என் மலர்
நீங்கள் தேடியது "vijay devarkonda"
- தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
- விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவு சென்றது தவறா? என்று நடிகை ராஷ்மிகா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்', விஜய் ஜோடியாக 'வாரிசு' படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கும்படி வற்புறுத்தினர். நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாகவும், அவருடன் மாலத்தீவுக்கு சென்று வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில், "சமீபகாலமாக சமூக வலைதளங்களில் என்மீது அவதூறு செய்வது அதிகமாகிவிட்டது. சிறு வயது முதலே ஹாஸ்டலில் தங்கி படித்தேன். பள்ளியில் அதிகமாக யாரோடும் சேரமாட்டேன். அதனால் நிறைய பேர் எனக்கு திமிர் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். அறையில் தனியாக உட்கார்ந்து அழுத நாட்கள் கூட உண்டு.
வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. இந்த சிறிய பிரச்சினைக்கு நீ இப்படி இடிந்து போய்விட்டால் எப்படி என்று அம்மா சொன்ன வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தன. ஒரு எல்லை வரை காத்திருப்பேன். எல்லை தாண்டினால் யாராக இருந்தாலும் சரி எதிர்த்து பதிலடி கொடுப்பேன். மாலத்தீவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் சென்றீர்களாமே? அவருடன் காதலில் இருக்கிறீர்களா? இப்படி எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். விஜய் தேவரகொண்டா எனது நண்பர். அவரோடு 'டூர்' சென்றால் தவறு என்ன?'' என்றார்.
- நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பட்டுள்ளது.
சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார்
- மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. 'நுவ்விலா' படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு சினிமா துறையில் விஜய் தேவரகொண்டா அறிமுகமானாலும். 2016 ஆம் ஆண்டு வெளியான 'பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் இவரை மக்கள் அங்கீகரிக்க ஆரம்பித்தார்கள்.
இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதற்கு அடுத்து 2017 ஆம் ஆண்டு விஜயதேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அர்ஜூன் ரெட்டி புகழ் உலகமெங்கும் பரவியது. விஜய் தேவரகொண்டாவை ஒரு ரக்கட் பாய்-க்கு முன்னுதாரணமாக வைத்து இருந்தனர். அர்ஜூன் ரெட்டி படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.
பின் அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் , கெமிஸ்டிரியும் மிக அழகாக அமைந்து இருக்கும். பின் 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். இந்த படம் மக்களிடையெ எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.
இந்நிலையில் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார். மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கீதா கோவிந்தத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன், பரசுராம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி எப்படி வெற்றி அடைந்ததோ அதே போல் மிருணாள் தாகுர் ஜோடியும் வெற்றி பெறும் என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.




#E4Entertainment press release @proyuvraaj@sri50@E4Emovies@sooriaruna@Poffactiopic.twitter.com/cCAi0JbSNN
— MUKESH RATILAL MEHTA (@e4echennai) February 7, 2019


We are very elated to announce that we are releasing the much awaited movie " #Varma " in Tamilnadu, directed by #Bala sir & starring the Young Champ #DhruvVikram in lead!@e4echennai#SFFreleasesVARMApic.twitter.com/bMjwPTpQ3S
— Sakthi Film Factory (@SF2_official) December 27, 2018





