search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Video speech"

    • அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக வெளியீடு.
    • தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    தமிழக சட்டப்பரேவையில் பேசிய வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக சட்டப்பேரவையில் தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து எச்.ராஜா அவதூறாக பேசியது தொடர்பான வீடியோ பதிவை ஆய்வு செய்தபிறகே, அவரை கைது செய்வது குறித்து காவல்துறை முடிவு செய்ய உள்ளது. #BJP #Hraja
    சென்னை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மெய்யபுரம் என்ற ஊரில் விநாயகர் சிலை அமைத்திருந்தனர்.

    அந்த சிலையை நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலையில் கரைப்பதற்கு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர்.

    விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பதற்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை திருமயம் தாலுகா பா.ஜ.க.வினர் அழைத்திருந்தனர். இதையொட்டி மெய்யபுரம் அருகே ஒரு இடத்தில் மேடை அமைக்க இந்து அமைப்பினர் போலீசாரிடம் கடிதம் கொடுத்து அனுமதி கேட்டனர்.

    அவர்கள் மேடை அமைக்க அனுமதி கேட்ட பகுதியில் வேறொரு மதத்தினரின் வழிபாட்டுத் தலம் உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்த ஐகோர்ட்டு மாற்று மதத்தினர் இடம் அருகில் விநாயகர் சிலைகளை நிறுவக்கூடாது என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

    கோர்ட்டின் இந்த அறிவுறுத்தலை சுட்டிக்காட்டிய திருமயம் போலீசார், மெய்யபுரம் அருகே பொதுக்கூட்ட மேடை அமைக்க அனுமதி தர இயலாது என்று தெரிவித்தனர். இதனால் இந்து அமைப்பினர் அதிருப்தி அடைந்தனர்.

    இந்த நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடங்கி வைக்க மெய்யபுரம் வந்த எச்.ராஜாவிடம், மேடை அமைப்பதற்கு போலீசார் அனுமதி தராத தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் எச்.ராஜா ஆவேசமானார். இந்த சமயத்தில் குறிப்பிட்ட ஒரு பாதை வழியாக விநாயகர் ஊர்வலம் செல்லப் போவதாக இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அறிவித்தனர்.

    இதற்கு போலீசார் தடை விதித்தனர். விநாயகர் ஊர்வலம் பெரிய வீதி, மெட்ரிக் பள்ளி வழியாகத் தான் நீர்நிலை உள்ள பழந்தினாப்பட்டிக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை அறிந்ததும் ஏற்கனவே ஆவேசமான மனநிலையில் இருந்த எச்.ராஜா போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மாறன், திருமயம் இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் எச்.ராஜா கடும் வாக்குவாதம் செய்தார். அவர் பேசுகையில், “போலீஸ் டி.ஜி.பி. வீட்டிலேயே சி.பி.ஐ. சோதனை நடக்கிறது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அதைப் பார்த்த உடனேயே யூனிபார்மை கழற்றி விட்டு வீட்டுக்கு போய் இருக்க வேண்டாமா?” என்றார்.

    அதற்கு போலீசார், “தவறான தகவலை சொல்லாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டனர். என்றாலும் எச்.ராஜா தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் மேலும் கூறுகையில், “மேடை அமைக்க அனுமதி தராதது ஏன்? இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் நானும் லஞ்சம் தருகிறேன்” என்றார்.

    போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டதை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். செல்போனிலும் சிலர் பதிவு செய்தனர். அந்த காட்சிகள் நாடு முழுவதும் வைரலாகப் பரவியது. இதைத் தொடர்ந்து எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

    இதற்கிடையே எச்.ராஜா, “அந்த வீடியோவில் இருப்பது என் குரல் இல்லை. யாரோ என்னைப் போல் பேசியுள்ளனர். நான் அப்படி பேசவில்லை. போலீசாரையும், கோர்ட்டையும் மிரட்டும் தொனியில் நான் பேசவில்லை. அந்த வீடியோ காட்சிகள் எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளது. எனக்கு எதிராக யாரோ சிலர் திட்டமிட்டு இதை செய்துள்ளனர்” என்று விளக்கம் அளித்தார்.

