என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vidya pratheep
நீங்கள் தேடியது "Vidya Pratheep"
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம்.
‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரித்துள்ள படம் ‘தடம்’.
இதில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள். சோனியா அகர்வால், யோகி பாபு, பெஃப்சி விஜயன், மீரா கதிரவன், சாம்ஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - எஸ்.கோபிநாத், இசை - அருண்ராஜ், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், பாடலாசிரியர் - ஏக்நாத், மதன் கார்க்கி, ஒலிப்பதிவாளர் - டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு - அழகியகூத்தன்.எஸ், ஒலிக்கலவை - கருண் பிரசாத், ரெஞ்ஜித் வேணுகோபால், கலை - ஏ.அமரன், சண்டை - அன்பறிவ், ஸ்டண்ட் சில்வா, எழுத்து, இயக்கம் - மகிழ் திருமேனி
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.
நான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் அவர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தார்.
படம் மார்ச் 1-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep #SmruthiVenkat
தடம் டிரைலர்:
அருண் விஜய் நடிப்பில் தடம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தில் நாயகியின் உதட்டை கடிக்கவில்லை என்று அருண்விஜய் கூறியுள்ளார். #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep
தடையற தாக்க, மீகாமன் படங்களை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தடம். அருண் விஜய் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் என நான்கு கதாநாயகிகள்.
ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் தயாரித்துள்ளார். இந்த படம் பற்றி மகிழ்திருமேனி பேசும்போது ‘தடையற தாக்க என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அந்த படத்துக்கு பின்னர் 2-வது முறையாக அருண்விஜய்யுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு இயக்குனரின் கதாநாயகன். அவர் கேரியரில் இந்த படமும் மறக்க முடியாத தடத்தை பதிக்கும். செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி என் மனதை பெரிதாக பாதித்து படமாக உருவாகி இருக்கிறது’ என்றார்.
அருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.
நான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் அவர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தார். #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep
அருண் விஜய் பேசிய வீடியோ:
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப் - வித்யா பிரதீப் - ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி இருக்கும் `தடம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Thadam #ArunVijay
மணிரத்னம் இயக்கிய `செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் `தடம்', `சாஹோ', `அக்னிச் சிறகுகள்', `பாக்ஸர்' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
இதில் `தடம்' படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே அருண் விஜய்யை வைத்து `தடையறத் தாக்க' படத்தை இயக்கியவர். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
Happy Republic Day! With all ur blessings #Thadam from February 22nd..🙏 #InvestigativeThriller#TTcombo#BasedOnTrueEvents#ThadamFromFeb22nd#SundarArumugam@inder3kumar#MagizhThirumeni@gopinathdop@arunrajmusic@saregamaglobal@onlynikil@silvastunt@soniya_agg@iYogiBabupic.twitter.com/aDnlpTAqZ2
— ArunVijay (@arunvijayno1) January 26, 2019
ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அருண் ராஜ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Thadam #ArunVijay
கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா - வித்யா பிரதீப் நடிப்பில் வெளியாகி இருக்கும் `களரி' படத்தின் விமர்சனம். #KalariReview #Krishna #VidyaPradeep
கிருஷ்ணா கேரளவில் தமிழர் வாழும் பகுதியான வாத்துருதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். குடிகார தந்தையின் கொடுமையால் சிறு வயதில் இருந்தே பய நோய்க்கு ஆளாகிவிடுகிறார். இதனாலேயே சண்டை நடக்கும் இடங்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பார். தன்னை அடிக்க வருபவர்களை பார்த்து நடுங்கும் சுபாவம் கொண்டவர். ஆனால் அவரது தங்கை சம்யுக்தாவோ தன் அண்ணணுக்கு நேர் எதிராக பிரச்சனைகளை கண்டு கலங்காமல் அதை நிற்க கூடியவர்.
அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டு சண்டை போட்டுவிடுவார். கிருஷ்ணா சென்று பேசி அதனை தீர்த்து வைத்துவிட்டு வருவார். கிருஷ்ணாவுக்கு தன் தங்கை சம்யுக்தாவை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது லட்சியம்.
