என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vijay 69"

    • நடிகர் விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat) திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat). லியோ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இந்தபடத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.


    எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


    • விஜய்யின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 22- ந்தேதி இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
    • ஏப்ரல் 14 - ந் தேதி தமிழ் புத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும்.இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    கோட் படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட 2 வேடத்தில் நடிக்கிறார்.மேலும் கடந்த மாதம் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.




    இந்நிலையில் கடந்த வாரம் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் துபாய் சென்றார். 'கோட்' படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

    இந்நிலையில் விஜயின் 69 -வது படத்தை எச்.வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படம் குறித்து புது அப்டேட் வெளியாகி உள்ளது. விஜய்யின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 22- ந்தேதி இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.



    மேலும் இந்த ஆண்டுக்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடித்து விட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 - ந் தேதி தமிழ் புத்தாண்டில் தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அனுபம் கெர் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
    • கங்கனா ரணாவத் இயக்கியுள்ள ‘எமர்ஜென்சி’ படத்திலும் நடித்து உள்ளார்.

    பாலிவுட் இயக்குநர் அக்ஷய் ராய் இயக்கத்தில் அனுபம் கெர், சங்கி பாண்டே, வ்ரிஜேஷ் ஹிர்ஜி, மிஹிர் அஹுஜா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தான் 'விஜய் 69'. இது நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்சில் நேற்று வெளியாகி உள்ளது.

    69 வயதான கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார். விஜய் என்ற 69 வயது முதியவருக்கு சைக்கிளிங் போட்டியின் மேல் அதீத ஆர்வம் இருக்கிறது. அவருக்கு அந்த தடகள விளையாட்டு எந்தளவுக்கு ஃபேவரைட், 69 வயது முதியவரின் கனவு நனவானதா என்பதுதான் இந்த `விஜய் 69' திரைப்படத்தின் கதை. விஜய் என்ற முதியவருக்கு வயது 69 என்பதால்தான் இத்திரைப்படத்திற்கு `விஜய் 69' எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.



    நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக அசத்தி வரும் அனுபம் கெர் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 2022-ம் ஆண்டு வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. கங்கனா ரணாவத் இயக்கியுள்ள 'எமர்ஜென்சி' படத்திலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது
    • 'தளபதி 69' படம் இந்த வருடம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என்று கூறப்பட்டது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "தளபதி 69" என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.

    இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்துக்கு 'நாளைய தீர்ப்பு' என பெயர் வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு (1992 ) என்பதால் சென்டிமெண்டாக அந்த பெயரை விஜய் ஓகே செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த அக்டோபரில் தொடங்கிய "தளபதி 69" முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஏப்ரலில் படப்பிடிப்பு நிறைவடையும்.

    இந்நிலையில் தற்போது தளபதி 69 அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக'தளபதி 69' படம் இந்த வருடம் அக்டோபரில் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

     

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ள நிலையில் இந்த 69 படம் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

    எனவே 2026 பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்தால் அதற்கடுத்த 3 மாதத்தில் வர உள்ள தேர்தலுக்கு விஜய்க்கு நல்ல ரீச் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடே நாளை மறுநாள் குடியரசு தினத்தன்று படத்தின் அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×