    என்றாலும் எச்.ராஜா மீது திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் புகார் அளித்தார். மொத்தம் 18 பேர் மீது குற்றம் சுமத்தி அவர் புகார் கொடுத்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து திருமயம் போலீசார் நேற்று மதியம் 3 மணியளவில் எச்.ராஜா மற்றும் மெய்யபுரம் கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணியை சேர்ந்த கணேசன், ஆர்.எஸ்.எஸ். தென்மண்டல செய்தி தொடர்பாளர் சூரிய நாராயணன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஜெயம் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகி வடிவேலு, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், அக்னி பாலா, சொக்கலிங்கம், வைத்திலிங்கம், ராதா கிருஷ்ணன், ஜெயராஜ், ரமேஷ், சரவணன், குமரன், தங்க வேலு, பெருமாள், செல்வராஜ், ரத்தினம் ஆகிய 18 பேர்மீதும் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பொதுமக்கள் அமைதிக்கு குந்தம் விளைவித்தல், தடையை மீறுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அசிங்கமாக பேசுதல், சட்டவிரோத மிரட்டல், அவமதிப்பு, பிற மதத்தினர் மனம் புண்படும் வகையில் பேசுதல் என இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 143, 188, 153 (ஏ), 290, 294 (பி), 353, 505 (1)பி, 505 (1)சி ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் அவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் 5 போலீசார் கொண்ட ஒரு தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 5 போலீசார் கொண்ட மற்றொரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


    இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நேற்று நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை எச்.ராஜா தொடங்கி வைத்தார். அப்போது தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த அவர், அங்கிருந்து மன்னார் குடி சென்று விட்டார். அதன் பிறகு அவரை போலீசார் தொடர்பு கொண்ட போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    எச்.ராஜாவின் சொந்த ஊர் சிவகங்கை ஆகும். இதனால் அவர் அங்கு சென்றிருக்கலாம் என்று எண்ணிய போலீசார் சிவகங்கைக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து அவரது வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர்.

    எச்.ராஜாவையும், அவரை விழாவுக்கு அழைத்தவர்களையும் பிடிக்க புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எச்.ராஜா தலைமறைவாகி உள்ளது பா.ஜ.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே எச்.ராஜா உடனடியாக கைது செய்யப்படுவாரா? என்று தமிழக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    மெய்யபுரம் ஊர் அருகே எச்.ராஜாவும் போலீசாரும் பேசிக் கொள்ளும் சம்பவத்தை 2 கோணங்களில் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். ஒரு வீடியோ காட்சி மிக அருகில் நின்று பதிவு செய்யப்பட்டதாகும். மற்றொன்று சற்று தொலைவில் நின்று பதிவு செய்யப்பட்டதாகும்.

    அந்த வீடியோ காட்சிகளில் வரும் குரல் தன்னுடையது இல்லை என்று எச்.ராஜா கூறி இருக்கிறார். மேலும் வீடியோ பதிவு எடிட் செய்து பரப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    எனவே வைரலாக பரவியுள்ள அந்த வீடியோ பதிவு காட்சிகளை நாங்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த பதிவில் உள்ள குரல் எச்.ராஜா பேசியதா என்பதை உறுதிப்படுத்த, செல்போன் மற்றும் வீடியோ பதிவுகளை தடயவியல் துறைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். இன்றே கோர்ட்டு அனுமதி பெற்று அவை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு விடும்.

    தடயவியல் துறையினர் அந்த காட்சிகளை பரிசோதனை செய்வார்கள். பொதுக்கூட்ட மேடைகளில் அவர் பேசிய பேச்சுக்களையும், தற்போதைய பதிவு காட்சிகளையும் ஒப்பிட்டு பரிசோதனை செய்யப்படும். அந்த சோதனை முடிவு எங்களிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.

    தடயவியல் துறை அறிக்கை வந்த பிறகே, போலீசாரிடம் வாக்குவாதம் செய்த எச். ராஜா போலீசாரையும், கோர்ட்டையும் தரக்குறைவாக பேசினாரா? என்பது தெரிய வரும். அதன் அடிப்படையில் எச்.ராஜாவை கைது செய்து நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அந்த உயர் போலீஸ் அதிகாரி கூறினார். இதன் மூலம் எச்.ராஜா உடனடியாக கைது செய்யப் பட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. #BJP #Hraja
    ×