என் மலர்
நீங்கள் தேடியது "Vihsal"
விஷாலின் இரும்புத்திரை மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் திட்டமிட்டு நடந்ததா என்று தமிழ் சினிமாவில் சர்ச்சை பேச்சு அடிபடுகிறது. #IAK #Irumbuthirai
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. அப்படி மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தத்தை பெரும்பான்மையானோர் ஆதரித்தாலும் சில எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.
அப்படி எழுந்த எதிர்ப்புக்குரல்களில் அருள்நிதியும் ஒருவர். ‘வேலை நிறுத்தம் செய்யாமலேயே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். இதற்காகவா உங்களை பதவியில் அமர வைத்தோம்?’ என்று நேரடியாக விமர்சித்தார்.

நாளை (வெள்ளிக்கிழமை) விஷால், அருள்நிதி நடித்த படங்கள் நேரடியாக மோது கின்றன. ஜனவரி முதல் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்ட விஷாலின் இரும்புத்திரை படமும், அருள்நிதி நடிப்பில் உருவான இரவுக்கு ஆயிரம் கண்கள் படமும் வெளியாகின்றன. இது எதேச்சையாக நிகழ்ந்ததா? இல்லை திட்டமிட்டு இருவரும் வெளியிடுகிறார்களா? என்ற சர்ச்சை தமிழ் சினிமாவில் ஓடுகிறது. #IAK #Irumbuthirai