ஆனால் குடிகார தந்தை எம்.எஸ்.பாஸ்கரால், வரும் வரன் எல்லாம் விட்டுப்போகிறது. இந்த நிலையில் விஷ்ணுவை காதலிக்கிறார் சம்யுக்தா. பெண் கேட்டு வரும் அவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
உள்ளூர் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷிடம் வேலை பார்ப்பவருக்கு சம்யுக்தா மீது காதல் ஏற்பட, எம்.எஸ்.பாஸ்கருக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து, சம்யுக்தாவை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்துவிடுகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சம்யுக்தா, அவளது காதலன் விஷ்ணுவுடன் சேர்ந்து சுற்றுவதை கிருஷ்ணா பார்த்து விடுகிறார். மேலும் தனது தங்கை கர்ப்பமாக இருப்பதும் தெரிய வருகிறது.
கடைசியில் சம்யுக்தாவின் வாழ்க்கை என்ன ஆனது? கிருஷ்ணா தனது கோழைத்தனத்தில் இருந்து விடுபட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கிருஷ்ணாவுக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள வேடம். தங்கை மீது பாசம், அப்பா மீது வெறுப்பு, பழி வாங்கும்போது ஆக்ரோஷம் என்று நிறைவாகவே செய்திருக்கிறார். அவரது காதலி வித்யா பிரதீப்புக்கு அதிகம் வேலை இல்லை. வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். விஷ்ணு தனது நடிப்பின் மூலம் அனைரையும் கவர்கிறார்.
தங்கையாக வரும் சம்யுக்தா பாசத்தை பொழிகிறார். ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு தங்கச்சி அறிமுகம். எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெயப்பிரகாஷ், பாண்டி, சென்ட்ராயன் என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
கோழையாக இருக்கும் ஒருவன் தங்கைக்காக பழி வாங்க எடுக்கும் அவதாரமாக படத்தை இயக்கியிருக்கிறார் கிரண் சந்த். திரைக்கதையில் எந்த வித திருப்பமும் இல்லாமல் செல்கிறது படம். கிருஷ்ணாவின் கோழைத்தனம் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் பார்த்து சலித்து போன கதை என்பதால் அடுத்தடுத்த காட்சியை எளிதில் யூகிக்க முடிகிறது. படம் கேரளாவில் உருவாகி இருந்தாலும் ரொம்பவும் மலையாள வாசனை இல்லை. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் களரி மனம் கவர்ந்து இருக்கும்.
வி.வி.பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். குருதேவின் ஒளிப்பதிவில் கேரளாவின் தமிழர் வாழும் பகுதி அழகாக காட்டப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் `களரி' நன்றாக கிளறியிருக்கலாம். #KalariReview #Krishna #VidyaPradeep
கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் நடிப்பில் இளைஞனின் வாழ்க்கை போராட்டமாக உருவாகியிருக்கும் ‘களரி’ படத்தின் முன்னோட்டம். #Kalari #Krishna #VidyaPradeep
நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரிப்பில் உருவவாகியிருக்கும் படம் ‘களரி’.
கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம். எஸ். பாஸ்கர், ஜெய பிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், படத்தொகுப்பு - பிரபாகர், இசை - வி.வி. பிரசன்னா, கலை - நந்தன், சண்டைபயிற்சி - ஸ்டன்னர் ஷாம், நடனம் - ராஜூ பாஸ்கர், கல்சாமணி, தயாரிப்பு - செனித் கெலோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கிரண்சந்த்.
படம் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது,
‘களரி’ என்றால் தற்காப்புகலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்க்களம் என்பது தான் பொருள். அதை மையப்படுத்தி தான் இந்த தலைப்பு இருக்கிறது.
கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞராக நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் உள்ள தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத்தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைவரையும் கவரும் வகையில் ‘களரி’ உருவாகியிருக்கிறது என்றார். படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Kalari #Krishna #VidyaPradeep
களரி படத்தின் டிரைலர்:
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X