என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Mallya"

    சமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. #VijayMallya #NiravModi #EnforcementDirectorate
    புதுடெல்லி:

    தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள்தான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், 36 தொழிலதிபர்கள் சமீப காலங்களில் தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான ஆயுத தளவாட தரகர் சூசன் மோகன் குப்தா என்பவரின் ஜாமீன் மனு மீது டெல்லி தனிக்கோர்ட்டில் நேற்று நடந்த விவாதத்தின்போது, இத்தகவலை தெரிவித்தது.



    துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ராஜீவ் சக்சேனா அளித்த தகவலின் பேரில், இந்த ஊழலில் சூசன் மோகன் குப்தாவின் தொடர்பு தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    அவரது ஜாமீன் மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குப்தாவின் வக்கீல், குப்தா சமூகத்துடன் ஆழமாக பின்னி பிணைந்தவர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்குமாறு வலியுறுத்தினார்.

    அந்த வாதத்தை அமலாக்கத்துறையின் அரசு சிறப்பு வக்கீல்கள் டி.பி.சிங், என்.கே.மட்டா ஆகியோர் நிராகரித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, ஸ்டெர்லிங் நிறுவனத்தின் சந்தேசரா சகோதரர்கள் ஆகியோரும் சமூகத்துடன் பின்னி பிணைந்தவர்கள்தான். இருப்பினும், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். சமீப காலங்களில், இதுபோன்று 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளனர். இவரும் தப்ப வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #VijayMallya #NiravModi #EnforcementDirectorate
    இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளார். #VijayMallya
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பு குறித்த விவரம் இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உள்துறை செயலாளர் சஜித் ஜாவித்தும் விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி வழங்கினார். 

    இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா தாக்கல் செய்தார். அம்மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, புதிதாக மனு தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், விஜய் மல்லையா புதுப்பித்தல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனு, உரிய நேரத்தில் வாய்மொழி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று ஐகோர்ட்டு அதிகாரி ஒருவர் கூறினார். வாய்மொழி விசாரணை அடிப்படையில், மனுவை முழுமையான விசாரணைக்கு அனுப்புவது பற்றி நீதிபதி முடிவு செய்வார். #VijayMallya 
    பிரிட்டனில் இருந்து தன்னை நாடு கடத்த தடை விதிக்கக் கோரி தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.



    இந்த உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்தது. இதனால், மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.  #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
    மும்பை சிறையில் நிரவ் மோடி, மல்லையாவை ஒரே அறையில் அடைப்பீர்களா என லண்டன் நீதிபதி இளகிய மனதுடன் கேள்வி கேட்டார். #NiravModi #VijayMallya
    லண்டன்:

    பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி, சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் அவரது ஜாமீன் மனு 2-வது முறையாக நேற்று முன்தினமும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, இந்தியா சார்பில் ஆஜரான கிரவுண் சட்டப்பணிகள் குழு வக்கீல்களிடம் பேசிய நீதிபதி எம்மா அர்பத்னோட், நிரவ் மோடியை நாடு கடத்தினால் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த வக்கீல், ‘ஏற்கனவே விஜய் மல்லையாவுக்காக தயார் செய்யப்பட்டு இருக்கும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார்’ என்று கூறினார். உடனே நீதிபதி, ‘மல்லையாவுக்காக தயாராகும் சிறையின் வீடியோவை ஏற்கனவே பார்த்தோம். அதில் இடமும் இருந்தது. இருவரையும் ஒரே சிறையிலா அடைப்பீர்கள்?’ என இளகிய மனதுடன் கேட்டார்.

    முன்னதாக, நிரவ்மோடிக்கு வயதான பெற்றோர் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயிலும் மகன் இருப்பதாகவும், அத்துடன் அவர் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருவதாகவும் கோர்ட்டில் கூறிய அவரது வக்கீல் கிளேர் மோண்ட்கோமெரி, எனவே அவர்களை பராமரிப்பதற்காக நிரவ் மோடியை ஜாமீனில் விட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனாலும் நீதிபதி அவரது வாதத்தை ஏற்கவில்லை.

    இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே அதை முன்வைத்து இந்த வாதத்தை நிரவ் மோடி தரப்பு எடுத்து வைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NiravModi #VijayMallya
    லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவுக்கு இங்குள்ள மது ஆலையின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பொருளாதார அமலாக்கத்துறை 1008 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளது. #Mallyashares #UBHLshares
    புதுடெல்லி:

    இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டது.

    இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன. 

    விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்ற விசாரணையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.

    இதற்கிடையில், கருப்புப் பணப் பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் விஜய் மல்லையா குழுமம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சொந்தமான குழுமங்களை சேர்ந்த சுமார் 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். 

    அவருக்கு கடன் அளித்த சில வங்கிகள் கூட்டாக தொடர்ந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சில சொத்துகளை ஏலம் விடுவதற்கும் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.



