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். #Ayodhyahearing #Ayodhyahearingdelay #newLegislativeroute
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் அருண் குமார், சுப்ரீம் கோர்ட் வேண்டும் என்றே இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
‘சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி திபக் மிஸ்ரா பதவி காலத்தின்போது, உடுப்பியில் கூடிய சாதுக்கள் மாநாட்டில் அயோத்தி தீர்ப்பு வரும்வரை காத்திருப்போம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், திபக் மிஸ்ரா ஓய்வுபெற்ற பின்னர் பதவி ஏற்றுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் இவ்வழக்கின் விசாரணையை தற்போது ஒத்திவைத்துள்ளார்.
மற்ற வழக்குகளில் பணி நேரம் முடிந்த பின்னரும், இரவு வேளைகளிலும் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நேரம் இருக்கிறது. ஆனால், மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை தவிர்க்கப்படுகிறது.
எனவே, சட்டரீதியாக அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்றும் மாற்றுவழியை நாம் தேர்வு செய்தாக வேண்டியுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கின் தீர்ப்புக்காக ஆயுள்காலம் வரை காத்திருக்க முடியாது. எனவே, எதிர்வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது ராமர் பிறந்த பூமியில் மிக சிறப்பான முறையில் அவருக்கு கோவில் கட்டுவதற்காக சட்டம் இயற்றப்பட வேண்டும் என அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

அயோத்தி விவகாரத்தை இந்து -முஸ்லிம்கள் இடையிலான பிரச்சனையாக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளதாக குற்றம்சாட்டிய கிரிராஜ் சிங், ஸ்ரீராமர் இந்துக்கள் மத நம்பிக்கையின் அடையாளம். சுப்ரீம் கோர்ட்டின் தாமதத்தால் இந்துக்கள் பொறுமையை இழந்து வருகின்றனர். அவர்கள் பொறுமை எல்லைமீறி போகும்போது என்ன ஆகுமோ? என்ற அச்சஉணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். #Ayodhyahearing #Ayodhyahearingdelay #newLegislativeroute
ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக, வி.எச்.பி இளைஞரணியினர் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். #SwamiAgnivesh
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் லதிபாராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் சென்று இருந்தார். இன்று காலை தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அவர் வெளியே வந்த போது அங்கு கூடியிருந்த, பா.ஜ.க இளைஞர் அணியினர், ஆர்.எஸ்.எஸ். விஷவ இந்து பரிஷத் அமைப்பினர் அவரை தாக்கினர்
சுவாமி அக்னிவேஷ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் பழங்குடி மக்களை தூண்டிவிடும் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் சுவாமி அக்னிவேசுக்கு தொடர்புள்ளது என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
மாட்டிறைச்சி பற்றி கருத்து தெரிவிக்கும் அவர் சனாதன் தர்மத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் வலதுசாரி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அக்னிவேஷ் அரியானா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அவர் அரசியலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தார்.
மேலும், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு குழுவிலும் இடம் பெற்று இருந்தார். இப்போது அவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொஹாடியா தொடங்கியுள்ள புதிய அமைப்பு அறிவித்துள்ளது.
லக்னோ:
விஷ்ய இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த பிரவீன் தொஹாடியா சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகியதோடு, குஜராத் அரசு தன்னை கொலை செய்ய பார்க்கிறது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதனை அடுத்து, ஹிந்து ஹி ஆகே என்ற புதிய அமைப்பை தொஹாடியா தொடங்கினார்.
இந்நிலையில், இந்த அமைப்பின் ஆக்ரா பிரிவு தலைவர் கோவிந்த் பராஷர் நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சல்மான்கான் தயாரிப்பில் லவ்ராத்திரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நவராத்திரி பண்டிகைக்கு இந்த படம் திரைக்கு வர உள்ளது.
இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த செயல் இருப்பதாக கூறி சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. மேலும், மாநில அரசுகள் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.