என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "viduthalai sigapi"
- பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனரான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
- இதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை அபிராமபுரத்தில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. அதன்பின்னர் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனரும், கவிஞருமான விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி விடுதலை சிகப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடவுளை அவமதிக்கும் வகையில் தாம் பேசவில்லை என்றும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு போலியாக அளிக்கப்பட்ட புகாரில் காவல் துறை தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு கே.ஜி. திலகவதி முன்பு விசாரணைக்கு வந்த போது காவல் துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.