    அவ்வகையில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைட்டட் பிரியூவரீஸ் மது ஆலையில் அவருக்கு சொந்தமான 74 லட்சத்து 4 ஆயிரத்து 932 பங்குகளை விற்பனை செய்து பணத்தை பெற்றுக்கொள்ள பொருளாதார அமலாக்கத்துறைக்கு கருப்புப்பணப் பரிமாற்ற தடுப்பு நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி அனுமதி அளித்தது. 

    இதனைதொடர்ந்து, தனியார் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த பங்கு பத்திரங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் உள்ள கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் இன்று அவற்றை விற்பனை செய்ததன் மூலம் ஆயிரத்து எட்டு கோடி ரூபாய் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக இருக்கும் மேலும் பல பங்குகள் அடுத்த சில நாட்களில் விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர். #Mallyashares #UBHLshares
    ஏராளமான ஆதாரங்கள் இருப்பதால் விஜய்மல்லையாவுக்கு முன்னதாகவே நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வந்து வர திட்டமிடப்பட்டுள்ளது. #NiravModi
    லண்டன்:

    மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகில் கோக்‌ஷி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடியை மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்கள்.

    இதில் நிரவ்மோடி சில மாதங்களாக பல நாடுகளுக்கு சென்று தலைமறைவாக இருந்தார்.

    கடைசியாக இங்கிலாந்து வந்த அவர் லண்டனில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர மத்திய அரசு முயற்சித்தது. இதற்கான சட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

    அவருக்கு லண்டன் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதை ஏற்று அவர் ஆஜர் ஆகவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவின்படி அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

    அவர் உடனடியாக விடுவிக்கும்படி கோர்ட்டில் ஜாமீன் கேட்டார். ஆனால் நீதிபதி ஜாமீனில் விடுவிக்க மறுத்து விட்டார். 26-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரை முறைப்படி நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான சட்ட நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன. நிரவ்மோடி முறைகேடு செய்ததற்கான பல ஆதாரங்கள் இந்தியா தரப்பில் இருந்து இங்கிலாந்திடம் கொடுக்கப்பட்டுள்ளன.

    நிரவ்மோடி மீது சி.பி.ஐ., அமலாக்க பிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த 2 அமைப்புகளுமே ஏராளமான மோசடி ஆதாரங்களை திரட்டி உள்ளன. அதைவைத்து நிரவ்மோடியை எளிதாக இந்தியா கொண்டு வந்து விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

    இதே போன்று மோசடி செய்து லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர முயற்சி நடந்தது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை இந்தியா கொண்டு வருவதற்கு தாமதமாகி வருகிறது.

    ஆனால் நிரவ் மோடியை பொறுத்தவரை ஏராளமான ஆதாரங்கள் இருப்பதால் விஜய்மல்லையாவுக்கு முன்னதாகவே நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கின்றனர்.

    இதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து எடுக்கும். எனவே 6 மாத காலத்துக்குள் நிரவ் மோடி இந்தியா கொண்டு வரப்பட வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #NiravModi
    இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையாவின் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு பிரிட்டன் நாட்டின் உள்துறை மந்திரி சாஜித் ஜாவெத் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக முறையீடு செய்ய விஜய் மல்லையாவக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையாவின் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின்படி அவர் மேல் முறையீட்டு வழக்கு தொடர்வதற்கு கோர்ட்  அனுமதி அளிக்குமா? அல்லது, அவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தொடர்பாக பரிசீலிக்கும் ‘மனுக்களுக்கான நீதிபதி’யின் (judge on papers) ஆய்வுக்காக விஜய் மல்லையாவின் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால் தனது கோரிக்கை தொடர்பாக அவர் மீண்டும் ஒருமுறை சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இம்மனுவின் மீது விஜய் மல்லையாவின் வழக்கறிஞரும், அரசுதரப்பு வழக்கறிஞரின் வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் இறுதி முடிவு எட்டப்படும்.

    அப்படி இல்லாமல், ஆரம்பகட்டத்திலேயே விஜய் மல்லையாவின் மனு லண்டன் ஐகோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டால், விசாரணை நீதிபதி யார்? என்பதை அறிவித்து, முதல் விசாரணைக்கான தேதி குறிப்பிடுவதற்கே சில மாதங்கள் ஆகலாம்.

    பின்னர், வழக்கு நடந்து தீர்ப்பு வெளியானாலும், இருதரப்பினருமே தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் பீக் தல்வாருக்கும், தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கும் தொடர்பு உள்ளதாக டெல்லி கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு தரப்பில் கூறப்பட்டது. #DeepakTalwar #VijayMallya
    புதுடெல்லி:

    ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிநவீன அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்குவதற்கு இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

    முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



    இதில் இடைத்தரகராக செயல்பட்டவர் என கூறப்படுகிற தீபக் தல்வார் துயாயில் இருந்து நாடு கடத்தி வரப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறார்.

    நேற்று அவர் டெல்லி தனிக்கோர்ட்டில் நீதிபதி எஸ்.எஸ். மான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கும், பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன்கள் வாங்கி விட்டு லண்டனுக்கு தப்பிவிட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கும் தொடர்பு உள்ளதாக அமலாக்கப்பிரிவு தரப்பில் கூறப்பட்டது.

    மேலும், வெளிநாட்டில் உள்ள தல்வாரின் மகன் வரும் 11-ந்தேதி ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருடன் வைத்து தல்வாரை விசாரிக்க வேண்டி உள்ளதாகவும் கூறி, தல்வாரின் அமலாக்கப்பிரிவு காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

    இதையடுத்து அவரது அமலாக்கப்பிரிவு காவலை 12-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #DeepakTalwar #VijayMallya
    இங்கிலாந்து அரசின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார். இதனால் அவரை நாடு கடத்துவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. #VijayMallya
    லண்டன்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 63), இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன.

    அவரை நாடு கடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, அவரை நாடு கடத்த கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி உத்தரவிட்டது.

    மேலும், அந்த உத்தரவு, முறைப்படி இங்கிலாந்து அரசுக்கு (உள்துறை மந்திரி சஜித் ஜாவித்துக்கு) அனுப்பி வைக்கப்பட்டது.

    அதை இங்கிலாந்து உள்துறை மந்திரி சஜித் ஜாவித் பரிசீலித்து, விஜய் மல்லையாவை நாடு கடத்தும் கோர்ட்டு உத்தரவுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். இதை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உறுதி செய்தது.

    இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 4-ந் தேதி முதல் 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா அறிவித்தார்.

    இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மேல்முறையீடு செய்யும் எனது விருப்பத்தை தெரிவித்தேன். உள்துறை மந்திரியின் முடிவுக்கு முன் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. இப்போது மேல்முறை செய்யும் நடவடிக்கையை எடுப்பேன்” என கூறி உள்ளார்.

    எனவே அவர் இங்கிலாந்து ஐகோர்ட்டில் விரைவில் மேல்முறையீடு செய்கிறார்.

    இதனால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
     #VijayMallya
    வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. #VijayMallya #SpecialPMLACourt
    புதுடெல்லி:

    தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், அவரை நாடுகடத்தவும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அந்நாட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பையில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. 

    இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டுச் சென்ற மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்தார். பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கவும் மறுத்துவிட்டார். #VijayMallya #SpecialPMLACourt
    இங்கிலாந்து கோர்ட்டில் விஜய் மல்லையா மீது 1.145 பில்லியன் பவுண்ட் திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. #VijayMallya #UKHighCourt #Bankruptcy
    லண்டன்:

    இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பிச்செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 62), இங்கிலாந்துக்கு தப்பி ஓட்டம் பிடித்தார்.

    அவரை இங்கே நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த வாரம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் அவர் மீது இங்கிலாந்து கோர்ட்டில் 1.145 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.10 ஆயிரத்து 260 கோடி) திவால் வழக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையையும் சந்திக்க வேண்டிய நெருக்கடியில் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

    இதுபற்றி பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்புக்காக லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள டி.எல்.டி.எல்.எல்.பி. சட்ட நிறுவனத்தின் பங்குதாரரான பால் கெயில் கூறும்போது, “இந்திய வங்கிகள் சார்பில் விஜய் மல்லையா மீது கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி திவால் வழக்கு தாக்கல் செய்து இருப்பதை உறுதி செய்கிறோம்” என குறிப்பிட்டார்.

    இந்த வழக்கு லண்டன் ஐகோர்ட்டில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #VijayMallya #UKHighCourt #Bankruptcy
    விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம் என்று லண்டனில் உள்ள ஜைவாலா என்ற சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சாரோஷ் ஜைவாலா கூறினார். #VijayMallya #VijayMallyaextradition
    லண்டன்:

    விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு பற்றி லண்டன் நகரில் உள்ள ஜைவாலா என்ற சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சாரோஷ் ஜைவாலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், “இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. எனினும் அதுவரை அவரை கைது செய்ய முடியாது. அவர் தொடர்ந்து ஜாமீனிலேயே இருப்பார். ஐகோர்ட்டு உத்தரவு விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தாலும் கூட அவரால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும். அப்போது இந்த வழக்கு விசாரணை மேலும் 6 மாதங்கள் வரை நீடிக்கும். எனவே விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம்” என்றார்.



    இந்தநிலையில் தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மேல் முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது. எனினும் தனது அடுத்த திட்டம் என்ன என்பதை அவர் இதுவரை உறுதி செய்யவில்லை. #VijayMallya #VijayMallyaextradition
    ×